Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : ……………….

Chorus : ………………..

Female : Azhagiya mugam muzhumai nilaa
Adhu varuvathu inimai ulaa
Azhagiya mugam muzhumai nilaa
Adhu varuvathu inimai ulaa
Ilagiya udal inimai ulaa
Idaiyinil oru madhana vizhaa

Female : Muththukkal sevvaayil moodi kidakkum
Muththukkal sevvaayil moodi kidakkum
Mogaththila penn maangal aadi kalikkum
Mogaththila penn maangal aadi kalikkum

Female : Azhagiya mugam muzhumai nilaa
Adhu varuvathu inimai ulaa

Female : Vanji kodikal konjum kiligal
Paadi aadum kadhal arangamo
Vinn meengalo kann meengalo
Neeraadum penn meengalo

Female : Maragathamaniyena madhurasa idhazhgalil
Pudhuvitha isai varumo
Ilamaiyin pidiyinil
Idaiyithu idaiyinil thaalam podumo

Female : Azhagiya mugam muzhumai nilaa
Adhu varuvathu inimai ulaa

Female : Muththukkal sevvaayil moodi kidakkum
Mogaththila penn maangal aadi kalikkum
Aa….aa…aa….aa…aah…aa….aa….

Female : Azhagiya mugam muzhumai nilaa
Adhu varuvathu inimai ulaa

Female : …………..

Chorus : …………….

Female : Intha silaigal anthi kalaigal
Kaana vendum naalum unnoduthaan
Ingae sugam angae manam
Endraadum ennoduthaan

Female : Vizhigalum vizhigalum inaigira pozhuthinil
Mozhigalum avasiyamo
Vilagiya thiraiyinil vidigira varaiyinil
Naalum aadavo

Female : Azhagiya mugam muzhumai nilaa
Adhu varuvathu inimai ulaa

Female : Haa….muththukkal sevvaayil moodi kidakkum
Mogaththila penn maangal aadi kalikkum
Aa….aa…aa….aa…aah…aa….aa….

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : …………………….

குழு : ………………………

பெண் : அழகிய முகம் முழுமை நிலா
அது வருவது இனிமை உலா
அழகிய முகம் முழுமை நிலா
அது வருவது இனிமை உலா
இளகிய உடல் இனிய பலா
இடையினில் ஒரு மதன விழா

பெண் : முத்துக்கள் செவ்வாயில் மூடி கிடக்கும்
முத்துக்கள் செவ்வாயில் மூடி கிடக்கும்
மோகத்தில் பெண் மான்கள் ஆடி களிக்கும்
மோகத்தில் பெண் மான்கள் ஆடி களிக்கும்

பெண் : அழகிய முகம் முழுமை நிலா
அது வருவது இனிமை உலா

பெண் : வஞ்சிக் கொடிகள் கொஞ்சும் கிளிகள்
பாடி ஆடும் காதல் அரங்கமோ
விண் மீன்களோ கண் மீன்களோ
நீராடும் பெண் மீன்களோ

பெண் : மரகதமணியென மதுரச இதழ்களில்
புதுவித இசை வருமோ
இளமையின் பிடியினில்
இடையிது இடையினில் தாளம் போடுமோ

பெண் : அழகிய முகம் முழுமை நிலா
அது வருவது இனிமை உலா

பெண் : முத்துக்கள் செவ்வாயில் மூடி கிடக்கும்
மோகத்தில் பெண் மான்கள் ஆடி களிக்கும்
ஆ….ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ…..

பெண் : அழகிய முகம் முழுமை நிலா
அது வருவது இனிமை உலா

பெண் : …………………….

குழு : ………………………

பெண் : இந்த சிலைகள் அந்தி கலைகள்
காண வேண்டும் நாளும் உன்னோடுதான்
இங்கே சுகம் அங்கே மணம்
என்றாடும் என்னோடுதான்

பெண் : விழிகளும் விழிகளும் இணைகிற பொழுதினில்
மொழிகளும் அவசியமோ
விலகிய திரையினில் விடிகிற வரையினில்
நாளும் ஆடவோ………

பெண் : அழகிய முகம் முழுமை நிலா
அது வருவது இனிமை உலா

பெண் : ஹா…….முத்துக்கள் செவ்வாயில் மூடி கிடக்கும்
மோகத்தில் பெண் மான்கள் ஆடி களிக்கும்
ஆ….ஆ….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here