Singers : S. P. Balasubrahmanyam and P. Suseela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Azhagae un peyarthaano
Amuthae un mozhithaano
Azhagae un peyarthaano
Amuthae un mozhithaano
Nadanthaal sinthu kaviyo
Nadanthaal sinthu kaviyo
Nee arunthaen thantha suvaiyo

Female : Thalaivaa endrathu nenjam
Thaniyae nindrathu konjam
Thalaivaa endrathu nenjam
Thaniyae nindrathu konjam
Idhuthaan pennin manamo
Idhu iyarkkai thantha gunamo…oo….

Male : Azhagae un peyarthaano

Male : Pon paarththu mayangum
Un maeni azhagai kandaalum bodhai tharum
Female : En kaiyodu kulungm
Sangeetha valaiyal singaaram paadi varum

Male : Kamban indru irunthaal
Avan unnai arinthaal
Female : Manam ennenna paada ninaikkum
Athai indringu paada azhaikkum

Female : Thalaivaa endrathu nenjam
Thaniyae nindrathu konjam

Male : Azhagae un peyarthaano

Male : Nillendru niruththi unnai
Sillendru thazhuvikkondu
Paadum ragangal enna

Female : Punnagai idhazh virikkum
Malligai saram thoduththu
Soottum kaalangal enna

Male : Kannippoo udalo
Annaththin sirako
Female : Pillai sol mazhalai pesuvatho

Both : Azhagae un peyarthaano
Amuthae un mozhithaano
Azhagae un peyarthaano…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அழகே உன் பெயர்தானோ
அமுதே உன் மொழிதானோ
அழகே உன் பெயர்தானோ
அமுதே உன் மொழிதானோ
நடந்தால் சிந்துக் கவியோ
நடந்தால் சிந்துக் கவியோ
நீ அருந்தேன் தந்த சுவையோ

பெண் : தலைவா என்றது நெஞ்சம்
தனியே நின்றது கொஞ்சம்
தலைவா என்றது நெஞ்சம்
தனியே நின்றது கொஞ்சம்
இதுதான் பெண்ணின் மனமோ
இது இயற்கை தந்த குணமோ….ஓ…..

ஆண் : அழகே உன் பெயர்தானோ

ஆண் : பொன் பார்த்து மயங்கும்
உன் மேனி அழகை கண்டாலும் போதை தரும்
பெண் : என் கையோடு குலுங்கும்
சங்கீத வளையல் சிங்காரம் பாடி வரும்

ஆண் : கம்பன் இன்று இருந்தால்
அவன் உன்னை அறிந்தால்
பெண் : மனம் என்னென்ன பாட நினைக்கும்
அதை இன்றிங்கு பாட அழைக்கும்

பெண் : தலைவா என்றது நெஞ்சம்
தனியே நின்றது கொஞ்சம்

ஆண் : அழகே உன் பெயர்தானோ

ஆண் : நில்லென்று நிறுத்தி உன்னை
சில்லென்று தழுவிக்கொண்டு
பாடும் ராகங்கள் என்ன

பெண் : புன்னகை இதழ் விரிக்கும்
மல்லிகை சரம் தொடுத்து
சூட்டும் காலங்கள் என்ன

ஆண் : கன்னிப்பூ உடலோ
அன்னத்தின் சிறகோ
பெண் : பிள்ளைச் சொல் மழலை பேசுவதோ

இருவர் : அழகே உன் பெயர்தானோ
அமுதே உன் மொழிதானோ
அழகே உன் பெயர்தானோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here