Singers : A. L. Ragavan and P. Susheela

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Vaali

Female : Neram maalai neram
Nenjam mayangum nenjam
Athaan athaan athaan humm

Female : Athaan endren muthu muthaaga
Athaan endren muthu muthaaga
Alli kondaai kattu kattaga
Ammmanum pen maanum
Ondrodu ondraanom

Male : Neela pattodum
Nettri pottodum
Paruvam kondaadum paadhi kannoram
Paruvam kondaadum paadhi kannoram

Male : Athaan endren muthu muthaaga
Alli kondaai kattu kattaga
Ammmanum pen maanum
Ondrodu ondraanom

Male : Geetha inba kanavondru
Naanumkanden
Poniramaana andhi maalai neram
Megam konjum malai sigaram
Angu poochudum silaiyaaga nindraai anbe
Poomaalai saramaaga vandhen angae
Poochudum silaiyaaga nindraai anbe
Poomaalai saramaaga vandhen angae

Male : Pechillai moochillai paarvaiyillai
Pesa endren yaar endraai athaan endren
Female : Maname endren maraven endraai
Arivae endren urave endraai

Female : Athaan endren muthu muthaaga
Alli kondaai kattu kattaga
Ammmanum pen maanum
Ondrodu ondraanom

Female : Podhum niruthungal kannam sivakaadha
Innum kelungal en kanavai
Neeradum thuraiyil en arugae vandhaai
Nee kaanum poluthalla maraivaai endren

Male : …………..

Female : Neeradum thuraiyil en arugae vandhaai
Nee kaanum poluthalla maraivaai endren

Female : Thaerodum raajangam edhuvoo endraai
Thirunaalin mudhal naalil arivaai endren
Male : Isaiyae endren isaiyaai nindraai
Manamae endren varuvaai endraai

Male : Athaan endren muthu muthaaga
Alli kondaai kattu kattaga
Both : Ammmanum pen maanum
Ondrodu ondraanom

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : நேரம் மாலை நேரம்
நெஞ்சம் மயங்கும் நெஞ்சம்
அத்தான் அத்தான் அத்தான் ஹும்…

பெண் : அத்தான் என்றேன் முத்து முத்தாக
அத்தான் என்றேன் முத்து முத்தாக
அள்ளிக்கொண்டாய் கட்டுக் கட்டாக
அம்மானும் பெண் மானும்
ஒன்றோடு ஒன்றானோம்…..

ஆண் : நீலப் பட்டோடும்
நெற்றி பொட்டோடும்
பருவம் கொண்டாடும் பாதி கண்ணோரம்
பருவம் கொண்டாடும் பாதி கண்ணோரம்

ஆண் : அத்தான் என்றாய் முத்து முத்தாக
அள்ளிக் கொண்டேன் கட்டுக் கட்டாக
அம்மானும் பெண் மானும்
ஒன்றோடு ஒன்றானோம்……

ஆண் : கீதா இன்பக் கனவொன்று
நானும் கண்டேன்
பொன்னிறமான அந்தி மாலை நேரம்
மேகம் கொஞ்சும் மலைச் சிகரம்
அங்கு பூச்சுடும் சிலையாக நின்றாய் அன்பே
பூமாலை சரமாக வந்தேன் அங்கே
பூச்சுடும் சிலையாக நின்றாய் அன்பே
பூமாலை சரமாக வந்தேன் அங்கே

ஆண் : பேச்சில்லை மூச்சில்லை பார்வையில்லை
பேசு என்றேன் யாரென்றாய் அத்தான் என்றேன்
பெண் : மனமே என்றேன் மறவேன் என்றாய்
அறிவே என்றேன் உறவே என்றாய்

பெண் : அத்தான் என்றேன் முத்து முத்தாக
அள்ளிக்கொண்டாய் கட்டுக் கட்டாக
அம்மானும் பெண் மானும்
ஒன்றோடு ஒன்றானோம்…..

பெண் : போதும் நிறுத்துங்கள் கன்னம் சிவக்காதா
இன்னும் கேளுங்கள் என் கனவை
நீராடும் துறையில் என் அருகே வந்தாய்
நீ காணும் பொழுதல்ல மறைவாய் என்றேன்

ஆண் : …………..

பெண் : நீராடும் துறையில் என் அருகே வந்தாய்
நீ காணும் பொழுதல்ல மறைவாய் என்றேன்

பெண் : தேரோடும் ராஜாங்கம் எதுவோ என்றாய்
திருநாளின் முதல் நாளில் அறிவாய் என்றேன்
ஆண் : இசையே என்றேன் இசையாய் நின்றாய்
மனமே என்றேன் வருவாய் என்றாய்

ஆண் : அத்தான் என்றாய் முத்து முத்தாக
அள்ளிக் கொண்டேன் கட்டுக் கட்டாக
இருவரும் : அம்மானும் பெண் மானும்
ஒன்றோடு ஒன்றானோம்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here