Singers : P. Susheela and Savithri
Music by : T. Chalapathi Rao
Lyrics by : Kannadasan
Female : Oru ooril oru raja rani
Unnai pola avangalukkum oru pulla
Athai kanna moodi thoongasonna
Kadhai sollunu kaetkkum
Kaalakaalam saapida sonna
Kadhai sollunu kaetkkum
Female : Avanga amma chuma kadhaigal solli
Aluthu poai vitaal
Appdi irukkumbothu raja
Vaettaikku puraptaaar…
Baby : Yaemma….
Female : Naatu makkal potta paiyirai
Kaatu mirugam azhichudhaam
Aatai kadichu maatai kadichudhaam
Aalaiyum kooda kadichudhaam
Baby : Appuram
Female : Udane raja pattathu kudhiraiyai
Kondu varacholli paanjaaru mela
Baby : Paanchi
Female : Chalchalonu savari vitaar
Tak tak tak tak tak raja
Chalchalonu savari vitaar
Tak tak tak tak tak
Female : Savukkal adithu laaganai izhuthu
Kudhirayai vitaaru raja
Chalchalonu savari vitaar
Tak tak tak tak tak
Female : Kallaum karadum niraintha vazhiyil
Gaelap vittaru
Kallaum karadum niraintha vazhiyil
Gaelap vittaru
Kathiyai uruvi karampidicharu
Kaatile nuzhaincharu raja
Chalchalonu savari vitaar
Tak tak tak tak tak
Female : Villai eduthu ambai pooti
Mazhayaa pozhinjaaru
Vilangugal ellam verunda oda
Suzhandru vandhaaru
Female : Idathu kaaluku simitta koduthu
Eeenu sonnaru
Idathu kaaluku simitta koduthu
Eeenu sonnaru
Siragilatha paravai pola
Kudhirai parandhadhu paar raja
Chalchalonu savari vitaar
Tak tak tak tak tak
Baby : Appurama
Female : Karigal vandhana narigal vandhana
Karigal vandhana narigal vandhana nadunadungave
Kaatu erumai kootam vandhana kidukidunkkave
Kariyai pandrigal idikka vandhana
Karadi manthigal kadikka vandhana
Kariyai pandrigal idikka vandhana
Karadi manthigal kadikka vandhana
Kalai maan mudhal maraiyodigal
Kaanamal idampeyarnthana……..
Karigal vandhana narigal vandhana
Female : Kaal odinjadhu vaal arundhadhu
Kazhuthodindhadhu
Nalla kaalam pirandhadhu
Kalappai piditha uzhavar manasil
Kavalai ozhinjadhu thirumba kudhirai parandhadhu
Female : Chalchalonu savari vitaar
Tak tak tak tak tak rajaa
Chalchalonu savari vitaar
Tak tak tak tak tak
Baby : Appurama….
Female : Rajavukku thaagam eduthathu
Oru thadakathai paarthar
Thaniyila kaiya vachaaru
Female : Vandhadhe bootham vandhadhe
Vandhadhe bootham vandhadhe
Manmele nilaamal magarajan munnale
Thaneerai unnaamal thadai seidhu malaipole
Vandhadhe bootham andhadhe
Female : Indha thadagam en sondhamaagum
Engu vandhai endru ittadhe saabam
Indha thadagam en sondhamaagum
Engu vandhai endru ittadhe saabam
…. kiliyaai kavalar silayaai
Kallaanadhu innum solonum
Kadhai mitcham sollava innum sollava
Baby : Sollamma……
Female : Vaettaikku pona rja
Vetukku seekiram varanumnu
Rani kadavulai vaendinaa…..
Baby : Yeppdi..?
Female : Aa…aa….aadhavurunaiye alathini yaaro
Aandavane kadaikan paar ennai
Aandavane kadaikan paar
Naadhan illadhu naan uyir vaazhaen
Naadhan illadhu naan uyir vaazhaen
Vaedhanai vilaga innale ennai
Aandavane kadai kan paar ennai
Aandavane kadai kan paar
Female : Arulam aandavan boodham thannai
Agniyaakki ottinaar
Arasanum kudhiraiyum boothathaale
Adaintha saabam maattrinar
Female : Uravaam maganai raaniyai enni
Udanae paraithanil yeri
Oorukku varugaiyil avarukku munne
Ullam vandhadhu meeri
Female : Varuvaar endru vizhi melae
Vizhi vaithirunthal maharani
Vanthitaaru ennum ninaivil
Vasal kadhavai thiranthaal
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சாவித்ரி
இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஒரு ஊரில் ஒரு ராஜா ஒரு ராணி
உன்னப் போலே அவங்களுக்கும் ஒரு புள்ள
அதை கண்ண மூடி தூங்க சொன்னா
கதை சொல்லுன்னு கேட்கும்
காலாகாலம் சாப்பிட சொன்னா நான்
கதை சொல்லுன்னு கேட்கும்
பெண் : அவங்கம்மா சும்மா கதைகள் சொல்லி
அலுத்துப் போய்விட்டாள்
அப்படி இருக்கும்போது ராஜா
வேட்டைக்கு புறப்பட்டார்…
பெண் : ஏம்மா…..
