Singers : K. J. Yesudas and P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Aa…..nnaa
Male : Adhu enna
Female : Aavannaa
Male : Aagattum
Female : Ee….nnaa
Male : Idhu enna
Female : Eeyannaa
Male : Irukattum
Female : Chinna ponnaa irukkaiyilae aa…nnaa
Ava kanni ponnaa aanavudan aavannaa
Chinna ponnaa irukkaiyilae aa…nnaa
Ava kanni ponnaa aanavudan aavannaa
Male : Ilam paruvam vanthathunnaa iyi…nnaa….aa….
Avan idhayam konjam perisaanaa eeyannaa….eeyannaa….
Female : Chinna ponnaa irukkaiyilae aa…nnaa
Ava kanni ponnaa aanavudan aavannaa
Female : Annaiyendrum thanthaiyendrum iruvarundu
Avar anbu vaiththa kaaranaththaal irandum ondru
Male : Vandi endrum maadu endrum irandum undu
Athai vandiyilae poottiyathaal irandum ondru
Female : Vayathu vantha pinnaethaan valargirathu anbe
Vayathu vantha pinnaethaan valargirathu anbe
Male : Maadu vaangi vanthapinnae vandi nagargirathu
Maadu vaangi vanthapinnae vandi nagargirathu munnae
Female : Chinna ponnaa irukkaiyilae aa…nnaa
Ava kanni ponnaa aanavudan aavannaa
Female : Valluvarin vaazhkkaiyai nee padikka venum
Adhil vaasugiyin kadhaiyum nee ketkka vendum
Male : Enga ooru valluvaru paaduvaaru
Avaru yaerukeththa kalappaiyum sedhukkuvaaru
Female : Paavai enthan ulagam appaavi unthan idhayam
Paavai enthan ulagam appaavi unthan idhayam
Male : Paavigalin kalagam appaavigalaal vilagum
Paavigalin kalagam appaavigalaal vilagum
Female : Chinna ponnaa irukkaiyilae aa…nnaa
Ava kanni ponnaa aanavudan aavannaa
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : அ..ன்னா…
ஆண் : அது என்ன
பெண் : ஆவன்னா…..
ஆண் : ஆகட்டும்
பெண் : இ..ன்னா….
ஆண் : இது என்ன
பெண் : ஈயன்னா…..
ஆண் : இருக்கட்டும்…
பெண் : சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா
அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா
சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா
அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா
ஆண் : இளம் பருவம் வந்ததுன்னா இ…ன்னா….ஆ…..
அவன் இதயம் கொஞ்சம் பெரிசானா ஈயன்னா…….ஈயன்னா
பெண் : சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா
அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா
பெண் : அன்னையென்றும் தந்தையென்றும் இருவருண்டு
அவர் அன்பு வைத்த காரணத்தால் இரண்டும் ஒன்று
ஆண் : வண்டி என்றும் மாடு என்றும் இரண்டும் உண்டு
அதை வண்டியிலே பூட்டியதால் இரண்டும் ஒன்று
பெண் : வயது வந்த பின்னேதான் வளர்கிறது அன்பே
வயது வந்த பின்னேதான் வளர்கிறது அன்பே
ஆண் : மாடு வாங்கி வந்தபின்னே வண்டி நகர்கிறது
மாடு வாங்கி வந்தபின்னே வண்டி நகர்கிறது முன்னே..
பெண் : சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா
அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா
பெண் : வள்ளுவரின் வாழ்க்கையை நீ படிக்க வேணும்
அதில் வாசுகியின் கதையும் நீ கேட்க வேண்டும்
ஆண் : எங்க ஊரு வள்ளுவரு பாடுவாரு
அவரு ஏருக்கேத்த கலப்பையையும் செதுக்குவாரு
பெண் : பாவை எந்தன் உலகம் அப்பாவி உந்தன் இதயம்
பாவை எந்தன் உலகம் அப்பாவி உந்தன் இதயம்
ஆண் : பாவிகளின் கலகம் அப்பாவிகளால் விலகும்…..
பாவிகளின் கலகம் அப்பாவிகளால் விலகும்…..
பெண் : சின்னப் பொண்ணா இருக்கையிலே அ..ன்னா
அவ கன்னிப் பொண்ணா ஆனவுடன் ஆவன்னா