Singer : Pushpavanam Kuppuswamy

Music by : Ilayaraja

Male : Appan veetu soththai pola
Anubavikka paakureegha
Aththanaikkum poi kanakku
Ezhuthi ezhuthi kaatureegha

Male : Appan veetu soththai pola
Anubavikka paakureegha
Aththanaikkum poi kanakku
Ezhuthi ezhuthi kaatureegha

Male : Thuppu ketta pozhappu idhu
Thappu senjae vaazhureegha
Ekkuthappa kelvi ketkka
Aalillainu nenaikkureegha

Male : Roadu poda othukki vechadha
Veetukunnu pathukureegha
Naatu nilai marandhu
Unga paatukkuthaan alaiyureegha

Male : Naayi padura paadu
Namma naadu padudhu paaru
Vottu pottadhu ooru
Ungala thooki poduvadhu yaaru

Male : Hydher ali kaalathula
Potta roadu maaralaiyae
Eththanaiyo katchi vandhum
Enga kora theeralaiyae

Male : Kundukuli onna renda
Kanakkedukka mudiyalaiyae
Tenderukku vittuputta
Kelvi ketka vazhi illaiyae

Male : Kuththam kurai solla vanthaa
Ezhaiya thaan yesureenga
Maththapadi mandhiri vanthaa
Thaareduthu poosureegha

Male : Thooki podudhu roadu
Atha maathi poduvadhaaru
Karbini ponnunga paadu
Paththu maasa kanakka
Theekuthu roadu

Male : Yaaru potta roadu
Namma sarkar potta roadu
Yaaru potta roadu
Namma sarkar potta roadu

பாடகர் : புஷ்பவனம் குப்புச்சாமி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அப்பன் வீட்டு சொத்தை போல
அனுபவிக்க பாக்குறீக
அத்தனைக்கும் பொய் கணக்கு
எழுதி எழுதி காட்டுறீக

ஆண் : அப்பன் வீட்டு சொத்தை போல
அனுபவிக்க பாக்குறீக
அத்தனைக்கும் பொய் கணக்கு
எழுதி எழுதி காட்டுறீக

ஆண் : துப்பு கெட்ட பொழப்பு இது
தப்பு செஞ்சே வாழுறீக
எக்கு தப்பா கேள்வி கேட்க
ஆளில்லைன்னு நெனைக்கிறீக

ஆண் : ரோடு போட ஒதுக்கி வெச்சத
வீட்டுக்குன்னு பதுக்குறீக
நாட்டு நிலை மறந்து
உங்க பாட்டுக்குத்தான் அலையுறீக

ஆண் : நாயி படுற பாடு
நம்ம நாடு படுது பாரு
ஓட்டு போட்டது ஊரு
உங்கள தூக்கி போடுவது யாரு

ஆண் : ஹைதர் அலி காலத்துல
போட்ட ரோடு மாறலையே
எத்தனையோ கட்சி வந்தும்
எங்க கொறை தீரலையே

ஆண் : குண்டு குழி ஒண்ணா ரெண்டா
கணக்கெடுக்க முடியலையே
டெண்டருக்கு விட்டுப்புட்டா
கேள்வி கேட்க வழியில்லையே

ஆண் : குத்தம் கொறை சொல்ல வந்தா
ஏழையை தான் ஏசுறீங்க
மத்தபடி மந்திரி வந்தா
தாறேடுத்து பூசுறீக

ஆண் : தூக்கி போடுது ரோடு
அத மாத்தி போடுவதாரு
கர்ப்பிணி பொண்ணுங்க பாடு
பத்து மாச கணக்க தீக்குது ரோடு

ஆண் : யாரு போட்ட ரோடு நம்ம
சர்க்கார் போட்ட ரோடு
யாரு போட்ட ரோடு நம்ம
சர்க்கார் போட்ட ரோடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here