Singer : Unni krishnan

Music by : Siva

Male : Antha vaanukku rendu dheepangal
Avai sooriya chanthirarae
En vaazhvukku rendu dheepangal
En thaaiyodu thanthaiyarae

Male : Antha vaanin dheepam rendum
Ilai endraal
Intha mannil uyirgal illaiyae
En paasa dheepam rendum
Illai endraal
En vaazhvil oliyum illaiyae
Oru thaai thanthai polae
Ulagil uravillaiyae

Male : Thaai thaanae…ae….ae…
Anbukku aadhaaram
Thanthai thaanae….ae….ae….
Arivukku aadhaaram

Male : Antha vaanukku rendu dheepangal
Avai sooriya chanthirarae

Male : Nooru dheivangal ondraaga koodi
Thaaikku poojaigal seiga
Imaya malaigalum yezhu kadalgalum
Thanthai naamamae solga

Male : Ivar kobangal naanum paarthathillai
Oru sudu sollai kooda kettathillai
Oru yezhai thaai pol ulagil selvamillai

Male : Thaai thaanae…ae….ae…
Anbukku aadhaaram
Thanthai thaanae….ae….ae….
Arivukku aadhaaram

Male : Antha vaanukku rendu dheepangal
Avai sooriya chanthirarae

Male : Thanthai kaaladi thaayin thiruvadi
Nalla maganukku koyil
Anbin mugavari enna enbathai
Kandukolgiren thaayil

Male : Naan uravendra dheepam
Yetri veippen
Adhil uyir endra ennai
Ootri veippen
Naan endrum kannil iruvarai
Sumanthiruppen

Male : Thaai thaanae…ae….ae…
Anbukku aadhaaram
Thanthai thaanae….ae….ae….
Arivukku aadhaaram

பாடகர் : உன்னி கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : சிவா

ஆண் : அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்
என் தாயோடு தந்தையரே

ஆண் : அந்த வானின் தீபம் ரெண்டும்
இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும்
இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே
உலகில் உறவில்லையே

ஆண் : தாய்தானே…..
அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே….
அறிவுக்கு ஆதாரம்

ஆண் : அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே..

ஆண் : நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்கு பூஜைகள் செய்க
இமய மலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க

ஆண் : இவர் கோபங்கள்
நானும் பார்த்ததில்லை
ஒரு சுடுசொல்லைக் கூட
கேட்டதில்லை
ஒரு ஏழை தாய்போல்
உலகில் செல்வமில்லை…

ஆண் : தாய்தானே……
அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே……
அறிவுக்கு ஆதாரம்

ஆண் : அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே…

ஆண் : தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதைக்
கண்டுகொள்கிறேன் தாயில்

ஆண் : நான் உறவென்ற தீபம்
ஏற்றிவைப்பேன்
அதில் உயிர் என்ற எண்ணெய்
ஊற்றிவைப்பேன்
நான் என்றும் கண்ணில்
இருவரை சுமந்திருப்பேன்

ஆண் : தாய்தானே……
அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே……
அறிவுக்கு ஆதாரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here