Singers : Jikki and Nageswara Rao

Music by : P. Aadhinarayana Rao

Female : Azhagae thaane aagumae thollai
Adharkku illai ellaiyae
Allal tharuvadhai thozhilaai konda
Arattaigal thollai ooo ooo
Arattaigal thollai

Female : Azhagae thaane aagumae thollai
Adharkku illai ellaiyae
Allal tharuvadhai thozhilaai konda
Arattaigal thollai aiyoo
Arattaigal thollai

Female : Vattamae iduvaar veettai suttriyae
Vayadhu vandhavalai kaanbhadharkkae
Ivvayadhu vandhavalae kaanbhadharkkae
Veenaaga uyirai vaangiduvaar
Vivaagamae thaan sugamae endraal
Varathatchanaiyai vendum enbaar
Eppadi vaazhvadhamma naanae thaan
Eppadi vaazhvadhamma

Male : Oo kannaana thangamae kannatti neeyae
Ondiyae neeyae iruppadhu yaeno
Ondiyae neeyae iruppadhu yaeno
Unnudan seravae naan irukkenae
Ennudan koodiyae inburu neeyae
Enai kann paaren manadhaalae

Female : O oo oo thustanae
Thanimaiyil thiriyum muradanae
Salaithaval endrae thaedi sarasamoo
Kaadhal meedhae kaadhal kolladhae
Sanjala sithanae po podaa
Enai vanjanai seiyaadhae po po po
Vanjanai seiyaadhae po po po

Male : Jameendhaarae naan bhoomikku thuraiyae
Jameendhaarae naan bhoomikku thuraiyae
Raaniyae seivenae maharaaniyae seivenae
Maharaaniyae seivenae
Aasthigal paasthigal tharuvenae
Aasaigalellaam theerthiduven
Aanandhamaagavae neeyae vaa

Female : Jameendharungala umakkae vanakkam
Jameendharungala umakkae vanakkam
Neela valam ellaam nalla irukka
Kaadhal raanigal sugamae thaanae

Female : Padudhaavin ullae pengalai moodi
Adimaigal aakki paarthiduveer
Kai bommaigal aagavae seidhiduveer
Un praana sangadamae vendam vendam
Pongal pongal potten kumbidu
Pongal pongal potten kumbidu

Male : Oo oo thazhukki minukkiyae thanga padhumaiyae
Endhanidam vaa vaa pandhu vilayadhavaa
Sondhamudan va va singariyae nee vaa
Soukaargal naangalthaan andha
Kadavulukkum thaan anjida maattom

Male : Keladi unakkae kottuven thangam
Kattuven maadiyae katti thangam thoonilae
Kann imai polae kaathiduvenae
Kannae bayamyen ponaana kiliyae

Male : Ennaalum seiven sevai naan
Seiven naan seiven naan nee
Kai vitaalae saaven naan saaven naan

Female : Oo oo saukkarungala salam aiyaavae
Kalla kadaigal perum kushithaana
Kollai panamae malaiyaai kuvindhadha
Vilaigalai uyarthida varumai vandhidavae
Kaba kabavena vayiru pattri eriyaadhaa
Umm vayiru kuliravae kudhidhiduveer

Female : Unga praana sangadamae vendam vendam
Pongal pongal potten kumbidu
Pongal piongal potten kumbidu

Female : Oo oo uzhudhunnum raaja va va
Nee va va poorva pooja palanae neeyae raaja
Kallam kabadam illadha raaja
Ellaam valamaiyum seidhidum raajaa
Padaithen unaiyae vallamai raajaa
Virithen deivamai unaiyae raajaa

Female : Aanandham aanandhamae indha
Vivasaayi magal manamagal aaginaal
Aanandham aanandhamae indha
Vivasaayi magal manamagal aaginaal

பாடகர்கள் : நாகேஸ்வர ராவ் மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பெண் : அழகேதானே ஆகுமே தொல்லை
அதற்க்கு இல்லை எல்லையே
அல்லல் தருவதை தொழிலாய் கொண்ட
அரட்டைகள் தொல்லை ஓஒ
அரட்டைகள் தொல்லை

பெண் : அழகேதானே ஆகுமே தொல்லை
அதற்க்கு இல்லை எல்லையே
அல்லல் தருவதை தொழிலாய் கொண்ட
அரட்டைகள் தொல்லை ஐயோ
அரட்டைகள் தொல்லை

