Singers : K. J. Yesudas, K. S. Chithra and Uma Ramanan

Music by : Ilayaraja

Female : Chinnamani ponnumani
Sirichakka koyil mani
Unnai peththa raasavukku
Avathaandaa kanninmani
Pethedutha thaai oruthi
Nee thathedutha thaai oruthi
Indha iruvarukkum
Pillai nee oruthan

Male : Chinnamani ponnumani
Sirichakka koyil mani
Unnai peththa raasavukku
Nee thaandaa kanninmani
Pethedutha thaai oruthi
Nee thathedukka vachupputtaa
Andha iruvarukkum
Kelvi naan oruthan

Female : Chinnamani ponnumani
Sirichakka koyil mani
Unnai peththa raasavukku
Avathaandaa kanninmani

Male : Ethanaiyo vaasalilae
Kaala vachen appodhu
Vachchadhukku thandanaiya
Anubavichaen ippodhu

Male : Ethanaiyo vaasalilae
Kaala vachen appodhu
Vachchadhukku thandanaiya
Anubavichaen ippodhu

Male : Naanaaga potta vidhai
Mulaichuthadaa naethu
Neeyenum thirundhi nada
En kathaiya paarthu

Male : Poi maana pulli maanunnu nambikittaa
Oru mullaala iva maalaiya katti vachaa
Ithai tholil thaangum thuyaram
Nenju porukkaladaa

Male : Chinnamani ponnumani
Sirichakka koyil mani
Unnai peththa raasavukku
Nee thaandaa kanninmani

Female : Oorukkulla veethiyilae
Vilaiyaata poyirukken
Unnudaiya vaazhkkaiyilae
Vilaiyaada naan varala

Female : Oorukkulla veethiyilae
Vilaiyaata poyirukken
Unnudaiya vaazhkkaiyilae
Vilaiyaada naan varala

Female : Thee mela kaiya vachu
Suttukitta paavam
Un mela kopappattaa
Adhil ennaiyaa nyaayam

Female : Pon maana nee poiyinnu solluriyae
En ammaanae ennai sollula kolluriyae
En vaazhvum thaazhvum
Enadhu mannavan unnidamae

Female : Aa aa chinnamani ponnumani
Sirichakka koyil mani
Unnai peththa raasavukku
Avathaandaa kanninmani

Female : Pethedutha thaai oruthi
Unna thatheduthen naan oruthi
Enga iruvarukkum
Pillai nee oruthan

Female : Imhum imhum imhum imhum

Female : Imhum imhum imhum imhum

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சின்னமணி பொண்ணுமணி
சிரிச்சாக்க கோயில் மணி
உன்னைப் பெத்த ராசவுக்கு
அவதான்டா கண்ணின்மணி
பெத்தெடுத்த தாய் ஒருத்தி
நீ தத்தெடுத்த தாய் ஒருத்தி
இந்த இருவருக்கும்
பிள்ளை நீ ஒருத்தன்

ஆண் : சின்னமணி பொண்ணுமணி
சிரிச்சாக்க கோயில் மணி
உன்னைப் பெத்த ராசவுக்கு
நீதான்டா கண்ணின்மணி
பெத்தெடுத்த தாய் ஒருத்தி
நீ தத்தெடுக்க வச்சுப்புட்டா
அந்த இருவருக்கும்
கேள்வி நான் ஒருத்தன்

பெண் : சின்னமணி பொண்ணுமணி
சிரிச்சாக்க கோயில் மணி
உன்னைப் பெத்த ராசவுக்கு
அவதான்டா கண்ணின்மணி

ஆண் : எத்தனையோ வாசலிலே
கால வச்சேன் அப்போது
வச்சதுக்கு தண்டனைய
அனுபவிச்சேன் இப்போது

ஆண் : எத்தனையோ வாசலிலே
கால வச்சேன் அப்போது
வச்சதுக்கு தண்டனைய
அனுபவிச்சேன் இப்போது

ஆண் : நானாக போட்ட விதை
முளைச்சுதடா நேத்து
நீயேனும் திருந்தி நட
என் கதையப் பார்த்து

ஆண் : பொய் மான
புள்ளி மானுன்னு நம்பிகிட்டா
ஒரு முள்ளால இவ மாலைய கட்டி வச்சா
இதைத் தோளில் தாங்கும் துயரம்
நெஞ்சு பொறுக்கலடா

ஆண் : சின்னமணி பொண்ணுமணி
சிரிச்சாக்க கோயில் மணி
உன்னைப் பெத்த ராசவுக்கு
நீதான்டா கண்ணின்மணி

பெண் : ஊருக்குள்ள வீதியில
விளையாடப் போயிருக்கேன்
உன்னுடைய வாழ்க்கையில
விளையாட நான் வரல

பெண் : ஊருக்குள்ள வீதியில
விளையாடப் போயிருக்கேன்
உன்னுடைய வாழ்க்கையில
விளையாட நான் வரல

பெண் : தீ மேல கைய வச்சு
சுட்டுகிட்ட பாவம்
உன் மேல கோபப்பட்டா
அதில் என்னய்யா நியாயம்

பெண் : பொன் மான நீ
பொய்யின்னு சொல்லுறியே
என் அம்மானே என்னை
சொல்லுல கொல்லுறியே
என் வாழ்வும் தாழ்வும்
எனது மன்னவன் உன்னிடமே

பெண் : ஆ ஆ சின்னமணி பொண்ணுமணி
சிரிச்சாக்க கோயில் மணி
உன்னைப் பெத்த ராசவுக்கு
அவதான்டா கண்ணின்மணி

பெண் : பெத்தெடுத்த தாய் ஒருத்தி
உன்ன தத்தெடுத்தேன் நான் ஒருத்தி
எங்க இருவருக்கும்
பிள்ளை நீ ஒருத்தன்

பெண் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

பெண் : ம்ஹும் ம்ஹும் ம்ஹும் ம்ஹும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here