Singers : K. J. Yesudass and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Pulamaipithan

Male : Love all
Female : Hoohoom love one

Male : Chendu malli poopol azhagiya panthu
Chendu malli poopol azhagiya panthu
Sealvizhi aadattum kadhalil vanthu
Love all

Female : Love one
Endrum intha idhayam oruvanukkendru
Endrum intha idhayam oruvanukkendru
Iruppathai koorattum viraivinil sendru

Female : Endrum intha idhayam oruvanukkendru
Iruppathai koorattum viraivinil sendru

Male : Gangaiyin sangamam kadalodu kanndaen
Mangaiyin sangamam paarththida vanthaen
Gangaiyin sangamam kadalodu kanndaen
Mangaiyin sangamam paarththida vanthaen

Female : Karai vazhi selvathu gangaiyin perumai
Murai vazhi selvathu mangaiyin peumai
Karai vazhi selvathu gangaiyin perumai
Murai vazhi selvathu mangaiyin peumai

Male : Chendu malli poopol azhagiya panthu
Sealvizhi aadattum kadhalil vanthu

Female : Aayiram naadugal sendru vanthaalum
Thaayaaga perumaiyai kaaththida vendum
Aayiram naadugal sendru vanthaalum
Thaayaaga perumaiyai kaaththida vendum

Male : Kaadhalum thaayaga perumaiyil ondru
Kaanattum adhaiyum ilamaiyil indru

Female : Chendu malli poopol azhagiya panthu
Male : Sealvizhi aadattum kadhalil vanthu

Male : Manthiram sollum manavarai kolam
Manathinil thondrum ovvoru naalum
Female : Ennuvathellaam nerinil kaanum
Punniyam irunthaal adhu engu pogum

Male : Chendu malli poopol azhagiya panthu
Love all
Female : Love one
Male : Love all
Female : Love one love one

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : லவ் ஆல்
பெண் : ஹுஹும் லவ் ஒன்

ஆண் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து
லவ் ஆல்

பெண் : லவ் ஒன்…..
என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று
என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று
இருப்பதைக் கூறட்டும் விரைவினில் சென்று

பெண் : என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று
இருப்பதைக் கூறட்டும் விரைவினில் சென்று

ஆண் : கங்கையின் சங்கமம் கடலோடு கண்டேன்
மங்கையின் சங்கமம் பார்த்திட வந்தேன்
கங்கையின் சங்கமம் கடலோடு கண்டேன்
மங்கையின் சங்கமம் பார்த்திட வந்தேன்

பெண் : கரை வழிச் செல்வது கங்கையின் பெருமை
முறை வழிச் செல்வது மங்கையின் பெருமை
கரை வழிச் செல்வது கங்கையின் பெருமை
முறை வழிச் செல்வது மங்கையின் பெருமை

ஆண் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து

பெண் : ஆயிரம் நாடுகள் சென்று வந்தாலும்
தாயக பெருமையைக் காத்திட வேண்டும்
ஆயிரம் நாடுகள் சென்று வந்தாலும்
தாயக பெருமையைக் காத்திட வேண்டும்

ஆண் : காதலும் தாயகப் பெருமையில் ஒன்று
காணட்டும் அதையும் இளமையில் இன்று

பெண் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
ஆண் : சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து

ஆண் : மந்திரம் சொல்லும் மணவறை கோலம்
மனதினில் தோன்றும் ஒவ்வொரு நாளும்
பெண் : எண்ணுவதெல்லாம் நேரினில் காணும்
புண்ணியம் இருந்தால் அது எங்கு போகும்

ஆண் : செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
லவ் ஆல்
பெண் : லவ் ஒன்
ஆண் : லவ் ஆல்
பெண் : லவ் ஒன் லவ் ஒன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here