Singer : Malaysia Vasudevan

Music by : Devendran

Male : Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi
Saami enna saami adhu kozhai saami
Thunbangal kandaal kanmoodi kondaal
Koyilgalum ingae thevaiyaa

Male : Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi
Saami enna saami adhu kozhai saami

Male : Thuttukkaaga ennenna vashangal
Kettu pona pinnaalae koshangal
Oottukkaaga ennenna jaalangal
Oodum neeril pottaargal kolangal

Male : Vannangal suvar engum vannangal
Chinnangal avamaana chinnangal
Ipothu vaadhaadu eppothum poraadu
Paattu paadi panjam theeraathu

Male : Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi
Saami enna saami adhu kozhai saami

Male : Kattupaadu endrellam kooruvaan
Kaasukkaaga mathamellam maaruvaan
Katchikkaaga veeran pola pesuvaan
Kaasai vaangi kondaalo yaeshuvaan

Male : Pitchaithaan ellaamae pitchaithaan
Kotchaithaan nigalkaalam kotchaithaan
Yuththangal illaamal raththangal sinthaamal
Yaezhai vaazha yogam illaiyo

Male : Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi
Saami enna saami adhu kozhai saami

Male : Karunai konda nenjangal dheivangal
Kanneer maattrum ullangal koyilgal
Puththan gaandhi sonnaargal paadangal
Purinthu kondathu yaarendru paarungal

Male : unmaikku oru naalum azhivillai
Nanmaikku oru naalum mudivillai
Maaratha anbodu vaazhgindra panbaadu
Konda ullam koyil aagaathaa….

Male : Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi
Saami enna saami adhu kozhai saami
Thunbangal kandaal kanmoodi kondaal
Koyilgalum ingae thevaiyaa

Male : Bhoomi enna bhoomi idhu yaezhai bhoomi
Saami enna saami adhu kozhai saami

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி
துன்பங்கள் கண்டால் கண்மூடி கொண்டால்
கோயில்களும் இங்கே தேவையா…

ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி

ஆண் : துட்டுக்காக என்னென்ன வேஷங்கள்
கெட்டுப் போன பின்னாலே கோஷங்கள்
ஓட்டுக்காக என்னென்ன ஜாலங்கள்
ஓடும் நீரில் போட்டார்கள் கோலங்கள்

ஆண் : வண்ணங்கள் சுவர் எங்கும் வண்ணங்கள்
சின்னங்கள் அவமான சின்னங்கள்
இப்போது வாதாடு எப்போதும் போராடு
பாட்டுப் பாடி பஞ்சம் தீராது……

ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி

ஆண் : கட்டுப்பாடு என்றெல்லாம் கூறுவான்
காசுக்காக மதமெல்லாம் மாறுவான்
கட்சிக்காக வீரன் போல் பேசுவான்
காசை வாங்கிக் கொண்டாலோ ஏசுவான்

ஆண் : பிச்சைதான் எல்லாமே பிச்சைதான்
கொச்சைதான் நிகழ்காலம் கொச்சைதான்
யுத்தங்கள் இல்லாமல் ரத்தங்கள் சிந்தாமல்
ஏழை வாழ யோகம் இல்லையோ…

ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி

ஆண் : கருணை கொண்ட நெஞ்சங்கள் தெய்வங்கள்
கண்ணீர் மாற்றும் உள்ளங்கள் கோயில்கள்
புத்தன் காந்தி சொன்னார்கள் பாடங்கள்
புரிந்து கொண்டது யாரென்று பாருங்கள்

ஆண் : உண்மைக்கு ஒரு நாளும் அழிவில்லை
நன்மைக்கு ஒரு நாளும் முடிவில்லை
மாறாத அன்போடு வாழ்கின்ற பண்பாடு
கொண்ட உள்ளம் கோயில் ஆகாதா……

ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி
துன்பங்கள் கண்டால் கண்மூடி கொண்டால்
கோயில்களும் இங்கே தேவையா…

ஆண் : பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here