Singer : K. Jamuna Rani

Music by : K. V. Mahadevan

Female : Chinnajiru magalai
Siriththu vantha poo magalai
Thannanthani vazhiyae
Thavikka vittu sendraayae….

Female : Chinnajiru magalai
Siriththu vantha poo magalai
Thannanthani vazhiyae
Thavikka vittu sendraayae…..

Female : Chinnajiru magalai
Siriththu vantha poo magalai….

Female : {Aiyyaa un vaasalilae
Adiyeduththa naal mudhalaai
Kaiyodu vaiththirunthaai
Kangal endru kaaththirunthaai} (2)

Female : Paaleduththu koduththirunthaal
Pazhameduththu ootti vaiththaal
Paaleduththu koduththirunthaal
Pazhameduththu ootti vaiththaal

Female : Poo mudiththa karangalilae
Pon mugaththai pudhaiththu vaiththaal
Poo mudiththa karangalilae
Pon mugaththai pudhaiththu vaiththaal

Female : Aasai alaigalilae
Avaludan neenthi vanthaai
Aasai alaigalilae
Avaludan neenthi vanthaai
Paadhi varai vantha aiyyaa
Meedhi vazhi maranthu vittaai

Female : Thaayaarai uranga vittu
Thanaththai nee thottilittu
Thaayaarai uranga vittu
Thanaththai nee thottilittu

Female : Vaayaara pugazhvathellaam
Mayakkaththil kettiruppaal
Vaayaara pugazhvathellaam
Mayakkaththil kettiruppaal

Female : Neengalaa endrezhuvaal
Nerungi vanthu nindru kolvaal
Neengalaa endrezhuvaal
Nerungi vanthu nindru kolvaal
Thoongungal endru solvaal
Thottilukuththaan nadappaal

Female : Heehmm heehmm heehmm

Female : Ponnaasai kollavillai
Porulaasai padavumillai
Poovaasai vaiththirunthaal
Poovai nee pariththaayaa

Female : Engae nee marainthaalum
Entha vazhii sendraalum
Angellaam aval varuvaal
Aiyya unnai pin thodarvaal….

பாடகி : கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : சின்னஞ் சிறு மகளை
சிரித்து வந்த பூமகளை
தன்னந்தனி வழியே
தவிக்க விட்டுச் சென்றாயே….

பெண் : சின்னஞ் சிறு மகளை
சிரித்து வந்த பூமகளை
தன்னந்தனி வழியே
தவிக்க விட்டுச் சென்றாயே….

பெண் : சின்னஞ் சிறு மகளை
சிரித்து வந்த பூமகளை……

பெண் : {ஐயா உன் வாசலிலே
அடியெடுத்த நாள் முதலாய்
கையோடு வைத்திருந்தாய்
கண்கள் என்று காத்திருந்தாய்} (2)

பெண் : பாலெடுத்துக் கொடுத்திருந்தாள்
பழமெடுத்து ஊட்டி வைத்தாள்
பாலெடுத்துக் கொடுத்திருந்தாள்
பழமெடுத்து ஊட்டி வைத்தாள்

பெண் : பூ முடித்த கரங்களிலே
பொன் முகத்தைப் புதைத்து வைத்தாள்
பூ முடித்த கரங்களிலே
பொன் முகத்தைப் புதைத்து வைத்தாள்

பெண் : ஆசை அலைகளிலே
அவளுடன் நீந்தி வந்தாய்
ஆசை அலைகளிலே
அவளுடன் நீந்தி வந்தாய்
பாதி வரை வந்த ஐயா
மீதி வழி மறந்து விட்டாய்

பெண் : பஞ்சணையில் நீயுறங்க
பக்கத்திலே அவளுறங்க
கொஞ்சி வரும் பிஞ்சு மகள் குரல் ஓடி வர
பஞ்சணையில் நீயுறங்க
பக்கத்திலே அவளுறங்க

பெண் : தாயாரை உறங்க விட்டு
தங்கத்தை நீ தொட்டிலிட்டு
தாயாரை உறங்க விட்டு
தங்கத்தை நீ தொட்டிலிட்டு

பெண் : வாயார புகழ்வதெல்லாம்
மயக்கத்தில் கேட்டிருப்பாள்
வாயார புகழ்வதெல்லாம்
மயக்கத்தில் கேட்டிருப்பாள்

பெண் : நீங்களா என்றெழுவாள்
நெருங்கி வந்து நின்று கொள்வாள்
நீங்களா என்றெழுவாள்
நெருங்கி வந்து நின்று கொள்வாள்
தூங்குங்கள் என்று சொல்வாள்
தொட்டிலுக்குத்தான் நடப்பாள்

பெண் : ஹீஹ்ம்ம் ஹீஹ்ம்ம் ஹீஹ்ம்ம்

பெண் : பொன்னாசைக் கொள்ளவில்லை
பொருளாசைப் படவுமில்லை
பூவாசை வைத்திருந்தாள்
பூவை நீ பறித்தாயா

பெண் : எங்கே நீ மறைந்தாலும்
எந்த வழி சென்றாலும்
அங்கெல்லாம் அவள் வருவாள்
ஐயா உன்னைப் பின் தொடர்வாள்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here