பெண் : வட்டமே இடுவார் வீட்டைச் சுற்றியே
வயது வந்தவளைக் காண்பதற்கே
இவ் வயது வந்தவளைக் காண்பதற்கே
வீணாக உயிரை வாங்கிடுவார்
விவாகமேதான் சுகமே என்றால்
வரதட்சணையே வேண்டும் என்பார்
எப்படி வாழ்வதம்மா நானேதான்
எப்படி வாழ்வதம்மா…

ஆண் : ஓஒ..கண்ணான தங்கமே கண்ணாட்டி நீயே
ஒண்டியே நீயே இருப்பது ஏனோ
ஒண்டியே நீயே இருப்பது ஏனோ
உன்னுடன் சேரவே நானிருக்கேனே
என்னுடன் கூடியே இன்புறு நீயே
எனைக் கண் பாரேன் மனதாலே…

பெண் : ஓஓஒ துஷ்டனே
தனிமையில் திரியும் முரடனே
சளைத்தவள் என்றே தேடி சரசமோ
காதல் மீதே காதல் கொள்ளாதே
சஞ்சல சித்தனே போ போடா
வஞ்சனை செய்யாதே போ போ போ
வஞ்சனை செய்யாதே போ போ போ….

ஆண் : ஜமீந்தாரே நான் பூமிக்கு துரையே
ஜமீந்தாரே நான் பூமிக்கு துரையே
ராணியே செய்வேனே மகராணியே செய்வேனே
மகராணியே செய்வேனே
ஆஸ்திகள் பாஸ்திகள் தருவேனே
ஆசைகளெல்லாம் தீர்த்திடுவேன்
ஆனந்தமாகவே நீயே வா…

பெண் : ஜமீந்தாருங்களா உமக்கே வணக்கம்
ஜமீந்தாருங்களா உமக்கே வணக்கம்
நில வளம் எல்லாம் நல்லா இருக்கா
காதல் ராணிகள் சுகமேதானா

ஆண் : படுதாவின் உள்ளே பெண்களை மூடி
அடிமைகள் ஆக்கி பார்த்திடுவீர்
கை பொம்மைகளாகவே செய்திடுவீர்
உன் பிராண சங்கடமே வேண்டாம் வேண்டாம்
போங்கள் போங்கள் போட்டேன் கும்பிடு
போங்கள் போங்கள் போட்டேன் கும்பிடு

ஆண் : ஓஓஒ..தளுக்கி மினிக்கியே தங்கப் பதுமையே
எந்தனிடம் வா வா பந்து விளையாடவா
சொந்தமுடன் வா வா சிங்காரி நீ வா
சௌகார்கள் நாங்கள்தான் அந்த
கடவுளுக்கும் தான் அஞ்சிட மாட்டோம்

ஆண் : கேளடி உனக்கே கொட்டுவேன் தங்கம்
கட்டுவேன் மாடியே கட்டித் தங்க தூணிலே
கண் இமைப் போலே காத்திடுவேனே
கண்ணே பயமேன் பொன்னான கிளியே

ஆண் : எந்நாளும் செய்வேன் சேவை நான்
செய்வேன் நான் செய்வேன் நான் நீ
கை விட்டாலே சாவேன் நான் சாவேன் நான்

பெண் : ஓஓ சௌக்காருங்களா சலாம் ஐயாவே
கள்ளக் கடைகள் பெரும் குஷிதானா
கொள்ளை பணமே மலையாய் குவிந்ததா
விலைகளை உயர்த்திட வறுமை வந்திடவே
கபகபவென வயிறு பற்றி எரியாதா
உம் வயிறு குளிரவே குதித்திடுவீர்

பெண் : உங்க பிராண சங்கடமே வேண்டாம் வேண்டாம்
போங்கள் போங்கள் போட்டேன் கும்பிடு
போங்கள் போங்கள் போட்டேன் கும்பிடு

பெண் : ஓஓ உழுதுண்ணும் ராஜா வா வா
நீ வா வா பூர்வ பூஜா பலனே நீயே ராஜா
கள்ளம் கபடம் இல்லாத ராஜா
எல்லாம் வளமையும் செய்திடும் ராஜா
படைத்தேன் உனையே வல்லமை ராஜா
வரித்தேன் தெய்வமாய் உனையே ராஜா

பெண் : ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே இந்த
விவசாயி மகள் மணமகள் ஆகினாள்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே இந்த
விவசாயி மகன் மணமகன் ஆகினான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here