Singers : Ananthu, Sathyaraj and Mani Kumar

Music by : Bharadwaj

Lyrics by : Vairamuthu

Male : Cheran engae chozhan engae
Paandi naadum ponathe
Mannar vamsam aanada mannil
Mann puzhukkal vaazhuthae

Male : Cheran engae chozhan engae
Paandi naadum ponathe
Mannar vamsam aanada mannil
Mann puzhukkal vaazhuthae

Male : Thanthai periyaar vantha mannil
Manthai nariyaa vaazhvathu
Maanam veeram karpu ellaam
Santhakadaiyaa saervathu

Male : Tamizhnaattai vittu tamizh
Poe vittathu

Chorus : Cheran engae chozhan engae
Paandi naadum ponathe
Mannar vamsam aanada mannil
Mann puzhukkal vaazhuthae

Male : Naattai maattrum thozhilaaliyin
Veettai paththi yosiththavan
Marumalarchiyin naayagan
Marks allavo

Male : Vervaikkaana en vaazhkkaiyai
Oivukkaaga undaakkinaan
May dhinam engal vaazhvukku
Vaazhththallavo

Male : Moolai mudhalaai vaiththavarae
Perum mudhalaaligalaai maarugiraar
Udalai mudhalaai vaiththavaro
Kaiyil odugal yaenthuvatho..oo….

Chorus : Intha ulagam viraivil maattram varum
Mannai uzhaippavar aalum kaalam varum
Sooriyan kaattru vaanampol
Engal soththum pothuvaai aagividum

Male : Samaththuvam thondrividum
Tamizha tamizha
Erimalai pongi varum vazhiyil
Erumpugal poochikal enna seiyyum
Puligal orr ani saernthuvittaal
Bootsvaal koottam enna seiyyum

Chorus : Mannan vendaam magudam vendaam
Tamizhanaaga vaazhvom
Maanam ennum aadaikatti
Manitharaaga maaruvom

Male : Thanthai periyaar sonna sollai
Sinthaiyil yaettri seyalpadu
Unnai vendraal ulagai velvaai
Unnaal mudiyum purappaadu

Male : Annai tamil ariyanai yaera aanaiyidu….

பாடகர்கள் : ஆனந்து, சத்யராஜ் மற்றும் மணி குமார்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : சேரன் எங்கே சோழன் எங்கே
பாண்டி நாடும் போனதே
மன்னர் வம்சம் ஆண்ட மண்ணில்
மண்புழுக்கள் வாழுதே

ஆண் : சேரன் எங்கே சோழன் எங்கே
பாண்டி நாடும் போனதே
மன்னர் வம்சம் ஆண்ட மண்ணில்
மண்புழுக்கள் வாழுதே

ஆண் : தந்தை பெரியார் வந்த மண்ணில்
மந்தை நரியா வாழ்வது
மானம் வீரம் கற்பு எல்லாம்
சந்தகடையா சேர்வது

ஆண் : தமிழ்நாட்டை விட்டு தமிழ்
போய் விட்டது…..

குழு : சேரன் எங்கே சோழன் எங்கே
பாண்டி நாடும் போனதே
மன்னர் வம்சம் ஆண்ட மண்ணில்
மண்புழுக்கள் வாழுதே

ஆண் : நாட்டை மாற்றும் தொழிலாளியின்
வீட்டை பத்தி யோசித்தவன்
மறுமலர்சியின் நாயகன்
மார்க்ஸ் அல்லவோ

ஆண் : வேர்வைக்கான என் வாழ்கையை
ஓய்வுக்காக உண்டாக்கினான்
மே தினம் எங்கள் வாழ்வுக்கு
வாழ்த்தல்லவோ

ஆண் : மூளை முதலாய் வைத்தவரோ
பெரும் முதலாளிகளாய் மாறுகிறார்
உடலை முதலாய் வைத்தவரோ
கையில் ஓடுகள் ஏந்துவதோ….ஓ…….

குழு : இந்த உலகம் விரைவில் மாற்றம் வரும்
மண்ணை உழைப்பவர் ஆளும் காலம் வரும்
சூரியன் காற்று வானம்போல்
எங்கள் சொத்தும் பொதுவாய் ஆகிவிடும்

ஆண் : சமத்துவம் தோன்றிவிடும்
தமிழா தமிழா
எரிமலை பொங்கி வரும் வழியில்
எறும்புகள் பூச்சிகள் என்ன செய்யும்
புலிகள் ஓர் அணி சேர்ந்துவிட்டால்
பூட்ஸ்வால் கூட்டம் என்ன செய்யும்

குழு : மன்னன் வேண்டாம் மகுடம் வேண்டாம்
தமிழனாக வாழ்வோம்
மானம் என்னும் ஆடைகட்டி
மனிதராக மாறுவோம்

ஆண் : தந்தை பெரியார் சொன்ன சொல்லை
சிந்தையில் ஏற்றி செயல்படு
உன்னை வென்றால் உலகை வெல்வாய்
உன்னால் முடியும் புறப்படு

ஆண் : அன்னை தமிழ் அரியணை ஏற ஆணையிடு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here