Singer : S. P. Balasubrahmanyam

Music by : Drums Sivamani

Chorus : Nee naan naan nee
Naam jaippom
Vaal naan thol nee
Naam jaippom

Male & Chorus : Arivaayutham polae
Oru anuvaayutham illai
Arivaayutham ethu enbathu
Puriyum ini naalai

Male & Chorus :
Mudiyaathathu mudiyum varai
Mudivenbathum illai
Azhiyaathathu azhiyum varai
Oivenbathum illai

Male : Che guevara che guevara
Neeyum naanum che guevera

Male : Aayuthangal thevai illai
Oodagangal kaiyil undu
Oodagam ennum kaigal munnae
Aayutham enna seiyum

Male : Kaattru pogaatha pakkam kooda
Kanngal paarkkum en thozha
Naadu muzhkindra poril sethaal
Endrum saavillai vaada
Ithu oodagam kaanum porkkalam

Male : Che guevara che guevara
Neeyum naanum che guevera

Male : Vizhuvathum meendum ezhuvathum
Intha ulagamae kanda sarithiram
Vizhunthavar meendum ezhunthidum
Kaalam viraivilae thondrum sathiyam

Male : Uzhaippavar ennum miga palar
Sinthum uthirathai naaigal kudippatha
Uyirinai thucham endruthaan enni
Iranginom oru kai paarkkavae
Ithu yutham yutham ini yuthamae

Male : Che guevara che guevara
Neeyum naanum che guevera

Male : Oodagam ennum raanuvam
Indru ezhunthathae naattai meetkkavae
Naattinai kaakkum senaigal moondru
Indru nammaiyum serthu naangada

Male : Kanam kanam saagum
Kozhai nee alla
Yugam yugam vaazhum veeranae
Kalathilae nindru irakkalaam
Meendum pirakkalaam enthan thozhanae
Ithu yutham yutham ini yuthamae

Chorus : Nee naan naan nee
Naam jaippom
Vaal naan thol nee
Naam jaippom

Male : Intha padai thorkkin
Ini entha padai vellum
Andam athu athirumpadi
Velvom ini vaada

Chorus : Intha padai thorkkin
Ini entha padai vellum
Andam athu athirumpadi
Velvom ini vaada

Male : Che guevara che guevara
Neeyum naanum che guevera
Che guevara che guevara
Neeyum naanum che guevera

Male : {Intha padai thorkkin
Ini entha padai vellum
Andam athu athirumpadi
Velvom ini vaada} (2)

 

பாடகர் : எஸ். பி பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : சிவ மணி

குழு : நீ நான் நான் நீ
நாம் ஜெயிப்போம்
வாள் நான் தோள் நீ
நாம் ஜெயிப்போம்

ஆண் மற்றும் குழு :
அறிவாயுதம் போலே
ஒரு அணு ஆயுதம் இல்லை
அறிவாயுதம் எதுவென்பது
புரியும் இனி நாளை

ஆண் மற்றும் குழு :
முடியாதது முடியும்வரை
முடிவென்பதும் இல்லை
அழியாதது அழியும்வரை
ஓய்வென்பதும் இல்லை

ஆண் : சேகுவேரா சேகுவேரா
நீயும் நானும் சேகுவேரா

ஆண் : ஆயுதங்கள் தேவையில்லை
ஊடகங்கள் கையில் உண்டு
ஊடகம் என்னும் கைகள் முன்னே
ஆயுதம் என்ன செய்யும்

ஆண் : காற்றுப் போகாத பக்கம்கூட
கண்கள் பார்க்கும் என் தோழா
நாடு முழ்கின்ற போரில் செத்தால்
என்றும் சாவில்லை வாடா
இது ஊடகம் காணும் போர்க்களம்

ஆண் : சேகுவேரா சேகுவேரா
நீயும் நானும் சேகுவேரா

ஆண் : விழுவதும் மீண்டும் எழுவதும்
இந்த உலகமே கண்ட சரித்திரம்
விழுந்தவர் மீண்டும் எழுந்திடும்
காலம் விரைவிலே தோன்றும் சத்தியம்

ஆண் : உழைப்பவர் என்னும் மிகப்பலர்
சிந்தும் உதிரத்தை நாய்கள் குடிப்பதா
உயிரினைத் துச்சம் என்றுதான் எண்ணி
இறங்கினோம் ஒரு கை பார்க்கவே
இது யுத்தம் யுத்தம் இனி யுத்தமே

ஆண் : சேகுவேரா சேகுவேரா
நீயும் நானும் சேகுவேரா

ஆண் : ஊடகம் என்னும் ராணுவம்
இன்று எழுந்ததே நாட்டை மீட்கவே
நாட்டினைக் காக்கும் சேனைகள் மூன்று
இன்று நம்மையும் சேர்த்து நான்கடா

ஆண் : கணம் கணம் சாகும்
கோழை நீ அல்ல
யுகயுகம் பாயும் வீரனே
களத்திலே நின்று இறக்கலாம்
மீண்டும் பிறக்கலாம் எந்தன் தோழனே
இது யுத்தம் யுத்தம் இனி யுத்தமே

குழு : நீ நான் நான் நீ
நாம் ஜெயிப்போம்
வாள் நான் தோள் நீ
நாம் ஜெயிப்போம்

ஆண் : இந்தப்படை தோற்கின்
இனி எந்தப்படை வெல்லும்
அண்டம் அது அதிரும்படி
வெல்வோம் இனி வாடா

குழு : இந்தப்படை தோற்கின்
இனி எந்தப்படை வெல்லும்
அண்டம் அது அதிரும்படி
வெல்வோம் இனி வாடா

ஆண் : சேகுவேரா சேகுவேரா
நீயும் நானும் சேகுவேரா
சேகுவேரா சேகுவேரா
நீயும் நானும் சேகுவேரா

ஆண் : {இந்தப்படை தோற்கின்
இனி எந்தப்படை வெல்லும்
அண்டம் அது அதிரும்படி
வெல்வோம் இனி வாடா} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here