Singer : T. M. Soundararajan
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Male : Chinna kannaa chella kannaa
Chinna kannaa chella kannaa
Innaadu un kaiyilae
Sirikkum thaenmozhi manakkum poongodi
En veedu un kannilae
Male : Chinna kannaa chella kannaa
Innaadu un kaiyilae
Sirikkum thaenmozhi manakkum poongodi
En veedu un kannilae
Male : Gandhiyum annaavum kaattiya paathai
Nee sellum paathaiyadaa
Kallam ilaamal vanjam illaamal
Neraaga nee solladaa
Male : Bharathi paattai padiththu
Nee bharatha naattai nadaththu
Bharathi paattai padiththu
Nee bharatha naattai nadaththu
Deivam ondrae endrey namb
Un ullam koyiladaa
Male : Chinna kannaa chella kannaa
Innaadu un kaiyilae
Sirikkum thaenmozhi manakkum poongodi
En veedu un kannilae
Male : Aadhikararkal yaar vantha pothum
Anjaamal por seiyaadaa
Allal vanthaalum innal vanthaalum
Thoosaaga nee ennadaa
Male : Aadhikararkal yaar vantha pothum
Anjaamal por seiyaadaa
Allal vanthaalum innal vanthaalum
Thoosaaga nee ennadaa
Male : Ariyaa paruvaththu pinju
Nee avanukku mattum anju
Ariyaa paruvaththu pinju
Nee avanukku mattum anju
Jadhiyum ondrey needhiyum ondreuy
Ellorum sonthamadaa
Male : Chinna kannaa chella kannaa
Innaadu un kaiyilae
Sirikkum thaenmozhi manakkum poongodi
En veedu un kannilae hae haei
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா
சின்ன கண்ணா செல்லக் கண்ணா
இந்நாடு உன் கையிலே
சிரிக்கும் தேன்மொழி மணக்கும் பூங்கொடி
என் வீடு உன் கண்ணிலே
ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா
இந்நாடு உன் கையிலே
சிரிக்கும் தேன்மொழி மணக்கும் பூங்கொடி
என் வீடு உன் கண்ணிலே
ஆண் : காந்தியும் அண்ணாவும் காட்டிய பாதை
நீ செல்லும் பாதையடா
கள்ளம் இல்லாமல் வஞ்சம் இல்லாமல்
நேராக நீ சொல்லடா
ஆண் : காந்தியும் அண்ணாவும் காட்டிய பாதை
நீ செல்லும் பாதையடா
கள்ளம் இல்லாமல் வஞ்சம் இல்லாமல்
நேராக நீ சொல்லடா
ஆண் : பாரதி பாட்டை படித்து
நீ பாரத நாட்டை நடத்து
பாரதி பாட்டை படித்து
நீ பாரத நாட்டை நடத்து
தெய்வம் ஒன்றே என்றே நம்பு
உன் உள்ளம் கோயிலடா……
ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா
இந்நாடு உன் கையிலே
சிரிக்கும் தேன்மொழி மணக்கும் பூங்கொடி
என் வீடு உன் கண்ணிலே
ஆண் : ஆதிக்ககாரர்கள் யார் வந்த போதும்
அஞ்சாமல் போர் செய்யடா
அல்லல் வந்தாலும் இன்னல் வந்தாலும்
தூசாக நீ எண்ணடா
ஆண் : ஆதிக்ககாரர்கள் யார் வந்த போதும்
அஞ்சாமல் போர் செய்யடா
அல்லல் வந்தாலும் இன்னல் வந்தாலும்
தூசாக நீ எண்ணடா
ஆண் : அறியாப் பருவத்து பிஞ்சு
நீ அவனுக்கு மட்டும் அஞ்சு
அறியாப் பருவத்து பிஞ்சு
நீ அவனுக்கு மட்டும் அஞ்சு
ஜாதியும் ஒன்றே நீதியும் ஒன்றே
எல்லோரும் சொந்தமடா…..
ஆண் : சின்ன கண்ணா செல்லக் கண்ணா
இந்நாடு உன் கையிலே
சிரிக்கும் தேன்மொழி மணக்கும் பூங்கொடி
என் வீடு உன் கண்ணிலே ஹே ஹேய்