Singers : Ilayaraja and Surmugi

Music by : Ilayaraja

Female : Chinna paya manasu chummaa irukkuthilla
Enna paduthuthadiyo

Female : Chinna paya manasu chummaa irukkuthilla
Enna paduthuthadiyo
Kannu padapaakka nenu thudi thudikka
Katti izhukkuthadiyo

Female : Sangathiya vaaya vittu sollallaamaa
Em manasa thoondi vittu seendalaamaa
Enna suththi enna suththi nadappathenna

Female : Chinna paya manasu chummaa irukkuthilla
Enna paduthuthadiyo
Kannu padapaakka nenu thudi thudikka
Katti izhukkuthadiyo

Male : Ennai katti yaedho izhuthathendru
Kandu kollaththaanae naan thaviththirunthaen
Nee naantha padhai en kaal nadakka
Yaarum illai angae naan unai kandaen

Female : Enthan manam unnidaththil sendra pinbu
Ennidaththil thirumbi varavum illaiyae
Male : Mannil vantha neerum thirumbi sellumaa
Kangal sonna kadhal kalainthu sellumaa
Female : Indru vantha maattram ennavo….

Male : Chinna paya manasu chummaa irukkuthilla
Enna paduthuthadiyo

Male : Vaasamalli thedi en kaiyil yaendhi
Soodi kondu vanthen naan unakkaaga
Vaasam vanthu unnai seraathathenna
Vaadi nirkkum en mun vaaraathathenna

Male : Ooril sendru poovin vaasam ora pechchu
Pesum endru odhungi odhungi nirkiraen
Female : Kaanugindra thoppu kangal imaikkaathu
Kaaval nirkkum kaattil katti kodukkaathu
Male : Engiruntha pothum kadhal nammai thuraththum

Female : Chinna paya manasu chummaa irukkuthilla
Enna paduthuthadiyo

Female : Sangathiya vaaya vittu sollallaamaa
Em manasa thoondi vittu seendalaamaa
Enna suththi enna suththi nadappathenna

Female : Chinna paya manasu chummaa irukkuthilla
Enna paduthuthadiyo…

பாடகர்கள் : இளையராஜா மற்றும் சுர்முகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ

பெண் : சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ
கண்ணு படபடக்க நெஞ்சு துடிதுடிக்க
கட்டி இழுக்குதடியோ

பெண் : சங்கதிய வாய விட்டுச் சொல்லலாமா
எம் மனச தூண்டி விட்டு சீண்டலாமா
என்னச் சுத்தி என்னச் சுத்தி நடப்பதென்ன…….

பெண் : சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ
கண்ணு படபடக்க நெஞ்சு துடிதுடிக்க
கட்டி இழுக்குதடியோ

ஆண் : என்னைக் கட்டி ஏதோ இழுத்ததென்று
கண்டு கொள்ளத்தானே நான் தவித்திருந்தேன்
நீ நடந்த பாதை என் கால் நடக்க
யாரும் இல்லை அங்கே நான் உனைக் கண்டேன்

பெண் : எந்தன் மனம் உன்னிடத்தில் சென்ற பின்பு
என்னிடத்தில் திரும்பி வரவும் இல்லையே
ஆண் : மண்ணில் வந்த நீரும் திரும்பிச் செல்லுமா
கண்கள் சொன்ன காதல் கலைந்து செல்லுமா
பெண் : இன்று வந்த மாற்றம் என்னவோ…….

ஆண் : சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ

ஆண் : வாசமல்லி தேடி என் கையில் ஏந்தி
சூடிக் கொண்டு வந்தேன் நான் உனக்காக
வாசம் வந்து உன்னை சேராததென்ன
வாடி நிற்கும் என் முன் வாராததென்ன

ஆண் : ஊரில் சென்று பூவின் வாசம் ஓரப் பேச்சு
பேசும் என்று ஒதுங்கி ஒதுங்கி நிற்கிறேன்
பெண் : காணுகின்ற தோப்பு கண்கள் இமைக்காது
காவல் நிற்கும் காட்டில் காட்டிக் கொடுக்காது
ஆண் : எங்கிருந்த போதும் காதல் நம்மைத் துரத்தும்

பெண் : சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ

ஆண் : சங்கதிய வாய விட்டுச் சொல்லலாமா
எம் மனச தூண்டி விட்டு சீண்டலாமா
என்னச் சுத்தி என்னச் சுத்தி நடப்பதென்ன…….

பெண் : சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல
என்ன படுத்துதடியோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here