Singer : Sid Sriram

Music by : Prakash Nikki

Lyrics by : Mohan Rajan

Male : Haa..aaaa…haa..aaa..
Haa..aa..haaa..haa..

Male : Avizhaadha kaalai
Pirazhaadha paarvai
Amizhaadha aasai thanthaayae
Thuyilaadha velai
Tholaiyaadha leelai
Theliyaadha vaadhai kondenae..haaa

Male : Maasuzhal manadhilae
Un ninaivinil
Dhinam dhinam
Uzhandridum neram

Male : Thee thiral uyirilae
Nee tholaivinil enai vittu
Vilagidum neram

Male : Vaanam thaandi pogum megam
Indha bhoomi kandathum illai
Unnai thaandi pogum ennam
Endhan manadhu kondathum illai

Male : Avizhaadha kaalai
Pirazhaadha paarvai
Amizhaadha aasai thanthaayae
Thuyilaadha velai
Tholaiyaadha leelai
Theliyaadha vaadhai kondenae..

Male : Kaalai nerathil
Unadhiru vizhiyil
Sooriyan kaattugiraai
Maalai nerathil
Unadhiru idhazhil
Thoongida thoondugiraai

Male : Enai vaan melae
Yetruthu imai visiri
Un anbaalae
Kaangiren agapulari

Male : Manam pogaamal
Pogum dhooram
Mazhai thooraamal
Thoovuthu uyir varamae

Male : Veesum swaasathil
Paravaiyai pola
Mithandhida thontrumadi
Paarkkum dhoorathil
Yugam pala vaazha
Idhayamum yengumadi

Male : Enai kanmoodi paarkiren
Mudhan mudhalaai
Un ninaivennai saaikkuthae
Karunchuzhalaai

Male : Unai neengaamal
Vaazhum megam
Edai koodaamal
Aagiren kaatrena naan

Male : Avizhaadha kaalai
Pirazhaadha paarvai..paarvai
Amizhaadha aasai thanthaayae
Thanthaayae
Thuyilaadha velai
Tholaiyaadha leelai
Theliyaadha vaadhai kondenae..
Kondenae

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : பிரகாஷ் நிக்கி

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : ஹா..ஆ..ஆஅ…ஹா..ஆ..
ஹா..ஆ..ஆஅ…ஹா..ஆ..

ஆண் : அவிழாத காலை
பிறழாத பார்வை
அமிழாத ஆசை தந்தாயே
துயிலாத வேளை
தொலையாத லீலை
தெளியாத வாதை கொண்டேனே..ஹா

ஆண் : மாசுழல் மனதிலே
உன் நினைவினில்
தினம் தினம் உழன்றிடும் நேரம்

ஆண் : தீ திரள் உயிரிலே
நீ தொலைவினில் எனை
விட்டு விலகிடும் நேரம்

ஆண் : வானம் தாண்டி போகும் மேகம்
இந்த பூமி கண்டதுமில்லை
உன்னை தாண்டி போகும் எண்ணம்
எந்தன் மனது கொண்டதுமில்லை

ஆண் : அவிழாத காலை
பிறழாத பார்வை
அமிழாத ஆசை தந்தாயே
துயிலாத வேளை
தொலையாத லீலை
தெளியாத வாதை கொண்டேனே

ஆண் : காலை நேரத்தில்
உனதிரு விழியில்
சூரியன் காட்டுகிறாய்
மாலை நேரத்தில்
உனதிரு இதழில்
தூங்கிட தூண்டுகிறாய்

ஆண் : எனை வான் மேலே
ஏற்றுது இமை விசிறி
உன் அன்பாலே காண்கிறேன்
அகப்புலரி

ஆண் : மனம் போகாமல்
போகும் தூரம்
மழை தூறாமல்
தூவுது உயிர் வரமே

ஆண் : வீசும் சுவாசத்தில்
பறவையை போல
மிதந்திட தோன்றுமடி
பார்க்கும் தூரத்தில்
யுகம் பல வாழ
இதயமும் ஏங்குமடி

ஆண் : எனை கண்மூடி பார்க்கிறேன்
முதன் முதலாய்
உன் நினைவென்னை சாய்க்குதே
கருஞ்சுழலாய்

ஆண் : உனை நீங்காமல்
வாழும் மேகம்
எடை கூடாமல்
ஆகிறேன் காற்றென நான்

ஆண் : அவிழாத காலை
பிறழாத பார்வை..பார்வை
அமிழாத ஆசை தந்தாயே
தந்தாயே
துயிலாத வேளை
தொலையாத லீலை
தெளியாத வாதை கொண்டேனே
கொண்டேனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here