Singer : K. B. Sundarambal

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Boomi endhan sondhamendru
Ennugindra nenjam ondru
Mannan endra peril nindru
Narthana maaduvadhu sakthiyai meerudhu amma

Female : Idi pirandhu mazhai pirandhahellam
Veyil pirandhu aval nadathum
Leelai endru ennam amma
Aaduthu kottram aaduthu magudam
Paaduthu thannai meerudhu unnai
Bakthiyai kaakum sathiya naayagi amma
Amma aa…aaa…amma

Female : Sakthiyenum deivam konda padai veedu
Sakthiyenum deivam konda padai veedu
Indha ulagam muluvathum avalodu
Sakthiyenum deivam konda padai veedu
Indha ulagam muluvathum avalodu
Sakthiyenum deivam konda padai veedu

Female : Bakthi seiyum makkal ulla idamengum
Aval pala peril vaazhugindraal uyirodu
Bakthi seiyum makkal ulla idamengum
Aval pala peril vaazhugindraal uyirodu

Female : Kaali maariyena aadhi deviyena
Annai konda nooru pergal arivaayoo

Female : Sakthiyenum deivam konda padai veedu

Female : Unmai kandavargal thannai
Vendravargal kandaargal
Dhinam unnai aalvadhoru penmai
Endravargal sonnargal

Female : Annaiyindri unnai
Endha veetil pettrargal
Sakthiyandri bakthiyandri
Enna kattraargal

Female : Samayapurathil ulavum oruthiyai
Anbargal azhaippadhu mahamaayi
Thiruverkaattinil vaazhum oruthiyai
Anbargal azhaipathu karumaari

Female : Padavettammaal aval perae
Palaiyam enbathum aval oore
Muthalammanum aval thaane
Moogaambiyum aval thaane
Thanjaiyil vaazhum mahamaayi
Tharuvaal arulae sivasakthi
Sakthi… sakthi sakthi

பாடகி : கே. பி. சுந்தராம்பாள்

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : பூமி எந்தன் சொந்தமென்று
எண்ணுகின்ற நெஞ்சமொன்று
மன்னன் என்ற பேரில் நின்று
நர்த்தன மாடுவது சக்தியை மீறுது அம்மா

பெண் : இடி பிறந்து மழை பிறந்ததெல்லாம்
வெயில் பிறந்து இவள் நடத்தும்
லீலை என்று எண்ணம் அம்மா
ஆடுது கொற்றம் ஆடுது மகுடம்
பாடுது தன்னை மீறுது உன்னை
பக்தியைக் காக்கும் சத்திய நாயகி அம்மா……..
அம்மா……..ஆஅ..ஆ..அம்மா……..

பெண் : சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
இந்த உலகம் முழுவதும் அவளோடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
இந்த உலகம் முழுவதும் அவளோடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு

பெண் : பக்தி செய்யும் மக்கள் உள்ள இடமெங்கும்
அவள் பல பேரில் வாழுகின்றாள் உயிரோடு
பக்தி செய்யும் மக்கள் உள்ள இடமெங்கும்
அவள் பல பேரில் வாழுகின்றாள் உயிரோடு

பெண் : காளி மாரியென ஆதி தேவியென
அன்னை கொண்ட நூறு பேர்கள் அறிவாயோ

பெண் : சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு

பெண் : உண்மை கண்டவர்கள் தன்னை
வென்றவர்கள் கண்டார்கள் தினம்
உன்னை ஆள்வதொரு பெண்மை
என்றவர்கள் சொன்னார்கள்

பெண் : அன்னையன்றி உன்னை
எந்த வீட்டில் பெற்றார்கள்
சக்தியன்றி பக்தியின்றி
என்ன கற்றார்கள்

பெண் : சமயபுரத்தினில் உலவும் ஒருத்தியை
அன்பர்கள் அழைப்பது மகமாயி
திருவேற்காட்டினில் வாழும் ஒருத்தியை
அன்பர்கள் அழைப்பது கருமாரி

பெண் : படவேட்டம்மாள் அவள் பேரே
பாளையம் அன்பதும் அவள் ஊரே
முத்தாளம்மனும் அவள்தானே
மூகாம்பிகையும் அவள்தானே
தஞ்சையில் வாழும் மகமாயி
தருவாள் அருளே சிவசக்தி
சக்தி சக்தி சக்தி…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here