Singer : Madhava Benthi
Music by : Ghantasala
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Male : Astathikkilum soozhum mattattra kirithorum
Angengum en kodi parakka vendum
Aagaaya mudhal bhuvana paathaalam varai ennai
Adi panindhu engum poojikka vendum
Male : Pattatthin vendharum pala kodi maandharum
Panivodu en kattalaiyai yerkka vendum
Bhagirangamaagavae kadathgaja vaazhi ena
Parivodu asurar pottri pugazha vendum
Male : Naanae ivvulaginai aala vendum
Naanae pon nadhiyaavum adaiya vendum
Naanae en uttraarukku udhaviya perumaiyin
Nanmaiyai immaiyil kaana vendum
பாடகர் : மாதவா பென்தி
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்
ஆண் : அஷ்டதிக்கிலும் சூழும் மட்டற்ற கிரிதோறும்
அங்கெங்கும் என் கொடி பறக்க வேண்டும்
ஆகாய முதல் புவன பாதாளம் வரை என்னை
அடிப் பணிந்து எங்கும் பூஜிக்க வேண்டும்
ஆண் : பட்டத்தின் வேந்தரும் பல கோடி மாந்தரும்
பணிவோடு என் கட்டளையை ஏற்கவேண்டும்
பகிரங்கமாகவே கடோத்கஜ வாழீ என
பரிவோடு அசுரர் போற்றிப் புகழ வேண்டும்
ஆண் : நானே இவ்வுலகினை ஆள வேண்டும்
நானே பொன் நிதி யாவும் அடைய வேண்டும்
நானே என் உற்றாருக்கு உதவிய பெருமையின்
நன்மையை இம்மையில் காண வேண்டும்……!