Singers : Mohandas and Uma Ramanan

Music by : Ilaya Gangai

Male : Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi

Male : Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi

Male : Kanavugalin kadhavu thiranthathu
Ninaivugalin siragu mulaiththathu
Kanavugalin kadhavu thiranthathu
Ninaivugalin siragu mulaiththathu
Kadhalae kadhalae nee vaazhga

Female : Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi

Male : Thegam irandum paaram kurainthu
Vaanil paranthathuvo
Vara vara boomi marainthathuvo

Female : Kaaman isaikkum naathasvaraththin
Geetham muzhangiyatho
Adhil pala paavam vilangiyatho

Male : Kodi malargal seviyinai pol saaigiratho
Iru manathin mounamozhi ketkiratho
Female : Pon maalaiyilae
Male : Poo sinthuthadi
Female : Poongaattril oru
Male : Thaer vanthathadi
Female : Minnum malarvizhi sangam adhu pala
Male : Kavithaigal vadiththathu idhazh varai iniththathu

Female : Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi

Female : Kadhalar paattu kadhinil kettu
Paada maranthanavo
Kuyilgalum kadhal purinthanavo

Male : Eerudal porththu saernthathum
Kaattru idaiveli thediyatho
Nuzhainthida idamindri vaadiyatho

Female : Poongodiyai maangilaithaan thaangiyatho
Ponnulagam poga manam yaengiyatho
Female : Nool pondra idai
Male : Yaen sornthathadi
Female : Paalodu malar
Male : Thean saernthathadi
Female : Pachchai ilaigalil meththai adhil pani
Thuligalum mayanguthu iravena thayanguthu

Male : Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Female : Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi

Male : Kanavugalin kadhavu thiranthathu
Ninaivugalin siragu mulaiththathu
Female : Kanavugalin kadhavu thiranthathu
Ninaivugalin siragu mulaiththathu
Kadhalae kadhalae nee vaazhga

Both : Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi
Azhagiya poongkuruvi
Irandin manathilum thaenaruvi

பாடகர்கள் : மோகன்தாஸ் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளைய கங்கை

ஆண் : அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி….

ஆண் : அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி..

ஆண் : கனவுகளின் கதவு திறந்தது
நினைவுகளின் சிறகு முளைத்தது
கனவுகளின் கதவு திறந்தது
நினைவுகளின் சிறகு முளைத்தது
காதலே காதலே நீ வாழ்க

பெண் : அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி…..

ஆண் : தேகம் இரண்டு பாரம் குறைந்து
வானில் பறந்ததுவோ
வர வர பூமி மறைந்ததுவோ

பெண் : காமன் இசைக்கும் நாதஸ்வரத்தின்
கீதம் முழங்கியதோ
அதில் பல பாவம் விளங்கியதோ

ஆண் : கொடிமலர்கள் செவியினைப் போல் சாய்கிறதோ
இரு மனதின் மௌனமொழி கேட்கிறதோ
பெண் : பொன் மாலையிலே…
ஆண் : பூச்சிந்துதடி
பெண் : பூங்காற்றில் ஒரு
ஆண் : தேர் வந்ததடி
பெண் : மின்னும் மலர்விழி சங்கம் அது பல
ஆண் : கவிதைகள் வடித்தது இதழ் வரை இனித்தது

பெண் : அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி

பெண் : காதலர் பாட்டு காதினில் கேட்டு
பாட மறந்தனவோ
குயில்களும் காதல் புரிந்தனவோ

ஆண் : ஈருடல் போர்த்து சேர்ந்ததும்
காற்று இடைவெளி தேடியதோ
நுழைந்திட இடமின்றி வாடியதோ

பெண் : பூங்கொடியை மாங்கிளைதான் தாங்கியதோ
பொன்னுலகம் போக மனம் ஏங்கியதோ
பெண் : நூல் போன்ற இடை
ஆண் : ஏன் சோர்ந்ததடி
பெண் : பாலோடு மலர்
ஆண் : தேன் சேர்ந்ததடி
பெண் : பச்சை இலைகளில் மெத்தை அதில் பனி
துளிகளும் மயங்குது இரவென தயங்குது

ஆண் : அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
பெண் : அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி

ஆண் : கனவுகளின் கதவு திறந்தது
நினைவுகளின் சிறகு முளைத்தது
பெண் : கனவுகளின் கதவு திறந்தது
நினைவுகளின் சிறகு முளைத்தது
காதலே காதலே நீ வாழ்க

இருவர் : அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி
அழகிய பூங்குருவி
இரண்டின் மனதிலும் தேனருவி….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here