Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Chandhira pirai paarthaen
Thozhi santhippu nigazhnthathadi
Chandhira pirai paarthaen
Thozhi santhippu nigazhnthathadi

Female : Manthiram pottathu pol enakkor
Mappillai kidaiththathdi
Manthiram pottathu pol enakkor
Mappillai kidaiththathdi

Female : Chandhira pirai paarthaen
Thozhi santhippu nigazhnthathadi

Female : Nagaraththu veedhiyil naayagan vanthaan
Jaadaiyil kandaenadi
Nangaiyar palarangu thiraiyittu vaiththaar
Thirumanam mudinthathadi

Female : Nagaraththu veedhiyil naayagan vanthaan
Jaadaiyil kandaenadi
Nangaiyar palarangu thiraiyittu vaiththaar
Thirumanam mudinthathadi thirumanam mudinthathadi
Thirumanam mudinthathadi

Female : Mugathirai potta pennukkum
Kadhal muthirai vizhunthathadi
Mudhaliravendraal adiyae manathu
Moganam padiththadi

Female : Chandhira pirai paarthaen
Thozhi santhippu nigazhnthathadi

Female : Aadiya nadhiyin odaththilae
Oor azhagiya manjamadi
Aanantham padiya nilaiyila
Naanum avaridam thanjamadi

Female : Aadiya nadhiyin odaththilae
Oor azhagiya manjamadi
Aanantham padiya nilaiyila
Naanum avaridam thanjamadi

Female : Moodiya udalin azhagai muzhuvathum
Avar vizhi paarththadi
Munniravil avar thodangiya kadhaiyum
Vidintha pin mudinthathadi

Female : Chandhira pirai paarthaen
Thozhi santhippu nigazhnthathadi

Female : Allah uraiththa kadamaiyai
Mudiththom ramzan vanthathadi
Avanai ninaiththu kaalgalai madiththu
Moondrulam vananguthadi
Moondrulam vananguthadi
Moondrulam vananguthadi

Female : Appa amma endrae paiyanin
Anbu valarnthathadi
Aandavan meedhu nambikkai vaippom
Aduththathum pirakkumadi

Female : Chandhira pirai paarthaen
Thozhi santhippu nigazhnthathadi
Manthiram pottathu pol enakkor
Mappillai kidaiththathdi
Mappillai kidaiththathdi
Mappillai kidaiththathdi

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : சந்திரப் பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி
சந்திரப் பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

பெண் : மந்திரம் போட்டது போல் எனக்கோர்
மாப்பிள்ளை கிடைத்ததடி
மந்திரம் போட்டது போல் எனக்கோர்
மாப்பிள்ளை கிடைத்ததடி

பெண் : சந்திரப் பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

பெண் : நகரத்து வீதியில் நாயகன் வந்தான்
ஜாடையில் கண்டேனடி
நங்கையர் பலரங்கு திரையிட்டு வைத்தார்
திருமணம் முடிந்ததடி

பெண் : நகரத்து வீதியில் நாயகன் வந்தான்
ஜாடையில் கண்டேனடி
நங்கையர் பலரங்கு திரையிட்டு வைத்தார்
திருமணம் முடிந்ததடி திருமணம் முடிந்ததடி
திருமணம் முடிந்ததடி

பெண் : முகத்திரை போட்ட பெண்ணுக்கும்
காதல் முத்திரை விழுந்ததடி
முதலிரவென்றால் அடியே மனது
மோகனம் படித்ததடி

பெண் : சந்திரப் பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

பெண் : ஆடிய நதியின் ஓடத்திலே
ஓர் அழகிய மஞ்சமடி
ஆனந்தம் பாடிய நிலையில்
நானும் அவரிடம் தஞ்சமடி

பெண் : ஆடிய நதியின் ஓடத்திலே
ஓர் அழகிய மஞ்சமடி
ஆனந்தம் பாடிய நிலையில்
நானும் அவரிடம் தஞ்சமடி

பெண் : மூடிய உடலின் அழகை முழுவதும்
அவர் விழி பார்த்ததடி
முன்னிரவில் அவர் தொடங்கிய கதையும்
விடிந்த பின் முடிந்ததடி

பெண் : சந்திரப் பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி

பெண் : அல்லா உரைத்த கடமையை
முடித்தோம் ரம்ஸான் வந்ததடி
அவனை நினைத்து கால்களை மடித்து
மூன்றுளம் வணங்குதடி
மூன்றுளம் வணங்குதடி
மூன்றுளம் வணங்குதடி

பெண் : அப்பா அம்மா என்றே பையனின்
அன்பு வளர்ந்ததடி
ஆண்டவன் மீது நம்பிக்கை வைப்போம்
அடுத்ததும் பிறக்குமடி

பெண் : சந்திரப் பிறை பார்த்தேன்
தோழி சந்திப்பு நிகழ்ந்ததடி
மந்திரம் போட்டது போல் எனக்கோர்
மாப்பிள்ளை கிடைத்ததடி
மாப்பிள்ளை கிடைத்ததடி
மாப்பிள்ளை கிடைத்ததடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here