Singer : P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Female : Andhapura raani avalukku oru raja
Endha puram paarthaalum ilayamaeni roja

Female : Andhapura raani avalukku oru raja
Endha puram paarthaalum ilayamaeni roja

Female : Panneeril thaan kulippaal
Pattaadai uduthiruppaal
Pallaakkil vazhi nadappaal
Panjanaiyil thaan midhippaal

Female : {Andhipattu raaja
Sandhikkindra velai
Mandhirathil aada veippaal
Than mannanai
Manjathilae aadhairippaal…} (2)

Female : Aaaa..aaa..aa..aa..

Female : Iravu pagal theriyaamal
Vaazhdhirundha kiligal
Thirai pottu pesiyadho
Pala nooru kadhaigal

Female : Arasanakku raaniyidam
Aayiram suvaigal
Adukkadukkaai solli vandhaal
Athanaiyum kalaigal

Female : Aththai pettra pennaa
Maaman pettra kannaa
Aththai pettra pennaa
Maaman pettra kannaa
Aanaalum yen neenga
Vandheenga onnaa

Female : {Aththai pettra pennaa
Maaman pettra kannaa
Aanaalum yen neenga
Vandheenga onnaa} (2)

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அந்தப்புர ராணி அவளுக்கொரு ராஜா
எந்தப்புறம் பார்த்தாலும் இளையமேனி ரோஜா

பெண் : அந்தப்புர ராணி அவளுக்கொரு ராஜா
எந்தப்புறம் பார்த்தாலும் இளையமேனி ரோஜா

பெண் : பன்னீரில் தான் குளிப்பாள்
பட்டாடை உடுத்திருப்பாள்
பல்லாக்கில் வழி நடப்பாள்
பஞ்சணையில் தான் மிதப்பாள்……

பெண் : {அந்திப்பட்டு ராஜா
சந்திக்கின்ற வேளை
மந்திரத்தில் ஆட வைப்பாள்
தன் மன்னனை
மஞ்சத்திலே ஆதரிப்பாள்…} (2)

பெண் : ஆஆஆஅ….

பெண் : இரவு பகல் தெரியாமல்
வாழ்ந்திருந்த கிளிகள்
திரைப் போட்டு பேசியதோ
பல நூறு கதைகள்

பெண் : அரசனுக்கு ராணியிடம்
ஆயிரம் சுவைகள்
அடுக்கடுக்காய் சொல்லி வந்தாள்
அத்தனையும் கலைகள்

பெண் : அத்தை பெற்ற பெண்ணா
மாமன் பெற்ற கண்ணா
அத்தை பெற்ற பெண்ணா
மாமன் பெற்ற கண்ணா
ஆனாலும் ஏன் நீங்க வந்தீங்க ஒண்ணா……( 3 )


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here