Singers : T.M. Soundararajan and P.Susheela

Music by : M.S. Viswanathan

Male : { Chandrodayam
Oru pennanadho
Senthamarai iru kannanadho} (2)

Male : Ponoviyam
Endru peraanadho
En vaasal vazhiyaaga
Valam vanthadho

Male : Chandrodayam
Oru pennanadho
Senthamarai iru kannanadho

Female : { Kulir
Kaatru killaadha
Malarallavo kili
Vandhu kothaadha
Kani allavo } (2)

Female : Nizhal
Megam thazhuvaadha
Nilavallavo nenjodu
Nee sertha porulallavo

Female : Ennaalum
Piriyaadha uravallavo
Ilam sooriyan undhan
Vadivaanadho sevvaanamae
Undhan niramaanadho

Female : Pon maaligai
Undhan manamaanadho
En kaadhal uyir vaazha
Idam thanthadho

Female : Ilam sooriyan undhan
Vadivaanadho sevvaanamae
Undhan niramaanadho

Female : …………………………

Male : { Muthaaram
Sirikindra siripallavo
Ull nenjai thodugindra
Nerupallavo } (2)

Male : Sangeetham
Pozhigindra mozhiyallavo
Santhosam varugindra vazhiyallavo
En kovil kudikonda silaiyallavo

Male : Chandrodayam
Oru pennanadho
Senthamarai iru kannanadho

Female : Alaiyodu
Piravadha kadal illaiyae
Nizhalodu nadakaadha
Udal illaiyae

Female : Thudikaadha
Imaiyodu vizhi illaiyae
Thunaiyodu seraadha
Inam illaiyae en meni
Unathandri enadhillaiyae

Male : Ezhilodu
Ezhil serthu imai
Moodavo enakindha
Sugam vaanga thunai thedavo

Male : Malar meni
Thanai kandu
Magizhnthaadavo

Male : Manakindra
Thamizh mannil
Vilaiyaadavo kan
Jaadai kavi solla isai paadavo

Female : Ilam sooriyan undhan
Vadivaanadho sevvaanamae
Undhan niramaanadho

Male : Chandrodayam
Oru pennanadho
Senthamarai iru kannanadho

Female : ……………………

 

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு
கண்ணானதோ } (2)

ஆண் : பொன்னோவியம்
என்று பேரானதோ என்
வாசல் வழியாக வலம்
வந்ததோ

ஆண் : சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு
கண்ணானதோ

பெண் : { குளிர் காற்று
கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத
கனியல்லவோ } (2)

பெண் : நிழல் மேகம்
தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த
பொருளல்லவோ

பெண் : எந்நாளும்
பிரியாத உறவல்லவோ
இளஞ்சூரியன் உந்தன்
வடிவானதோ செவ்வானமே
உந்தன் நிறமானதோ

பெண் : பொன் மாளிகை
உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ
இடம் தந்ததோ

பெண் : இளஞ்சூரியன் உந்தன்
வடிவானதோ செவ்வானமே
உந்தன் நிறமானதோ

பெண் : ……………………..

ஆண் : { முத்தாரம் சிரிக்கின்ற
சிரிப்பல்லவோ உள் நெஞ்சைத்
தொடுகின்ற நெருப்பல்லவோ } (2)

ஆண் : சங்கீதம் பொழிகின்ற
மொழியல்லவோ சந்தோஷம்
வருகின்ற வழியல்லவோ
என் கோவில் குடி கொண்ட
சிலையல்லவோ

ஆண் : சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு
கண்ணானதோ

பெண் : அலையோடு
பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத
உடல் இல்லையே

பெண் : துடிக்காத
இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத
இனமில்லையே என் மேனி
உனதன்றி எனதில்லையே

ஆண் : எழிலோடு எழில்
சேர்த்து இமை மூடவோ
எனக்கிந்த சுகம் வாங்கத்
துணை தேடவோ

ஆண் : மலர் மேனி
தன்னை கண்டு
மகிழ்ந்தாடவோ

ஆண் : மணக்கின்ற
தமிழ் மண்ணில்
விளையாடவோ
கண் ஜாடை கவி
சொல்ல இசை பாடவோ

பெண் : இளஞ்சூரியன் உந்தன்
வடிவானதோ செவ்வானமே
உந்தன் நிறமானதோ

ஆண் : சந்திரோதயம்
ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு
கண்ணானதோ

பெண் : …………………….


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here