Singers : Sujatha Mohan and Mano

Music by : Deva

Chorus : Mm….mmmm….mmmm….
Mmmm…mmm….mmm….mmm…
Mmmm…mmm….mmm….mmm…
Mmmm…mmm….mmm….

Female : Boy friendai paarthal
Vara soll nilavae en nilavae
Paarthu romba naal aanathae
Nilavae ne nilavae

Female : Avan nadaiyo thaniazhagu
Udaiyo thaniyazhagu
Appadiyor aanazhagu
Aayirathil orrazhagu

Male : Boy friend thaan pakkam vanthaan
Nilavae en nilavae
Paavai ennai paarkavilayae
Nilavae kel nilavae

Male : Aval nadithaal thaniyazhagu
Thudithaal thaniyazhagu
Oodalilae orazhagu
Kudalilae noorazhagu

Female : Boy friendai paarthal
Vara soll nilavae en nilavae

Chorus : ……………………………….

Female : Un vaalibam pollathathu
Un vizhiyinil thadukki vizhunthuvitten
Nee udhava varavillayae

Male : Un mohanam ponnanthu
Unai vizhunthathum eduthu madiyil vaithen
Nee unadhu vasam illaiyae

Female : Enakendru swasangal
Thaniyaaga kedaiyathu
Iruvarukkum uyir kaatru
Ondrae thaan enum bothu

Male : Indha uravugal udaiyathu
Idhai udaipavan kedaiyathu
Inghu iravugal aanaal
Viragangal namadhu idhayathai kudaiyathu

Female : Boy friendai paarthal
Vara soll nilavae en nilavae
Male : Paavai ennai paarkavilayae
Nilavae kel nilavae

Chorus : ……………………………….

Male : Chandrodhayam suryodhayam
Un iru vizhi kodutha iravalgalo
Ena ulagam ninaikindrathae

Female : Santhosamum sangedhamum
Nee maruvida vilaiyum aruvigalo
En manadhu nenaikindradhu

Male : Idhu pol thinam thorum
Nanaintha padi irupoma
Naan yaaro nee yaaro
Namai naamae marapoma

Female : Un viral nagam padum bothu
Intha veenaikku valikathu
Enai thoda inimel nee thinasari meetu
Enakadhu valikadhu

Male : Boy friend thaan pakkam vanthaan
Nilavae en nilavae
Paavai ennai paarkavilayae
Nilavae kel nilavae

Female : Avan nadaiyo thaniazhagu
Udaiyo thaniyazhagu
Appadiyor aanazhagu
Aayirathil orrazhagu

Male : Boy friend thaan pakkam vanthaan
Nilavae en nilavae
Female : Paarthu romba naal aanathae
Nilavae ne nilavae

பாடகர்கள் : மனோ மற்றும் சுஜாதா மோகன்

இசை அமைப்பாளர் : தேவா

குழு : ம்ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்….
ம்ம்…..ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்..
ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….

பெண் : பாய் பிரெண்டை பார்த்தால்
வரச்சொல்லு நிலவே என் நிலவே
பார்த்து ரொம்ப நாளானதே
நிலவே என் நிலவே

பெண் : அவன் நடையோ தனியழகு
உடையோ தனியழகு
அப்படியோர் ஆணழகு
ஆயிரத்தில் ஓரழகு

ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்
நிலவே சொல் நிலவே
பாவை என்னை பார்க்கவில்லையே
நிலவே கேள் நிலவே

ஆண் : அவள் நடித்தால் தனியழகு
துடித்தால் தனியழகு
ஊடலிலே ஓரழகு
கூடலிலே நூறழகு

பெண் : பாய் பிரெண்டை பார்த்தால்
வரச்சொல்லு நிலவே என் நிலவே

குழு : ……………………………..

பெண் : உன் வாலிபம் பொல்லாதது
உன் விழியினில் தடுக்கி விழுந்துவிட்டேன்
நீ உதவ வரவில்லையே

ஆண் : உன் மோகனம் பொன்னானது
உனை விழுந்ததும் எடுத்து மடியில் வைத்தேன்
நீ உனது வசம் இல்லையே

பெண் : எனக்கென்றே தனியாக
ஸ்வாசங்கள் கிடையாது
இருவருக்கும் உயிர்காற்று
ஒன்றேதான் எனும்போது

ஆண் : இந்த உறவுகள் உடையாது
இதை உடைப்பவன் கிடையாது
இங்கு இரவுகள் ஆனால்
விரகங்கள் நமது இதயத்தை குடையாது

பெண் : பாய் பிரெண்டை பார்த்தால்
வரச்சொல்லு நிலவே என் நிலவே
ஆண் : பாவை என்னை பார்க்கவில்லையே
நிலவே கேள் நிலவே

குழு : ரு ரு ரு ரு……..
ரு ரு ரு ரு……..
………………………………..

ஆண் : சந்திரோதயம் சூர்யோதயம்
உன் இருவிழி கொடுத்த இரவல்களோ
என உலகம் நினைக்கின்றதே

பெண் : சந்தோஷமும் சங்கீதமும்
நீ மருவிட விளையும் அருவிகளோ
என் மனது நினைக்கின்றதே

ஆண் : நாம் இதுபோல் தினம்தோறும்
நனைந்தபடி இருப்போமா
நான் யாரோ நீ யாரோ
நமை நாமே மறப்போமா

பெண் : உன் விரல் நகம் படும்போது
இந்த வீணைக்கு வலிக்காது
எனை தொட இனிமேல்
நீ தினசரி மீட்டு எனக்கது சலிக்காது

ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்
நிலவே சொல் நிலவே
பாவை என்னை பார்க்கவில்லையே
நிலவே கேள் நிலவே

பெண் : அவன் நடையோ தனியழகு
உடையோ தனியழகு
அப்படியோர் ஆணழகு
ஆயிரத்தில் ஓரழகு

ஆண் : பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான்
நிலவே சொல் நிலவே
பெண் : பார்த்து ரொம்ப நாளானதே
நிலவே என் நிலவே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here