Singer : Karthik
Music by : S. Thaman
Whistling : ……………………………….
Male : Vizhunthena tholainthena
Niraiyaamal valinthena
Illatha pookalai killamal koigiren
Sollamal unnidam thanthu vittu pogiren
Male : Kaal illa aamaipol
Kaalam oduthae
Ingae un inmai unargira pothu
Oru unmai arigiren naanae
Male : Enakullae nigazhnthidum athu
Un nenjilum unda
Endrenni irudhayam thudikuthae
Male : Azhaippaaya azhaippaaya..
Nodiyenum azhaippaaya
Pidivaatham pidikindren..
Mudiyaamalae..azhaippaaya
Male : Azhaippaaya azhaippaaya..
Padikaamal kidakindren
Kadikaaram kadikindren..
Vidiyaamalae.. azhaippaaya
Male : Naan enna pesa vendum
Endru solli paarthen
Nee enna koora vendum
Endrum solli paarthen
Naan athanaikum othigaigal
Oda vittu paarthen…
Whistling : ………………………..
Male : Nee engu punnagaikka vendum
Endru kuda serthen
Male : Nilamai thodarnthaal..
Enna naan aaguven
Marakum munnae azhaithaal..
Pizhaippen
Male : Azhaippaaya azhaippaaya..
Alaipesi azhaippaaya
Thalaikeelai kuthikindren..
Kural kekkavae.. azhaippaaya
Azhaippaaya azhaippaaya..
Nadu jaamam vizhikindren
Naatkaati kizhikindren..
Unai paarkavae.. azhaippaaya…
Male : Hey paathi thindru
Moodi vaitha thini polavae
En kaadhil pattu
Odipona paadal polavae
En naasi meedhu veesi vitta
Maayamana vaasam polae
Nee pesi vaikkum pothu
Yekkam moodum nenjin melae
Male : Surungum viriyum
Puviyaai maaruthae
Idhayam ingae ver etho neruthae
Male : Azhaippaaya azhaippaaya..
Thavaraamal azhaippaaya
Thavaraaga..azhaithaalum
Athu pothumae..azhaippaaya
Male : Azhaippaaya azhaippaaya..
Hoo oo hoo oo oo oo
Azhaippaaya azhaippaaya..
Mozhiyellam karainthaalum
Mounangal uraithaalae
Athu pothumae..azhaippaaya…aaaa…
Whistling : ……………………………….
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : எஸ். தமன்
விசில் : …………………………..
ஆண் : விழுந்தேனா தொலைந்தேனா
நிறையாமல் வழிந்தேனா
இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்
சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்
ஆண் : கால் இல்லா ஆமை போல்
காலம் ஓடுதே
இங்கே உன் இன்மை உணர்கிற போது
ஒரே உண்மையை அறிகிறேன் நானே
ஆண் : எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது
உன் நெஞ்சிலும் உண்டா
என்றெண்ணி இருதயம் துடிக்குதே
ஆண் : அழைப்பாயா அழைப்பாயா
நொடியேனும் அழைப்பாயா
பிடிவாதம் பிடிக்கின்றேன்
முடியாமலே….அழைப்பாயா
ஆண் : அழைப்பாயா அழைப்பாயா
படிக்காமல் கிடக்கின்றேன்
கடிகாரம் கடிக்கின்றேன்….
விடியாமலே…அழைப்பாயா
ஆண் : நான் என்ன பேச வேண்டும்
என்று சொல்லிப் பார்த்தேன்
நீ என்ன கூற வேண்டும்
என்றும் சொல்லிப் பார்த்தேன்
நான் அத்தனைக்கும் ஒத்திகைகள்
ஓடவிட்டுப் பார்த்தேன்….
விசில் : ………………………
ஆண் : நீ எங்கு புன்னகைக்க வேண்டும்
என்று கூட சேர்த்தேன்
ஆண் : நிலைமை தொடர்ந்தால்…
என்ன நான் ஆகுவேன்
மறக்கும் முன்னே அழைத்தால்…
பிழைப்பேன்…
ஆண் : அழைப்பாயா அழைப்பாயா
அலைபேசி அழைப்பாயா
தலைகீழாய் குதிக்கின்றேன்
குரல் கேட்கவே…அழைப்பாயா
அழைப்பாயா அழைப்பாயா….
நடுஜாமம் விழிக்கின்றேன்
நாட்காட்டி கிழிக்கின்றேன்…..
உனைப் பார்க்கவே…அழைப்பாயா…
ஆண் : ஹே பாதி தின்று
மூடிவைத்த தீனி போலவே
என் காதில் பட்டு
ஓடிப் போன பாடல் போலவே
என் நாசி மீது வீசி விட்ட
மாயமான வாசம் போலே
நீ பேசி வைக்கும் போது
ஏக்கம் மூடும் நெஞ்சின் மேலே
ஆண் : சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே
இதயம் இங்கே
வேற் ஏதோ… நேருதே…
ஆண் : அழைப்பாயா அழைப்பாயா
தவறாமல் அழைப்பாயா
தவறாக அழைத்தாலும்
அது போதுமே…அழைப்பாயா
ஆண் : அழைப்பாயா அழைப்பாயா
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ
அழைப்பாயா அழைப்பாயா
மொழியெல்லாம் கரைந்தாலும்
மௌனங்கள் உரைத்தாலே
அது போதுமே….அழைப்பாயா….ஆஅ….
விசில் : …………………………….