Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : …………..

Female : Azhagiya pengal vaazhvathae
Aadvar sorpadi aadavaa
Azhagiya pengal vaazhvathae
Aadvar sorpadi aadavaa
Aayiram thollai anupaviththaalum
Aamaigal polae vaazhvaa vaazhvaa vaazhavaa….aa….

Female : Azhagiya pengal vaazhvathae
Aadvar sorpadi aadavaa

Female : Seerudan sirappudan unmaiyai kattraan
Theruvinilae avan manaiviyai vittraan
Kaadhinil oruvan kurai solla kettaan
Kaattinil oruvan manaviyai vittaan

Female : Bedhai oruththi sabhaiyinil nindraal
Paei pol oruvan thugilinai urinthaan
Kadhaliththey oru kuzhanthai piranthum
Kayinil munivan vaangida maruththaan
Kayinil munivan vaangida maruththaan

Male : Azhagiya pengal vaazhvathae
Aadavar thammai aatti vaikkavaa
Azhagiya pengal vaazhvathae
Aadavar thammai aatti vaikkavaa
Aayiram thollai anupaviththaalum
Aamaigal polae vaazhvaa vaazhvaa…aa…

Male : Udambinil oruththi paathiyai kettaal
Unchchnthalaiyinil oruththi utkaarnthaal
Kattiya kanvanai kattilil oruththi
Kaalgalai pidikka kattalaiyittaal

Male : Andrey oruththi sabathameduththu
Aayiram pergalai porinil maaththaal
Aasaiyil oruththi mookkarupattu
Annanin vaazhvil emanaai vanthaal
Annanin vaazhvil emanaai vanthaal

Female : Vanjagar aangal
Male : Vanjiyar neengal
Female : Paadhagar aangal
Male : Paavigal neengal

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ………………..

பெண் : அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் சொற்படி ஆடவா
அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் சொற்படி ஆடவா
ஆயிரம் தொல்லை அனுபவித்தாலும்
ஆமைகள் போலே வாழவா வாழவா வாழவா…ஆ…..

பெண் : அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் சொற்படி ஆடவா

பெண் : சீருடன் சிறப்புடன் உண்மையை கற்றான்
தெருவினிலே அவன் மனைவியை விற்றான்
காதினில் ஒருவன் குறை சொல்லக் கேட்டான்
காட்டினில் ஒருவன் மனைவியை விட்டான்

பெண் : பேதை ஒருத்தி சபையினில் நின்றாள்
பேய்போல் ஒருவன் துகிலினை உரிந்தான்
காதலித்தே ஒரு குழந்தை பிறந்தும்
கையினில் முனிவன் வாங்கிட மறுத்தான்
கையினில் முனிவன் வாங்கிட மறுத்தான்

ஆண் : அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் தம்மை ஆட்டி வைக்கவா
அழகிய பெண்கள் வாழ்வதே
ஆடவர் தம்மை ஆட்டி வைக்கவா
ஆயிரம் தொல்லை அனுபவித்தாலும்
ஆமைகள் போலே வாழவா வாழவா…ஆ…..

ஆண் : உடம்பினில் ஒருத்தி பாதியைக் கேட்டாள்
உச்சந் தலையினில் ஒருத்தி உட்கார்ந்தாள்
கட்டிய கணவனை கட்டிலில் ஒருத்தி
கால்களை பிடிக்கக் கட்டளையிட்டாள்

ஆண் : அன்றே ஒருத்தி சபதமெடுத்து
ஆயிரம் பேர்களை போரினில் மாய்த்தாள்
ஆசையில் ஒருத்தி மூக்கறுப்பட்டு
அண்ணனின் வாழ்வில் எமனாய் வந்தாள்
அண்ணனின் வாழ்வில் எமனாய் வந்தாள்

பெண் : வஞ்சகர் ஆண்கள்
ஆண் : வஞ்சியர் நீங்கள்
பெண் : பாதகர் ஆண்கள்
ஆண் : பாவிகள் நீங்கள்……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here