Buthiyum Vanthatha Song Lyrics is a track from Mamiyarum Oru veettu Marumagale – Tamil Movie 1961, Starring S. S. Rajendran, K. Balaji, V. K. Ramasamy, S. V. Subbaiah, M. N. Rajam, Devika, M. Saroja, C. K. Saraswathi and S. N. Lakshmi. This song was sung by C. S. Jayaraman, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by A. Maruthakasi.

Singer : C. S. Jayaraman

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : A. Maruthakasi

Male : Buthiyum vanthatha sollu
Nalla buthiyum vanthatha sollu
Manamae ponadhu pogattum nal vazhi sellu
Muthiya aanava noiyai
Thalai moozhgiye aatrinil karaithu vittaaya
Buthiyum vanthatha sollu

Male : Maamiyai madhikkaamal neeyae
Un manam ponapadiellaam theengu seidhaaye
Nee seidha theemai ellamae
Nee seidha theemai ellamae
Peiyaai nithamum unnaiyae virattudha ammae
Buthiyum vanthatha sollu

Male : Maganaiyum marumagalaiyum nee verattiyae
Un magalaiyum marumaganaiyum vara vazhathaaiye neeye
Maganaiyum marumagalaiyum nee verattiyae
Un magalaiyum marumaganaiyum vara vazhathaaiye neeye
Sugam peravae ninaithaaye thaaye
Sugam peravae ninaithaaye
Maappillai kudithu kudithu unnai thuratha nondhaaye
Buthiyum vanthatha sollu

Male : Mangaiyin anikalan adakkam
Aval madhippu kodukkanum samamaai elloorkkum
Maamiyumoru veetu marumagalae
Maamiyumoru veetu marumagalae
Uttra manidhan naan solgiren maravadhae magale
Buthiyum vanthatha sollu
Manamae ponadhu pogattum nal vazhi sellu
Buthiyum vanthatha sollu

Male : Maathare ulagathin kangal
Maathare ulagathin kangal
Avargal pasathilae ulladhu kudumbathin sugangal
Maamiyumoru veetu marumagalae
Maamiyumoru veetu marumagalae
Idhai maravadha veed ellam sorgam manmele

பாடகர் : சி. எஸ். ஜெயராம்

இசை அமைப்பாளர் : பெந்தியாலா நாகேசுவர ராவ்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : புத்தியும் வந்ததா சொல்லு
நல்ல புத்தியும் வந்ததா சொல்லு
மனமே போனது போகட்டும் நல் வழி செல்லு
முத்திய ஆணவ நோயை
தலை மூழ்கியே ஆற்றினில் கரைத்து விட்டாயா
புத்தியும் வந்ததா சொல்லு

ஆண் : மாமியை மதிக்காமல் நீயே உன்
மனம் போனபடியெல்லாம் தீங்கு செய்தாயே
நீ செய்த தீமை எல்லாமே
நீ செய்த தீமை எல்லாமே
பேயாய் நித்தமும் உன்னையே விரட்டுதா அம்மே…
புத்தியும் வந்ததா சொல்லு

ஆண் : மகனையும் மருமகளையும் நீ விரட்டியே
உன் மகளையும் மருமகனையும் வரவழைத்தாயே நீயே
மகனையும் மருமகளையும் நீ விரட்டியே
உன் மகளையும் மருமகனையும் வரவழைத்தாயே நீயே
சுகம் பெறவே நினைத்தாயே தாயே
சுகம் பெறவே நினைத்தாயே தாயே
மாப்பிள்ளை குடித்து குடித்து உன்னை துரத்த நொந்தாயே
புத்தியும் வந்ததா சொல்லு

ஆண் : மங்கையின் அணிகலன் அடக்கம்
அவள் மதிப்பு கொடுக்கணும் சமமாய் வல்லோர்க்கும்
மாமியும் ஒரு வீட்டு மருமகளே
மாமியும் ஒரு வீட்டு மருமகளே
உற்ற மனிதன் நான் சொல்கிறேன் மறவாதே மகளே
புத்தியும் வந்ததா சொல்லு
மனமே போனது போகட்டும் நல் வழி செல்லு
புத்தியும் வந்ததா சொல்லு

ஆண் : மாதரே உலகத்தின் கண்கள்
மாதரே உலகத்தின் கண்கள்
அவர்கள் பாசத்திலே உள்ளது குடும்பத்தின் சுகங்கள்
மாமியும் ஒரு வீட்டு மருமகளே
மாமியும் ஒரு வீட்டு மருமகளே
இதை மறவாத வீடு எல்லாம் சொர்கம் மண்மேலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here