Singers : T. M. Soundarajan and K. Jamunarani

Music by : Shankar Ganesh

Lyrics by : Kumaradevan

Male : Chinnakutti ponnu nee sillaraiya ennu
Ada chinnakutti ponnu nee sillaraiya ennu
Naan kettukinnae vaaraen nee ketkaamalae porae
Naan kettukinnae vaaraen nee ketkaamalae porae

Female : Ennaiyaa nainaa naan idhae petta maina
Ada ennaiyaa nainaa naan idhae petta maina
Naan odhukkikkinae poraen nee orasikkitae vaarae
Naan odhukkikkinae poraen nee orasikkitae vaarae

Male : Ennaayirukku paiyilae eduththu kodu kaiyilae
Ada ennaayirukku paiyilae eduththu kodu kaiyilae
Paiyilae onnum illaattaa kazhatti kodu kammala
Paiyilae onnum illaattaa kazhatti kodu kammala

Male : Sarkku vanthiduchchi santhosam kaaththirukku
Sarkku vanthiduchchi santhosam kaaththirukku
Udanae kudikkanum olagaththa marakkanum
Udanae kudikkanum olagaththa marakkanum

Male : Adi chinnakutti ponnu nee sillaraiya ennu
Naan kettukinnae vaaraen nee ketkaamalae porae

Female : Kalluppaanai vanthathumae soththu paanai yaenguthu
Kalluppaanai vanthathumae soththu paanai yaenguthu
Kaalamellaam erinja anuppula poonai kedanthu thoonguthu
Kaalamellaam erinja anuppula poonai kedanthu thoonguthu

Female : Kedachatha nee kudikkirae ketta adikkirae
Kedachatha nee kudikkirae ketta adikkirae
Nee oru purushanaa roshamulla manushanaa
Ada nee oru purushanaa roshamulla manushanaa

Male : Devanaagi ponaen
Ippa naan devanaagi ponaen
Aamaam devanaagi ponnaen
Kudikkira pazhakkam vanthatharkku pinnae
Naan adikkadi thanni kudikkira pazhakkam vanthatharkku pinnae
Andraadam antha moondru logamum poe vaaraen kannae
Andraadam antha moondru logamum poe vaaraen kannae

Female : Kudi kedukkira kudiyinaalae
Kozhantha kutty pasiyinaalae
Kodal karugi yaengalaachchuthu en machchaan
Kudumpa perum kettu pochchuthu
En machchaan kudumpa perum kettu pochchuthu…

Male : Maadaaga ozhaichchaalum odaaga thaeinjaalum
Novellaam theerppathu thanni
Odambu novellaam theerppathu thanni
Idhu udhavaathena thadukkaatahe ubathesamum kodukkaathae
Vaiyaatahe vaiyaathae sollittaen
Yaarum seiyyaathadi enna senjuttaen

Female : Ennathaan seiyyala nee edhaiththaan vaikkala
Adagu edhaiththaan vaikkala
Ennai thavira unnai thavira
Irukkira intha oru kozhanthaiya thavira
Enna vaikkala adagu edhaithaan vaikkala

Male : Adaguthaan vacha enna
Aththanaiyum ponaalenna
Aampala naan sampaathippaen
Adi pompala adha ketkka nee yaaradi
Adi pompala adha ketkka nee yaaradi

Female : Kanji thanniya kudichchukitt vaayavayaththa katti
Kastappattu kaasu panaththa mudichchu pottu saerththu
Kadhu kammal mookkuththiyum kai valaiyum pottaen
Adhoda vittaenaa illaiyae

Female : Paavi manasu ketkkala aambala nee podattumunnu
Azhagazhagaa seyinnu thaenkinnaththa ketkattumunnu
Transister pottu rist watch mothiram
List pottaa aayiram iththanai iththanai vaangi thanthaen
Kudippatharkku munnae nee kudiyaa kudippatharkku munnae

Male : Ellaam irunthum naan aandi
Ippa irukkuthaa vootula oru thondi
Adikkadi nee ennai vendi
Vaangiya aththanaiyum ennaachchu neeyae sollendi

Male : Ellaam irunthum naan aandi
Ippa irukkuthaa vootula oru thondi

Male : …………………..

