Singer : Ghantasala
Music by : Master Venu
Lyrics by : Udumalai Narayanakavi
Male : Carilae savari seiyum
Kannam sivandha ponnamma
Un kannam sivandhadhu enna endru nee
Enni paarthdhum undaama
Male : Ooril vaazhum ezhai pennugalin
Uzhaippin panamae unaveaagi
Ooril vaazhum ezhai pennugalin
Uzhaippin panamae unaveaagi
Unavin rasndhaan kozhuppaai maari
Un melae jollikudhu theriyuma
Male : Carilae savari seiyum
Kannam sivandha ponnamma
Un seerum sirappulla singaara vaazhvai
Kooruven konjam nidhaniyamma
Male : Panju methai manjam meedhu
Paduthu thoongum ponnamma
Panju methai manjam meedhu
Paduthu thoongum ponnamma
Un panju methai manjam vandhadhai
Nenjil ninaithadhum undamoo
Male : Vanjamillar vazhakkamaanar
Vaazha theriya ezhaiyaanaar
Vanjamillar vazhakkamaanar
Vaazha theriya ezhaiyaanaar
Kanjikaagavae kastapadubavar
Kai thiramai enna theriyuma
Male : Carilae savari seiyum
Kannam sivandha ponnamma
Un seerum sirappulla singaara vaazhvai
Kooruven konjam nidhaniyamma
Male : Piditha pidikkul adangum salla
Udaikkul minukkum ponnamma
Piditha pidikkul adangum salla
Udaikkul minukkum ponnamma
Nee uduthum saelaiyundaana unmaiyai
Unarndhu paarthadhum undaamoo
Male : Kizhindha kovanam tharitham varumai
Piditha maandhrgal neithaar kandaai
Kizhindha kovanam tharitham varumai
Piditha maandhrgal neithaar kandaai
Uzhaikka pala per sugikka sila per
Irukka inimel mudiyathamma
Male : Carilae savari seiyum
Kannam sivandha ponnamma
Un seerum sirappulla singaara vaazhvai
Kooruven konjam nidhaniyamma
பாடகர் : கண்டசாலா
இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி
ஆண் : காரிலே சவாரி செய்யும்
கன்னம் சிவந்த பொன்னம்மா
உன் கன்னம் சிவந்தது என்ன என்று
நீ எண்ணிப் பார்த்ததும் உண்டாமா..
ஆண் : ஊரில் வாழும் ஏழைப் பெண்களின்
உழைப்பின் பணமே உணவேயாகி
ஊரில் வாழும் ஏழைப் பெண்களின்
உழைப்பின் பணமே உணவேயாகி
உணவின் ரசந்தான் கொழுப்பாய் மாறி
உன் மேலே ஜொலிக்குது தெரியுமா
ஆண் : காரிலே சவாரி செய்யும்
கன்னம் சிவந்த பொன்னம்மா
உன் சீரும் சிறப்புள்ள சிங்கார வாழ்வைக்
கூறுவேன் கொஞ்சம் நிதானியம்மா..
ஆண் : பஞ்சு மெத்தை மஞ்சம் மீது
படுத்து தூங்கும் பொன்னம்மா
பஞ்சு மெத்தை மஞ்சம் மீது
படுத்து தூங்கும் பொன்னம்மா
உன் பஞ்சு மெத்தை மஞ்சம் வந்ததை
நெஞ்சில் நினைத்ததும் உண்டாமா
ஆண் : வஞ்சமில்லார் வழக்கமானார்
வாழத் தெரியா ஏழையானார்
வஞ்சமில்லார் வழக்கமானார்
வாழத் தெரியா ஏழையானார்
கஞ்சிக்காகவே கஷ்டப்படுபவர்
கைத் திறமை என்ன தெரியுமா
ஆண் : காரிலே சவாரி செய்யும்
கன்னம் சிவந்த பொன்னம்மா
உன் சீரும் சிறப்புள்ள சிங்கார வாழ்வைக்
கூறுவேன் கொஞ்சம் நிதானியம்மா..
ஆண் : பிடித்த பிடிக்குள் அடங்கும் சல்லா
உடைக்குள் மினுக்கும் பொன்னம்மா
பிடித்த பிடிக்குள் அடங்கும் சல்லா
உடைக்குள் மினுக்கும் பொன்னம்மா
நீ உடுத்தும் சேலையுண்டான உண்மையை
உணர்ந்து பார்த்ததும் உண்டாமா….
ஆண் : கிழிந்த கோவணம் தரித்தும்
வறுமை பிடித்த மாந்தர்கள் நெய்தார் கண்டாய்
கிழிந்த கோவணம் தரித்தும்
வறுமை பிடித்த மாந்தர்கள் நெய்தார் கண்டாய்
உழைக்கப் பல பேர் சுகிக்கச் சில பேர்
இருக்க இனிமேல் முடியாதம்மா…..
ஆண் : காரிலே சவாரி செய்யும்
கன்னம் சிவந்த பொன்னம்மா
உன் சீரும் சிறப்புள்ள சிங்கார வாழ்வைக்
கூறுவேன் கொஞ்சம் நிதானியம்மா..