Singer : T. M. Soundarajan

Music by : S. Dakshinamurthy

Male : Chinna kuzhandhai vizhigalilae
Deivam vandhu sirikudhumma
Vanna poovidhazh mazhalaiyilae
Vaazhkaiyin thathuvam puriyudhamma

Male : Chinna kuzhandhai vizhigalilae
Deivam vandhu sirikudhumma
Vanna poovidhazh mazhalaiyilae
Vaazhkaiyin thathuvam puriyudhamma

Male : Kuzhandhaiyaai manidhan irundhirundhaal
Kulapamum mayakamum ulagil illai
Kuzhandhaiyaai manidhan irundhirundhaal
Kulapamum mayakamum ulagil illai
Valarndha manidhan aasaigalaal
Vaazhum vazhigalil nermaiillai

Male : Chinna kuzhandhai vizhigalilae
Deivam vandhu sirikudhumma
Vanna poovidhazh mazhalaiyilae
Vaazhkaiyin thathuvam puriyudhamma

Male : Kani idhazh sirippaal azhagaada
Kanna poigaiyil thaenoora
Kani idhazh sirippaal azhagaada
Kanna poigaiyil thaenoora
Kavidhaiyai pol varum kuzhandhaiyin
Pinju kaaladi nizhalae sorgam ammaaa

Male : Kannil aadum ilam kuzhandhai
Kadavul ezhudhiya mani kavidhai
Kannil aadum ilam kuzhandhai
Kadavul ezhudhiya mani kavidhai
Innoru piravi naan eduthaal
Endrum kuzhandhaiyaai vaazha vidu
Iraivaa …endrum kuzhandhaiyaai vazha vidu

Male : Chinna kuzhandhai vizhigalilae
Deivam vandhu sirikudhumma
Vanna poovidhazh mazhalaiyilae
Vaazhkaiyin thathuvam puriyudhamma

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி

ஆண் : சின்ன குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

ஆண் : சின்ன குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

ஆண் : குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால்
குழப்பமும் மயக்கமும் உலகில் இல்லை
குழந்தையாய் மனிதன் இருந்திருந்தால்
குழப்பமும் மயக்கமும் உலகில் இல்லை
வளர்ந்த மனிதன் ஆசைகளால்
வாழும் வழிகளில் நேர்மையில்லை..

ஆண் : சின்ன குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா

ஆண் : கனியிதழ் சிரிப்பில் அழகாட
கன்னப் பொய்கையில் தேனூற
கனியிதழ் சிரிப்பில் அழகாட
கன்னப் பொய்கையில் தேனூற
கவிதையைப் போல் வரும் குழந்தையின் பிஞ்சு
காலடி நிழலே சொர்க்கமம்மா

ஆண் : கண்ணில் ஆடும் இளம் குழந்தை
கடவுள் எழுதிய மணிக் கவிதை
கண்ணில் ஆடும் இளம் குழந்தை
கடவுள் எழுதிய மணிக் கவிதை
இன்னொரு பிறவி நானெடுத்தால்
என்றும் குழந்தையாய் வாழ விடு
இறைவா….என்றும் குழந்தையாய் வாழ விடு

ஆண் : சின்ன குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here