Female : Aththanaiyum aththanaiyum adagu kadaiyilae
Niththirai poguthaiyyaa
Ippa niththirai poguthaiyyaa
Adha adagu kadaikku anuppi vachchathintha
Kudikkira pazhakkamaiyaa
Intha kudikkira pazhakkamaiyaa

Female : Varusha kanakkil saernthaen
Ellaam vaara kanakkil pochchu
Varusha kanakkil saernthaen
Ellaam vaara kanakkil pochchu

Female : Onnonnaa pochu
Orae muttaa pochu
Onnonnaa pochu
Orae muttaa pochu

Female : Paaththiram irukkaa pandaamirukkaa
Kevalam katta oru thuni irukkaa
Paaththiram irukkaa pandaamirukkaa
Kevalam katta oru thuni irukkaa
Aaththiram varuthu adakkikiraen
Yaarai sabikkirathu niruththikkiraen
Yaarai sabikkirathu niruththikkiraen
Naan yaarai sabikkirathu niruththikkiraen….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : குமாரதேவன்

ஆண் : சின்னக்குட்டி பொண்ணு நீ சில்லறைய எண்ணு
அட சின்னக்குட்டி பொண்ணு நீ சில்லறைய எண்ணு
நான் கேட்டுக்கின்னே வாரேன் நீ கேட்காமலே போறே
நான் கேட்டுக்கின்னே வாரேன் நீ கேட்காமலே போறே

பெண் : என்னய்யா நைனா நான் இதே பேட்ட மைனா
அட என்னய்யா நைனா நான் இதே பேட்ட மைனா
நான் ஒதுங்கிக்கினே போறேன் நீ ஓரசிக்கிட்டே வாறே…
நான் ஒதுங்கிக்கினே போறேன் நீ ஓரசிக்கிட்டே வாறே…

ஆண் : என்னாயிருக்கு பையிலே எடுத்து கொடு கையிலே
அட என்னாயிருக்கு பையிலே எடுத்து கொடு கையிலே
பையிலே ஒன்னும் இல்லாட்டா கழட்டி கொடு கம்மல
பையிலே ஒன்னும் இல்லாட்டா கழட்டி கொடு கம்மல

ஆண் : சரக்கு வந்திடுச்சி சந்தோசம் காத்திருக்கு
சரக்கு வந்திடுச்சி சந்தோசம் காத்திருக்கு
உடனே குடிக்கணும் ஒலகத்த மறக்கணும்
உடனே குடிக்கணும் ஒலகத்த மறக்கணும்

ஆண் : அடி சின்னக்குட்டி பொண்ணு நீ சில்லறைய எண்ணு
நான் கேட்டுக்கின்னே வாரேன் நீ கேட்டகாமலே போறே

பெண் : கள்ளுப்பானை வந்ததுமே சோத்துப் பானை ஏங்குது
கள்ளுப்பானை வந்ததுமே சோத்துப் பானை ஏங்குது
காலமெல்லாம் எறிஞ்ச அடுப்புல பூனை கெடந்து தூங்குது
காலமெல்லாம் எறிஞ்ச அடுப்புல பூனை கெடந்து தூங்குது

பெண் : கெடச்சத நீ குடிக்கிறே கெட்ட அடிக்கிறே
கெடச்சத நீ குடிக்கிறே கெட்ட அடிக்கிறே
நீ ஒரு புருஷனா ரோஷமுள்ள மனுஷனா
அட நீ ஒரு புருஷனா ரோஷமுள்ள மனுஷனா

ஆண் : தேவானாகிப் போனேன்
இப்ப நான் தேவனாகி போனேன்
ஆமாம் தேவனாகி போனேன்
குடிக்கிற பழக்கம் வந்ததற்கு பின்னே
நான் அடிக்கடி தண்ணி குடிக்கிற பழக்கம் வந்ததற்கு பின்னே
அன்றாடம் அந்த மூன்று லோகமும் போய் வாரேன் கண்ணே
அன்றாடம் அந்த மூன்று லோகமும் போய் வாரேன் கண்ணே

பெண் : குடி கெடுக்கிற குடியினாலே
கொழந்த குட்டி பசியினாலே
கொடல் கருகி ஏங்கலாச்சுது என் மச்சான்
குடும்ப பேரும் கெட்டுப் போச்சுது….
என் மச்சான் குடும்ப பேரும் கெட்டுப் போச்சுது….

