Singers : A. G. Rathnamala & V. T. Rajagopalan

Music by : G. Ramanathan

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Chorus : Thaththom thaththom thagajunu thagajunu
Thathalaangu thimi thagathimi tharigida
Cheeyaan pottu cheeyaan

Female : Bajanaikku naazhiyumaachchuthunga
Palapalannu vidinju pochchuthunga
Paththiniyaalum aattrukku poe vaaraen

Female : Bajanaikku naazhiyumaachchuthunga
Palapalannu vidinju pochchuthunga
Paththiniyaalum aattrukku poe vaaraen

Male : Panbu niranthidum aasai pennaalae
Mann kudam karaiyaa magimai unnaalae
Panbu niranthidum aasai pennaalae
Mann kudam karaiyaa magimai unnaalae

Male : Paarengum pugazh paravi kidakkuthadi
Seekkiram sendrey vaadi
Paarengum pugazh paravi kidakkuthadi
Seekkiram sendrey vaadi
Female : Utharavu…
Male : Paththiramaai….

Female : Kanavanai polae deivam
Ulaginilae yaedhu ulaginilae yaedhu ulaginilae
Kannai thoodhu viduththu karuthai parikoduththu
Kalla kadhal purinthaal papamandro varum saabamandro

Female : Kanavanai polae deivam
Ulaginilae yaedhu ulaginilae

Male : Dhishtaiyae unnaal enthan nishtai kalainthathadi
Kittae varaathae etti nillu nillu
Female : Kashta kaalaththaal enthan karuththai pari koduthaen
Kadavulaene vanthu sollu sollu

Male : Chee chee karpai parikoduthu kadavulai kooppittaalum
Oppu kondavan varuvaana varuvaanaa
Female : Kanavan manasu vachchu orumurai mannichuttaa
Kadavulum kooda vara venaam venaam

Male : Adae parasuraama adae parasuraamaa
Kandor nadugidathae kadhal sithainthidavae
Sandaali ival thalai rendaagavae thuninthu
Thundaaga vetta venum
Raththa vellaththil joraaga thulla venum

Female : Pettra thaayaiyae pillai kaiyinaal
Vetta sollalaama thaayai vetta sollalaamaa
Male : Ada pillaai puththiyizhantha pollaatha arakkiyai
Kollaamal vidalaama
Ada pillaai puththiyizhantha pollaatha arakkiyai
Kollaamal vidalaama

Female : Thanthai sollai pol thalaiyai vaangida
Thayangaathae maganae
Thanthai sollai pol thalaiyai vaangida
Thayangaathae maganae

Male : Antha naal seitha oozhvinai thaano
Ariyaenae amma
Pettra thaaiyae pillai kaiyinaal
Vetta sollalaamaa
Thaaiyai vetta sollalaamaa…

பாடகர்கள் : ஏ. ஜி. ரத்னமாலா மற்றும் வி. டி. ராஜாகோபாலன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

குழு : தத்தோம் தத்தோம் தகஜூணு தகஜூணு
தத்தலாங்கு திமி தகதிமி தரிகிட
சீயான் போட்டு சீயான்

பெண் : பஜனைக்கு நாழியுமாச்சுதுங்க
பளபளன்னு விடிஞ்சு போச்சுதுங்க
பத்தினியாளும் ஆற்றுக்குப் போய் வாரேன்

பெண் : பஜனைக்கு நாழியுமாச்சுதுங்க
பளபளன்னு விடிஞ்சு போச்சுதுங்க
பத்தினியாளும் ஆற்றுக்குப் போய் வாரேன்

ஆண் : பண்பு நிறைந்திடும் ஆசைப் பெண்ணாளே
மண் குடம் கரையா மகிமை உன்னாலே
பண்பு நிறைந்திடும் ஆசைப் பெண்ணாளே
மண் குடம் கரையா மகிமை உன்னாலே

ஆண் : பாரெங்கும் புகழ் பரவிக் கிடக்குதடி
சீக்கிரம் சென்றே வாடி
பாரெங்கும் புகழ் பரவிக் கிடக்குதடி
சீக்கிரம் சென்றே வாடி
பெண் : உத்தரவு……
ஆண் : பத்திரமாய்….

பெண் : கணவனைப் போலே தெய்வம்
உலகினிலே ஏது உலகினிலே ஏது உலகினிலே
கண்ணை தூது விடுத்து கருத்தை பறிக்கொடுத்து
கள்ளக் காதல் புரிந்தால் பாபமன்றோ வரும் சாபமன்றோ

பெண் : கணவனைப் போலே தெய்வம்
உலகினிலே ஏது உலகினிலே

ஆண் : திஷ்டையே உன்னால் எந்தன் நிஷ்டை கலைந்ததடி
கிட்டே வராதே எட்டி நில்லு நில்லு
பெண் : கஷ்ட காலத்தால் எந்தன் கருத்தைப் பறிக்கொடுத்தேன்
கடவுளேனே வந்து சொல்லு சொல்லு

ஆண் : சீ சீ கற்பை பறிக்கொடுத்து கடவுளைக் கூப்பிட்டாலும்
ஒப்புக் கொண்டவன் வருவானா வருவானா
பெண் : கணவன் மனசு வச்சு ஒருமுறை மன்னிச்சுட்டா
கடவுளும் கூட வரவேணாம் வேணாம்

ஆண் : அடே பரசுராமா அடே பரசுராமா
கண்டோர் நடுங்கிடவே காதல் சிதைந்திடவே
சண்டாளி இவள் தலை ரெண்டாகவே துணிந்து
துண்டாக வெட்டவேணும்
ரத்த வெள்ளத்தில் ஜோராக துள்ள வேணும்

பெண் : பெற்ற தாயையே பிள்ளை கையினால்
வெட்டச் சொல்லலாமா தாயை வெட்டச் சொல்லலாமா
ஆண் : அட பிள்ளாய் புத்தியிழந்த பொல்லாத அரக்கியை
கொல்லாமல் விடலாமா
அட பிள்ளாய் புத்தியிழந்த பொல்லாத அரக்கியை
கொல்லாமல் விடலாமா

பெண் : தந்தை சொல்லைப் போல் தலையை வாங்கிட
தயங்காதே மகனே
தந்தை சொல்லைப் போல் தலையை வாங்கிட
தயங்காதே மகனே

ஆண் : அந்த நாள் செய்த ஊழ்வினை தானோ
அறியேனே அம்மா
பெற்ற தாயையே பிள்ளை கையினால்
வெட்டச் சொல்லலாமா………
தாயை வெட்டச் சொல்லலாமா………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here