Singers : T. M. Soundararajan and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Arai koduththaal theriyum
Oru arai koduththaal theriyum
Ivan adakkamenna pazhakkamenna
Mayakkamenna magimai enna
Orr arai koduththaal theriyum

Male : Oru arai koduththaal theriyum
Ivan adakkamenna pazhakkamenna
Mayakkamenna magimai enna
Orr arai koduththaal theriyum

Female : Antha arai palliyaraiyaaga irnthaal
Antha arai palliyaraiyaaga irunthaal
Intha arai kooda angu inbam tharumae
Naan enna sonnaal aadavarukku kobam varumo
Naan enna sonnaal aadavarukku kobam varumo
Adhai sonnean iniyaavathu mogam varumo

Male : Ilamaiyil chandhiran
Valimaiyil archunan
Vaalibam enbathu kelviyil
Maaththiram puriyaathammaa

Male : Oru arai koduththaal theriyum
Ivan adakkamenna pazhakkamenna
Mayakkamenna magimai enna
Orr arai koduththaal theriyum

Female : Naanam undu
Achcham undu paavai enakku
Naanamindri ketpathoru kadhal kirukku
Nanamindri ketpathoru kadhal kirukku
Naanam undu
Achcham undu paavai enakku
Naanamindri ketpathoru kadhal kirukku
Nanamindri ketpathoru kadhal kirukku

Male : Naan alli magal polirukkaa aasai kondaen
Adhanaalae archunanukku kobam koduththaen

Male : Idhuvarai pothumaa manavarai vendumaa
Innoru arai undu
Ennathu enbathai naan sollavaa
Naan sollavaa naan sollavaa sollavaa

Male : Antha arai palliyaraiyaaga irunthaal
Vanthavarai inbamendru vaangi kollumae
Orr udalundu kaaviyaththil
Nee athai kondaai
Idhu koodalukku vaasamendru naan adhai kandaen
Orr udalundu kaaviyaththil
Nee athai kondaai
Idhu koodalukku vaasamendru naan adhai kandaen

Female : Aa……aah….haa….aa….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அறைக் கொடுத்தால் தெரியும்
ஒரு அறைக் கொடுத்தால் தெரியும்
இவன் அடக்கமென்ன பழக்கமென்ன
மயக்கமென்ன மகிமை என்ன
ஓர் அறைக் கொடுத்தால் தெரியும்

ஆண் : ஒரு அறைக் கொடுத்தால் தெரியும்
இவன் அடக்கமென்ன பழக்கமென்ன
மயக்கமென்ன மகிமை என்ன
ஓர் அறைக் கொடுத்தால் தெரியும்

பெண் : அந்த அறை பள்ளியறையாக இருந்தால்
அந்த அறை பள்ளியறையாக இருந்தால்
இந்த அறைக் கூட அங்கு இன்பம் தருமே
நான் என்ன சொன்னால் ஆடவருக்கு கோபம் வருமோ
நான் என்ன சொன்னால் ஆடவருக்கு கோபம் வருமோ
அதைச் சொன்னேன் இனியாவது மோகம் வருமோ

ஆண் : இளமையில் சந்திரன்
வலிமையில் அர்ச்சுனன்
வாலிபம் என்பது கேள்வியில்
மாத்திரம் புரியாதம்மா

ஆண் : ஒரு அறைக் கொடுத்தால் தெரியும்
இவன் அடக்கமென்ன பழக்கமென்ன
மயக்கமென்ன மகிமை என்ன
ஓர் அறைக் கொடுத்தால் தெரியும்

பெண் : நாணம் உண்டு
அச்சம் உண்டு பாவை எனக்கு
நாணமின்றி கேட்பதொரு காதல் கிறுக்கு
நாணம் உண்டு
அச்சம் உண்டு பாவை எனக்கு
நாணமின்றி கேட்பதொரு காதல் கிறுக்கு

ஆண் : நான் அல்லி மகள் போலிருக்க ஆசைக் கொண்டேன்
அதனாலே அர்ச்சுனனுக்குக் கோபம் கொடுத்தேன்

ஆண் : இதுவரை போதுமா மணவறை வேண்டுமா
இன்னொரு அறை உண்டு
என்னது என்பதை நான் சொல்லவா
நான் சொல்லவா நான் சொல்லவா சொல்லவா

ஆண் : அந்த அறை பள்ளியறையாக இருந்தால்
வந்தவரை இன்பமென்று வாங்கிக் கொள்ளுமே
ஓர் ஊடலுண்டு காவியத்தில்
நீ அதைக் கொண்டாய்
இது கூடலுக்கு வாசமென்று நான் அதைக் கண்டேன்
ஓர் ஊடலுண்டு காவியத்தில்
நீ அதைக் கொண்டாய்
இது கூடலுக்கு வாசமென்று நான் அதைக் கண்டேன்

பெண் : ஆ………ஆஹ….ஹா…….ஆ………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here