ஆண் : மாடாக ஒழைச்சாலும் ஓடாக தேய்ஞ்சாலும்
நோவெல்லாம் தீர்ப்பது தண்ணி
ஒடம்பு நோவெல்லாம் தீர்ப்பது தண்ணி
இது உதவாதென தடுக்காதே உபதேசமும் கொடுக்காதே
வையாதே வையாதே சொல்லிட்டேன்
யாரும் செய்யாதடி என்ன செஞ்சுட்டேன்….

பெண் : என்னத்தான் செய்யல நீ எதைத்தான் வைக்கல
அடகு எதைத்தான் வைக்கல
என்னை தவிர உன்னைத் தவிர
இருக்கிற இந்த ஒரு கொழந்தய தவிர
என்ன வைக்கல அடகு எதத்தான் வைக்கல

ஆண் : அடகுதான் வச்சா என்ன
அத்தனையும் போனாலென்ன
ஆம்பள நான் சம்பாதிப்பேன்
அடி பொம்பள அதக் கேட்க நீ யாரடி
அடி பொம்பள அதக் கேட்க நீ யாரடி

பெண் : கஞ்சித் தண்ணிய குடிச்சிக்கிட்டு வாயவயத்த கட்டி
கஷ்டப்பட்டு காசு பணத்த முடிச்சுப் போட்டு சேர்த்து
காது கம்மல் மூக்குத்தியும் கை வளையும் போட்டேன்
அதோட விட்டேனா இல்லையே

பெண் : பாவி மனசு கேக்கல ஆம்பள நீ போடட்டுமுன்னு
அழகழகா செயின்னு தேன்கிண்ணத்த கேட்கட்டுமுன்னு
டிரான்சிஸ்டர் பொட்டி ரிஸ்ட் வாட்ச் மோதிரம்
லிஸ்டு போட்டா ஆயிரம் இத்தன இத்தன வாங்கித் தந்தேன்
குடிப்பதற்கு முன்னே நீ குடியா குடிப்பதற்கு முன்னே….

ஆண் : எல்லாம் இருந்தும் நான் ஆண்டி
இப்ப இருக்குதா வூட்டுல ஒரு தோண்டி
அடிக்கடி நீ என்னை வேண்டி
வாங்கிய அத்தனையும் என்னாச்சு நீயே சொல்லேண்டி

ஆண் : எல்லாம் இருந்தும் நான் ஆண்டி
இப்ப இருக்குதா வூட்டுல ஒரு தோண்டி

ஆண் : ………………………..

பெண் : அத்தனையும் அத்தனையும் அடகு கடையிலே
நித்திரை போகுதய்யா
இப்ப நித்திரை போகுதய்யா
அத அடகு கடைக்கு அனுப்பி வச்சதிந்த குடிக்கிறப்
பழக்கமய்யா
இந்த குடிக்கிறப் பழக்கமய்யா

பெண் : வருஷக் கணக்கில் சேர்த்தேன்
எல்லாம் வாரக் கணக்கில் போச்சு
வருஷக் கணக்கில் சேர்த்தேன்
எல்லாம் வாரக் கணக்கில் போச்சு

பெண் : ஒண்ணொண்ணா போச்சு
ஒரே முட்டா போச்சு
ஒண்ணொண்ணா போச்சு
ஒரே முட்டா போச்சு

பெண் : பாத்திரம் இருக்க பண்டமிருக்கா
கேவலம் கட்ட ஒரு துணி இருக்கா
பாத்திரம் இருக்க பண்டமிருக்கா
கேவலம் கட்ட ஒரு துணி இருக்கா
ஆத்திரம் வருது அடக்கிக்கிறேன்
யாரை சபிக்கிறது நிறுத்திக்கிறேன்
யாரை சபிக்கிறது நிறுத்திக்கிறேன்
நான் யாரை சபிக்கிறது நிறுத்திக்கிறேன்……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here