Singers : T. M. Soundarajan, P. Susheela, Soolamangalam Rajalakshmi and K. Jamauna Rani
Music Director : V. Kumar
Lyricist : Kannadasan
Female : Deva..deva..deva..
Azhaikkindren deva
Arul seivaai deva
Female : Ulagai kaana ninaithaen deva
Andha udhavikkae unai azhaithaen deva
Male : Kaadhalum kaanalaam kalaiyum kaanalaam
Dharmamum kaanalaam
Kaadhal kalai dharmmam selvathaal seeralintha
Kaatchiyum kaanalaam vaa..
Male : Idho paar thooimaiyaana kaadhal
Male : Kangalin bashaiyil thuvanguvadhu
Kani vanna idhazhgalil mayanguvadhu
Kangalin bashaiyil thuvanguvadhu
Kani vanna idhazhgalil mayanguvadhu
Female : Utchi mudhal paadham varai
Muthamittu muthamittu
Ulagathai marappadhu kaadhal
Inbam uyirgalai ninaippadhu kaadhal
Male : Kaadhalai selvam paduthum
Vaedhanaiyai paar
Female : Kannu mela kanna vechi kaasai munne vechi
Kannu mela kanna vechi kaasai munne vechi
Kanni ennai aada vechi paaraiyaa
Kanni ennai aada vechi paaraiyaa
Female : Kammalanindhoru sundhari vandhaalo
Sundhari vandhaalo
Kaalamarindhu ungalai kandaalo..kandaalo
Male : Pannum bharathamum panbodu inaindha
Kalaiyai paaru pennae
Female : Nadanam aadinaar
Veghu naagareegamagavae
Kanaga sabaiyil aanandha nadanam aadinaar
Female : Pakkam vaa thottu paar
Patharai mathu thangam polae odava
Lalalala…
Ettu per thottaalum
Kattu vidamal thullum katti karumbhu
Female : Adhisayama idhu ragasiayama idhil
Aadai thaan enna avasiyama
Ragaragama dhinam pudhuvidhama idhai
Anubavikkaavidil sugam varuma
Female : Irundhaal panju methai
Illaavittal thinnaiyilae
Iravu poganum kaariyam aagnum
Idaiyodu valai podu
Un kaiyil ulla kaasai podu
Humming : ……..
Female : Ulagam idhu dhaan arindhu konden
Dharmathai nee ariya vaithaai
Deva..deva..deva
Chorus : Vaishnava janatho thaenae kahiyae je
Peedapraayi janaere
Vaishnava janatho
Female : Maanida dharmam kulaindhadhamma
Manidhanin veriyattam valarthathamma
Pana veriyum ina veriyum aadudhamma
Panpaadu seer kulaindhu ponadhamma
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுஷீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி மற்றும் கே. ஜமுனா ராணி
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : தேவா……தேவா…….தேவா……
அழைக்கின்றேன் தேவா……
அருள் செய்வாய் தேவா……
பெண் : உலகைக் காண நினைத்தேன் தேவா
அந்த உதவிக்கே உனை அழைத்தேன் தேவா
ஆண் : காதலும் காணலாம் கலையும் காணலாம்
தர்மமும் காணலாம்
காதல் கலை தர்மம் செல்வத்தால்
காட்சியும் காணலாம் வா…….
ஆண் : இதோ பார் தூய்மையான காதல்……
ஆண் : கண்களின் பாஷையில் துவங்குவது
கனி வண்ண இதழ்களில் மயங்குவது
கண்களின் பாஷையில் துவங்குவது
கனி வண்ண இதழ்களில் மயங்குவது
பெண் : உச்சி முதல் பாதம் வரை
முத்தமிட்டு முத்தமிட்டு
உலகத்தை மறப்பது காதல்
இன்பம் உயிர்களை நினைப்பது காதல்
ஆண் : காதலை செல்வம் படுத்தும்
வேதனையைப் பார்
பெண் : கண்ணு மேலே வச்சி காசை முன்னே வச்சி
கண்ணு மேலே வச்சி காசை முன்னே வச்சி
கன்னி என்னை ஆட வச்சி பாரய்யா
கன்னி என்னை ஆட வச்சி பாரய்யா
பெண் : கம்மலணிந்தொரு சுந்தரி வந்தாளோ
சுந்தரி வந்தாளோ…..
காலமறிந்து உங்களைக் கண்டாளோ
ஆண் : பண்ணும் பாரதமும் பண்போடிணைந்த
புண்ணியக் கலைப் பார் பெண்ணே
பெண் : நடனம் ஆடினார்
வெகு நாகரீகமாகவே
கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார்
பெண் : பக்கம் வா தொட்டுப் பார்
பத்தரை மாதத்துத் தங்கம் போலே ஓடவே
லாலாலாலா
எட்டுப் பேர் தொட்டாலும்
கட்டு விடாமல் துள்ளும் கட்டிக் கரும்பு
பெண் : அதிசயமா இது ரகசியமா இதில்
ஆடைதான் என்ன அவசியமா
ரகரகமா தினம் புதுவிதமா இதை
அனுபவிக்காவிடில் சுகம் வருமா…..
பெண் : இருந்தால் பஞ்சு மெத்தை
இல்லாவிட்டால் திண்ணையிலே
இரவு போகணும் காரியம் ஆகணும்
இடையோடு வலை போடு
உன் கையில் உள்ள காசைப் போடு
முனங்கல் : …………
பெண் : உலகம் இது அறிந்து கொண்டேன்
தர்ம்னத்தை நீ அறிய வைத்தாய்
தேவா…….தேவா……தேவா…….
குழு : வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீடபராயி ஜானரே……
பெண் : மானிட தர்மம் குலைந்ததம்மா
மனிதனின் வெறியாட்டம் வளர்ந்ததம்மா
பண வெறியும் இன வெறியும் ஆடுதம்மா
பண்பாடு சீர்குலைந்து போனதம்மா…..