Singer : Haricharan

Music by : A. R. Rahman

Lyrics by : Ilango Krishnan

Male : Chinnanjiru nilave ennai vittu
Yenadi neenginaiyo
Oru kollai puyaladithaal sagiyae
Senjudar thaangidumo

Male : Attham azhindhadhadi annamae
Rathamum oindhadhadi
Oru kotramum veezhndhadhadi sagiye
Yaadhini kol yaane

Male : Yaangunai theduvano anname
Yedhini seiguvano
Pongkoozh aanadhadi anname
Theengirul soozhndhadhadi

Male : Thullum nayanamengae
Vellam pol
Sollum mozhigal engae
Kannal siruppumengae
Ennai ser
Aarana maarbumengae

Male : Manjin ilankuliraai
Nenjilae serndhidum kaigal engae
Konjum ilam veyilaai
Ennaiyae thedidum paarvai engae

Male : Chinnanjiru nilave ennai vittu
Yenadi neenginaiyo
Oru kollai puyaladithaal sagiyae
Senjudar thaangidumo

Male : Kaanagam yeriyudhadi vanjiyae
Gnyaalamum nazhuvudhadi
Vaanam udaindhadhadi azhagae
Boomiyum sarindhadhadi

Male : Kollai neruppinilae thalliyae
Eppadi neengudhiyo
Etradi kutramutren pirivai
Saabamaai thandhanaiyo

Male : Chinnanjiru nilave ennai vittu
Yenadi neenginaiyo
Oru kollai puyaladitthaal sagiyae
Senjudar thaangidumo

Male : Attham azhindhadhadi annamae
Rathamum oaindhadhadi
Oru kotramum veezhndhadhadi sagiye
Yaadhini kol yaane

பாடகர் : ஹரிச்சரன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : இளங்கோ கிருஷ்ணன்

ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையாே
ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண் : அத்தம் அழிந்தடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கொள் யானே

ஆண் : யாங்குனை தேடுவனோ அன்னமே
ஏதினி செய்குவனோ
போங்கூழ் ஆனதடி அன்னமே
தீங்கிருள் சூழ்ந்ததடி

ஆண் : துள்ளும் நாயனமெங்கே வெல்லம் போல்
சொல்லும் மொழிகள் எங்கே
கன்னல் சிரிப்புமெங்கே என்னை சேர்
ஆரண மார்புமெங்கே

ஆண் : மஞ்சின் இளங்குளிராய்
நெஞ்சிலே சேர்ந்திடும் கைகள் எங்கே
கொஞ்சும் இளம் வெயிலாய்
என்னையே தேடிடும் பார்வை எங்கே

ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையாே
ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண் : கானகம் எரியுதடி வஞ்சியே
ஞாலமும் நழுவுதடி
வானம் உடைந்ததடி அழகே
பூமியும் சரிந்ததடி

ஆண் : கொள்ளை நெருப்பினிலே தள்ளியே
எப்படி நீங்குதியோ
எற்றடி குற்றமுற்றேன் பிரிவை
சாபமாய் தந்தனையோ

ஆண் : சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையாே
ஒரு கொள்ளை புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ

ஆண் : அத்தம் அழிந்தடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கொள் யானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here