Singers : S. N. Surendar and Shoba Chandrasekar

Music by : Gangai Amaran

Lyrics by : Pulamaipithan

Male : Azhagae nee azhalaama vizhi neerum vizhalaama
Edhirkaalam namkkaaga uyirey naan unakkaga
Mayakkam kalakkam edharkkaaga

Male : Azhagae nee azhalaama vizhi neerum vizhalaama

Female : Madiyil sumanthaen mazhalaithaan
Manathil sumanthaen kavalaithaan
Male : Malarae unakkaen muga vaattam
Vidinthaal kalaiyum panimoottam

Female : Nee ariyaayo naan padum paadu
Ne irunthaalthaan enakkithu veedu
Male : Viraivil kaanalaam vasantha kaalamae

Male : Azhagae nee
Female : Mmm
Male : Azhalaama
Female : Mmm
Male : Vizhi neerum vizhalaamaa

Female : Neeyo angae oru karaiyil
Naano ingae maru karaiyil
Male : Irunthom kannae idhu varaiyil
Inainthom indru thaniyaraiyil

Female : Thalaivan illaatha thalaiviyin roobam
Iraivan illatha aalaya dheepam
Male : Koyil thediyae dheivam vanthathae

Male : Azhagae nee
Female : Mmm
Male : Azhalaama
Female : Mmm
Male : Vizhi neerum vizhalaamaa

Male : Edhirkaalam namakkaga
Uyirae naan unakkaaga
Mayakkam kalakkam edharkkaga

Male : Azhagae nee
Female : Mmm
Male : Azhalaama
Female : Mmm
Male : Vizhi neerum vizhalaamaa

பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் ஷோபா சந்திரசேகர்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : அழகே நீ அழலாமா விழி நீரும் விழலாமா
எதிர்காலம் நமக்காக உயிரே நான் உனக்காக
மயக்கம் கலக்கம் எதற்காக

ஆண் : அழகே நீ அழலாமா விழி நீரும் விழலாமா

பெண் : மடியில் சுமந்தேன் மழலைதான்
மனதில் சுமந்தேன் கவலைதான்
ஆண் : மலரே உனக்கேன் முக வாட்டம்
விடிந்தால் கலையும் பனி மூட்டம்

பெண் : நீ அறியாயோ நான் படும் பாடு
நீ இருந்தால்தான் எனக்கிது வீடு
ஆண் : விரைவில் காணலாம் வசந்த காலமே

ஆண் : அழகே நீ
பெண் : ம்ம்ம்….
ஆண் : அழலாமா
பெண் : ம்ம்ம்….
ஆண் : விழி நீரும் விழலாமா….

பெண் : நீயோ அங்கே ஒரு கரையில்
நானோ இங்கே மறு கரையில்
ஆண் : இருந்தோம் கண்ணே இது வரையில்
இணைந்தோம் இன்று தனியறையில்

பெண் : தலைவன் இல்லாத தலைவியின் ரூபம்
இறைவன் இல்லாத ஆலய தீபம்
ஆண் : கோயில் தேடியே தெய்வம் வந்ததே

ஆண் : அழகே நீ
பெண் : ம்ம்ம்….
ஆண் : அழலாமா
பெண் : ம்ம்ம்….
ஆண் : விழி நீரும் விழலாமா….

ஆண் : எதிர்காலம் நமக்காக
உயிரே நான் உனக்காக
மயக்கம் கலக்கம் எதற்காக

ஆண் : அழகே நீ
பெண் : ம்ம்ம்….
ஆண் : அழலாமா
பெண் : ம்ம்ம்….
ஆண் : விழி நீரும் விழலாமா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here