Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Male : Ezhulagum neeyae ..
Ezhu kadalum neeyae
Female : Ezhupirappum neeyae
Endrum arulvaai
Both : Muruga muruga muruga
Male : Boomiellam kaathu nirkkum
Mannavanae pon malarae shanmuga
Female : Poigaiyilae poothezhundha
Vannamalar thaamraiyae saravana
Male : Boomiellam kaathu nirkkum
Mannavanae pon malarae shanmuga
Female : Poigaiyilae poothezhundha
Vannamalar thaamraiyae saravana
Male : Om muruga vel muruga
Female : Om muruga vel muruga
Male : Karthigai pen kai valarndha kaarthigeya
Chorus : Karthigeya karthigeya karthigeya
Female : Kadal kadanthum manadhu thotta subramanya
Chorus : Subramanya subramanya subramanya
Male : Karthigai pen kai valarndha kaarthigeya
Female : Kadal kadanthum manadhu thotta subramanya
Male : Thaththuvathin porul uraitha saaminaadha
Female : Dharmathirkku vettri thandha senthil naadha
Chorus : Om muruga lord muruga
Om muruga lord muruga
Male : Boomiellam kaathunirkkum
Mannavanae pon malarae shanmugha
Female : Poigaiyilae poothelundha
Vannamalar thaamaraiyae saravana
Both : Om muruga vel muruga
Om muruga vel muruga
Male : Kadhavu thatti kai neetti
Kai koduppaan vel murugan
Kavalaiyilae avanai ennu
Kadan adaippaan vel murugan
Female : Maalai yittu vilakkettru
Manam mudipaan vel murugan
Vazhithunaikku azhaithu vidu
Vandhu nirppaan velmurugan
Male : Oru kaalai izhandhavarkku
Maru kaalae kaarthikeyan
Chorus : Karthigeya karthigeya karthigeya
Female : Oona kann izhandhavarkku
Gyaana kann subramanyan
Chorus : Subramanya subramanya subramanya
Male : Thaaiyilla pillaikatkku
Thaaiyaagum vadivelan
Female : Thaan enbar aanavathai
Thagartheriyum siva balan
Both : Om muruga vel muruga
Om muruga vel muruga
Chorus : Karthigeya karthigeya karthigeya
Lord muruga lord muruga lord muruga
Subramanya subramanya subramanya
Om muruga om muruga om muruga
பாடகர்கள் : டி. எம் . சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஏழுலகும் நீயே…..ஏழு கடலும் நீயே…..
பெண் : எழுப்பிறப்பும் நீயே…என்றும் அருள்வாய்….
இருவரும் : முருகா………முருகா……..முருகா….
ஆண் : பூமியெல்லாம் காத்து நிற்கும் மன்னவனே
பொன் மலரே ஷண்முகா….
பெண் : பொய்கையிலே பூத்தெழுந்த
வண்ணமலர் தாமரையே சரவணா……
ஆண் : பூமியெல்லாம் காத்து நிற்கும் மன்னவனே
பொன் மலரே ஷண்முகா….
பெண் : பொய்கையிலே பூத்தெழுந்த
வண்ணமலர் தாமரையே சரவணா……
ஆண் : ஓம் முருகா……வேல்முருகா……
பெண் : ஓம் முருகா…….வேல்முருகா…….
ஆண் : கார்த்திகை பெண் கண் வளர்ந்த கார்த்திகேயா
குழு : கார்த்திகேயா கார்த்திகேயா கார்த்திகேயா
பெண் : கடல் கடந்தும் மனது தொட்ட சுப்ரமண்யா
குழு : சுப்ரமண்யா சுப்ரமண்யா சுப்ரமண்யா
ஆண் : கார்த்திகை பெண் கண் வளர்ந்த கார்த்திகேயா
பெண் : கடல் கடந்தும் மனது தொட்ட சுப்ரமண்யா
ஆண் : தத்துவத்தின் பொருள் உரைத்த சாமிநாதா
பெண் : தர்மத்திற்கு வெற்றி தந்த செந்தில் நாதா
குழு : ஓம் முருகா ….லார்ட் முருகா
ஓம் முருகா ….லார்ட் முருகா
ஆண் : பூமியெல்லாம் காத்து நிற்கும் மன்னவனே
பொன் மலரே ஷண்முகா….
பெண் : பொய்கையிலே பூத்தெழுந்த
வண்ணமலர் தாமரையே சரவணா……
இருவரும் : ஓம் முருகா……வேல்முருகா……
ஓம் முருகா…….வேல்முருகா…….
ஆண் : கதவு தட்டி கை நீட்டி
கைக் கொடுப்பான் வேல்முருகன்
கவலையிலே அவனை எண்ணு
கடன் அடைப்பான் வேல் முருகன்
பெண் : மாலையிட்டு விளக்கேற்று
மணம் முடிப்பான் வேல் முருகன்
வழித்துணைக்கு அழைத்து விடு
வந்து நிற்பான் வேல்முருகன்
ஆண் : ஒரு கால் இழந்தவர்க்கு
மறு காலே கார்த்திகேயன்
குழு : கார்த்திகேயா கார்த்திகேயா கார்த்திகேயா
பெண் : ஊனக் கண் இழந்தவர்க்கு
ஞானக் கண் சுப்ரமண்யன்
குழு : சுப்ரமண்யா சுப்ரமண்யா சுப்ரமண்யா
ஆண் : தாயில்லா பிள்ளைகட்கு
தாயாகும் வடிவேலன்
பெண் : தான் என்பார் ஆணவத்தை
தகர்த்தெறியும் சிவபாலன்
இருவரும் : ஓம் முருகா……வேல்முருகா……
ஓம் முருகா…….வேல்முருகா…….
குழு : கார்த்திகேயா கார்த்திகேயா கார்த்திகேயா
லார்ட் முருகா லார்ட் முருகா லார்ட் முருகா
சுப்ரமண்யா சுப்ரமண்யா சுப்ரமண்யா
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா