Singer : M. G. Sreekumar

Music by : A. R. Rahman

Male : Kann kann
Oru thuli vizhudhu
Oru thuli vizhudhu
Kann kann kann kann
Oru thuli vizhudhu
Oru thuli vizhudhu

Male : Oru thuli…. iru thuli
Sila thuli… pala thuli
Padapada thadathada
Sadasadavena sidharudhu

Male : {Chinna chinna mazhai thuligal
Serthu vaippeno
Minnal oliyil nool eduthu
Korthu vaippeno} (2)

Male : Chakkaravagamo
Mazhayai arundhumam
Naan sakkaravaga paravai aaveno
Mazhayin thaaraigal
Vaira vizhidhugal
Vizhudhu pidithu vinnil serveno

Male : Chinna chinna mazhai thuligal
Serthu vaippeno
Minnal oliyil nool eduthu
Korthu vaippeno

Male : Siru poovinilae vizhundhal
Oru thaen thuliyai varuvai
Siru sippiyilae vizhundhal
Oru muthu-enavae mudhirvai

Male : Payir verinilae vizhundhal
Navadhaniyamai vilaivaai
En kan vizhikkul vizhundhadhanal
Kavidhayaga malarndhai

Male : Andha iyarkai annai padaitha
Oru periya shower idhu
Ada indha vayadhu kazhindhal
Piragengu nanaivadhu
Ival kanniyenbadhai indha mazhai
Kandu arindhu solliyadhu

Male : Chakkaravagamo
Mazhayai arundhumam
Naan sakkaravaga paravai aaveno
Mazhayin thaaraigal
Vaira vizhidhugal
Vizhudhu pidithu vinnil serveno

Male : Ohooo…ooooooooooooo
Ohoo..oo hoo..ohoo..ooohooo
Ohooo…hoo…ooooo

Male : Mazhai kavidhai kondu varudhu
Yaarum kadavadaikka vendam
Oru karuppu kodi kaati yaarum
Kudai pidikka vendam

Male : Idhu devadhayin parisu
Yaarum thirumbi kolla vendam
Nedun-chalayilae nanaiya oruvar
Sammadhamum vendam

Male : Andha megam surandha paalil
Yen nanaiya marukkirai
Nee vaazha vandha vaazhvil
Oru pagudhi izakkirai
{Nee kangal moodi karaiyum podhu
Mannil sorgam eeidhuvaai} (2)

Male : Ohoo..oo hoo..ohoo..ooohooo
Ohoo..oo hoo..ohoo..ooohooo
Ohoo..oo hoo..ohoo..ooohooo

Male : Chakkaravagamo
Mazhayai arundhumam
Naan sakkaravaga paravai aaveno
Mazhayin thaaraigal
Vaira vizhidhugal
Vizhudhu pidithu vinnil serveno

Male : {Chinna chinna mazhai thuligal
Serthu vaippeno
Minnal oliyil nool eduthu
Korthu vaippeno} (2)

 

பாடகர் : எம்.ஜி. ஸ்ரீ குமார்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : கண் கண்
ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது
கண் கண் கண் கண்
ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது

ஆண் : ஒரு துளி
இரு துளி சில துளி
பல துளி படபட
தடதட சடசடவென
சிதறுது

ஆண் : { சின்னச்சின்ன
மழைத்துளிகள் சேர்த்து
வைப்பேனோ மின்னல்
ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ } (2)

ஆண் : சக்கரவாகமோ
மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவை
ஆவேனோ மழையின்
தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில்
சேர்வேனோ

ஆண் : சின்னச்சின்ன
மழைத்துளிகள் சேர்த்து
வைப்பேனோ மின்னல்
ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ

ஆண் : சிறு பூவினிலே
விழுந்தால் ஒரு தேன்
துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால்
ஒரு முத்து எனவே முதிர்வாய்

ஆண் : பயிர் வேரினிலே
விழுந்தால் நவதானியமாய்
விளைவாய் என் கண்விழிக்குள்
விழுந்ததனால் கவிதையாக
மலர்ந்தாய்

ஆண் : அந்த இயற்கை
அன்னை படைத்த ஒரு
பெரிய ஷவர் இது அட
இந்த வயது கழிந்தால்
பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை
இந்த மழை கண்டறிந்து
சொல்லியது

ஆண் : சக்கரவாகமோ
மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவை
ஆவேனோ மழையின்
தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில்
சேர்வேனோ

ஆண் : ஓஹோ ஓஓஓஓ
ஓஓ ஓஹோ ஓ ஹோ
ஓஹோ ஓ ஹோ
ஓஹோ ஹோ ஓ

ஆண் : மழை கவிதை
கொண்டு வருது யாரும்
கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி
யாரும் குடை பிடிக்க
வேண்டாம்

ஆண் : இது தேவதையின்
பரிசு யாரும் திரும்பிக்
கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்

ஆண் : அந்த மேகம்
சுரந்த பாலில் ஏன்
நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்
{ நீ கண்கள் மூடிக்
கரையும்போது மண்ணில்
சொர்க்கம் எய்துவாய் } (2)

ஆண் : ஓஹோ ஓ
ஹோ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ
ஓ ஹோ ஓஹோ
ஓஓஹோ ஓஹோ
ஓ ஹோ ஓஹோ
ஓஓஹோ

ஆண் : சக்கரவாகமோ
மழையை அருந்துமாம்
நான் சக்கரவாகப் பறவை
ஆவேனோ மழையின்
தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில்
சேர்வேனோ

ஆண் : { சின்னச்சின்ன
மழைத்துளிகள் சேர்த்து
வைப்பேனோ மின்னல்
ஒளியில் நூல் எடுத்துக்
கோர்த்து வைப்பேனோ } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here