பெண் : நாட்டு மக்கள் போட்டப் பயிரை
காட்டு மிருகம் அழிச்சுதாம்
ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு
ஆளையும் கூட கடிச்சுதாம்
பெண் : அப்புறம்…
பெண் : உடனே ராஜா பட்டத்து குதிரையை
கொண்டு வரச் சொல்லி பாஞ்சாரு மேலே
பெண் : பாஞ்சி….
பெண் : சல்சலோன்னு சவாரி விட்டார்
டக் டக் டக் டக் டக் ராஜா
சல்சலோன்னு சவாரி விட்டார்
டக் டக் டக் டக் டக்
பெண் : சவுக்கால் அடித்து லகானை இழுத்து
குதிரையை விட்டாரு ராஜா
சல்சலோன்னு சவாரி விட்டார்
டக் டக் டக் டக் டக்
பெண் : கல்லும் கரடும் நிறைந்த வழியில்
கேளப் விட்டாரு
கல்லும் கரடும் நிறைந்த வழியில்
கேளப் விட்டாரு
கத்தியை உருவி கரம் பிடிச்சி
காட்டிலே நுழைஞ்சாரு ராஜா
பெண் : சல்சலோன்னு சவாரி விட்டார்
டக் டக் டக் டக் டக் ராஜா
பெண் : வில்லை எடுத்து அம்பை பூட்டி
மழையா பொழிஞ்சாரு
விலங்குகளெல்லாம் வெருண்டே ஓட
சுழன்று வந்தாரு
பெண் : இடது காலுக்கு சிமிண்டா கொடுத்து
ஈன்னு சொன்னாரு
இடது காலுக்கு சிமிண்டா கொடுத்து
ஈன்னு சொன்னாரு
சிறகில்லாத பறவை போலே
குதிரை பறந்தது பார் ராஜா
பெண் : சல்சலோன்னு சவாரி விட்டார்
டக் டக் டக் டக் டக் ராஜா
பெண் : அப்புறமா
பெண் : கரிகள் வந்தன நரிகள் வந்தன நடுநடுங்கவே
கரிகள் வந்தன நரிகள் வந்தன நடுநடுங்கவே
காட்டெருமை கூட்டம் வந்தன கிடுகிடுங்கவே
கரியை பந்திகள் இடிக்க வந்தன
கரடி மந்திகள் கடிக்க வந்தன
கரியை பந்திகள் இடிக்க வந்தன
கரடி மந்திகள் கடிக்க வந்தன
கலைமான் முதல் மறையோடிகள்
காணாமல் இடம் பெயர்ந்தன………
கரிகள் வந்தன நரிகள் வந்தன
பெண் : கால் ஓடிஞ்சது வால் அறுந்தது கழுத்தொடிஞ்சது
நல்ல காலம் பிறந்தது
கலப்பை பிடித்த உழவர் மனசில்
கவலை ஒழிஞ்சது திரும்ப குதிரை பறந்தது
பெண் : சல்சலோன்னு சவாரி விட்டார்
டக் டக் டக் டக் டக் ராஜா
சல்சலோன்னு சவாரி விட்டார்
டக் டக் டக் டக் டக் ராஜா
பெண் : அப்புறமா…..
பெண் : ராஜாவுக்கு தாகம் எடுத்தது
ஒரு தடாகத்தைப் பார்த்தாரு
தண்ணியில கையை வச்சாரு……
பெண் : வந்ததே பூதம் வந்ததே
வந்ததே பூதம் வந்ததே
மண் மேலே நில்லாமல் மகராஜன் முன்னாலே
தண்ணீரை உண்ணாமல் தடை செய்து மலைபோலே
வந்ததே பூதம் வந்ததே…
பெண் : இந்தத் தடாகம் என் சொந்தமாகும்
எங்கு வந்தாய் என்று இட்டதே சாபம்
இந்தத் தடாகம் என் சொந்தமாகும்
எங்கு வந்தாய் என்று இட்டதே சாபம்
………???? கிளியாய் காவலர் சிலையாய்
கல்லானது இன்னும் சொல்லோனும்
கதை மிச்சம் சொல்லவா இன்னும் சொல்லவா
பெண் : சொல்லம்மா……
பெண் : வேட்டைக்கு போன ராஜா
வீட்டுக்கு சீக்கிரம் வரணும்ன்னு
ராணி கடவுள வேண்டினா…..
பெண் : எப்படி…?
பெண் : ஆ…ஆ….ஆதரவுனையே அலதினி யாரே
ஆண்டவனே கடைக் கண் பார் என்னை
ஆண்டவனே கடைக் கண் பார்..
நாதன் இல்லாது நான் உயிர் வாழேன்
நாதன் இல்லாது நான் உயிர் வாழேன்
வேதனை விலக இந்நாளே என்னை
ஆண்டவனே கடைக் கண் பார்…..என்னை
ஆண்டவனே கடைக் கண் பார்
பெண் : அருளாம் ஆண்டவன் பூதம் தன்னை
அக்னியாக்கி ஓட்டினார்
அரசனும் குதிரையும் பூதத்தாலே
அடைந்த சாபம் மாற்றினார்
பெண் : உறவாம் மகனை ராணியை எண்ணி
உடனே பரிதனில் ஏறி
ஊருக்கு வருகையில் அவருக்கு முன்னே
உள்ளம் வந்தது மீறி
பெண் : வருவாரென்று வழி மேலே
விழி வைத்திருந்தாள் மகராணி
வந்திட்டாரு என்னும் நினைவில்
வாசல் கதவை திறந்தாள்………