Singer : S. Janaki

Music by : T. R. Pappa

Lyrics by : A. Maruthakasi

Female : Chinna chinna bommai
Singara bommai
Munazhagum pinnazhagum paarunga
Idhil kannai veikkaa pervazhinga yaarunga

Female : Chinna chinna bommai
Singara bommai

Female : Andai veetukkri mel aasai vecha aalu
Adhanala kaliyaachu munpallunaalu
Andai veetukkri mel aasai vecha aalu
Adhanala kaliyaachu munpallunaalu
Iva kondavanai madhikkadha vaayadi sandi
Adhanaal kand palan kaalu onnu nondi
Iva kondavanai madhikkadha vaayadi sandi
Adhanaal kand palan kaalu onnu nondi

Female : Chinna chinna bommai
Singara bommai

Female : Uzhikkamal undu oodhi pona dhegam
Ulagil idhippol ullavar anaegam
Uzhikkamal undu oodhi pona dhegam
Ulagil idhippol ullavar anaegam
Pirar uyarvukku ennaalum yaeni maram aagum
Unmai thozhilaali bommai idhuvagum
Pirar uyarvukku ennaalum yaeni maram aagum
Unmai thozhilaali bommai idhuvagum

Female : Chinna chinna bommai
Singara bommai

Female : Venthaadi vaendharaana ivarthaan
Jaadhi veriyai viratta vandha periyaar
Anbae uruvaana ivarthaan
Nam nenjilae niraindhirukkum gaandhiyaar
Ivar periyaar ivar gaandhiyaar

Female : Chinna chinna bommai
Singara bommai

Female : Thambhiyaare thangaiyaare vaanga
Nam thalaivargal bommaigalai parunga
Ivargal arivuraiyai manadhil kollunga
Anaivarum nalla paadhaiyilae sellunga

Female : Chinna chinna bommai
Singara bommai
Munazhagum pinnazhagum paarunga
Idhil kannai veikkaa pervazhinga yaarunga

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : சின்னச் சின்ன பொம்மை
சிங்கார பொம்மை
முன்னழகும் பின்னழகும் பாருங்க
இதில் கண்ணை வைக்காப் பேர்வழிங்க யாருங்க

பெண் : சின்னச் சின்ன பொம்மை
சிங்கார பொம்மை

பெண் : அண்டை வீட்டுக்காரி மேல் ஆசை வச்ச ஆளு
அதனால காலியாச்சு முன்பல்லு நாலு
அண்டை வீட்டுக்காரி மேல் ஆசை வச்ச ஆளு
அதனால காலியாச்சு முன்பல்லு நாலு
இவ கொண்டவனை மதிக்காத வாயாடி சண்டி
அதனால் கண்ட பலன் காலு ஒண்ணு நொண்டி
இவ கொண்டவனை மதிக்காத வாயாடி சண்டி
அதனால் கண்ட பலன் காலு ஒண்ணு நொண்டி

பெண் : சின்னச் சின்ன பொம்மை
சிங்கார பொம்மை

பெண் : உழைக்காமல் உண்டு ஊதிப்போன தேகம்
உலகில் இதைப்போல் உள்ளவர் அநேகம்
உழைக்காமல் உண்டு ஊதிப்போன தேகம்
உலகில் இதைப்போல் உள்ளவர் அநேகம்
பிறர் உயர்வுக்கு எந்நாளும் ஏணி மரமாகும்
உண்மைத் தொழிலாளி பொம்மை இதுவாகும்
பிறர் உயர்வுக்கு எந்நாளும் ஏணி மரமாகும்
உண்மைத் தொழிலாளி பொம்மை இதுவாகும்

பெண் : சின்னச் சின்ன பொம்மை
சிங்கார பொம்மை

பெண் : வெண்தாடி வேந்தரான இவர்தான்
ஜாதி வெறியை விரட்ட வந்த பெரியார்
அன்பே உருவான இவர்தான்
நம் நெஞ்சிலே நிறைந்திருக்கும் காந்தியார்
இவர் பெரியார் இவர் காந்தியார் …..

பெண் : சின்னச் சின்ன பொம்மை
சிங்கார பொம்மை

பெண் : தம்பியரே தங்கையரே வாங்க
நம் தலைவர்கள் பொம்மைகளைப் பாருங்க
இவர்கள் அறிவுரையை மனதில் கொள்ளுங்க
அனைவருமே நல்ல பாதையிலே செல்லுங்க

பெண் : சின்னச் சின்ன பொம்மை
சிங்கார பொம்மை
முன்னழகும் பின்னழகும் பாருங்க
இதில் கண்ணை வைக்காப் பேர்வழிங்க யாருங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here