Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Chinnanjiru veedu idhu singaara veedu
Azhagu sirikkum aanandham kondaadum
Pazhagum sugam irukkum
Paasam ondrae kudiyirukkum

Female : Chinnanjiru veedu idhu singaara veedu

Female : Malarkaadu thaen koodu
Magizhvodu ingae vilaiyaadu
Malarkaadu idhu thaen koodu
Magizhvodu ingae vilaiyaadu
Nee ninapadhellam nadakkum
Perum nimmadhaiyai kodukkum
Manaiyil kadhavirukkum
Manakadhavu thirandhirukkum

Female : Chinnanjiru veedu idhu singaara veedu

Female : Sorgathin nizhal endru sollavoo
Karpaga solai idhuvallavoo
Pon porul ingu illai anbukku panjamillai
Thunbangal illaiyendru thullavo

Female : Ingu ketpadhellam kidaikkum
Kaiyil kidaithathellam nilaikkum
Inbam koluvirukkum
Ennathilae thelivirukkum

Female : Chinnanjiru veedu idhu singaara veedu

Female : Aasai mugam pesum vizhi
Anaikkum karam azhaikkum virundhu tharum
Aasai mugam pesum vizhi
Anaikkum karam azhaikkum virundhu tharum

Female : Ingu kaanbadhellam pudhumai
Naan kanavil kanda inimai
Endrum niraindhirukkum
Illaramum siranthirukkum

Female : Chinnanjiru veedu idhu singaara veedu
Azhagu sirikkum aanandham kondaadum
Pazhagum sugam irukkum
Paasam ondrae kudiyirukkum

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : சின்னஞ்சிறு வீடு இது சிங்கார வீடு
அழகு சிரிக்கும் ஆனந்தம் கொண்டாடும்
பழகும் சுகம் இருக்கும்
பாசம் ஒன்றே குடியிருக்கும்…..

பெண் : சின்னஞ்சிறு வீடு இது சிங்கார வீடு

பெண் : மலர்காடு தேன்கூடு
மகிழ்வோடு இங்கே விளையாடு
மலர்காடு தேன்கூடு
மகிழ்வோடு இங்கே விளையாடு
நீ நினைப்பதெல்லாம் நடக்கும்
பெரும் நிம்மதியை கொடுக்கும்
மனையில் கதவிருக்கும்
மனக்கதவு திறந்திருக்கும்………..

பெண் : சின்னஞ்சிறு வீடு இது சிங்கார வீடு

பெண் : சொர்க்கத்தின் நிழல் என்று சொல்லவோ
கற்பக சோலை இதுவல்லவோ
பொன் பொருள் இல்லை அன்புக்கு பஞ்சமில்லை
துன்பங்கள் இல்லையென்று துள்ளவோ

பெண் : இங்கு கேட்பதெல்லாம் கிடைக்கும்
கையில் கிடைத்ததெல்லாம் நிலைக்கும்
இன்பம் கொலுவிருக்கும்
எண்ணத்திலே தெளிவிருக்கும்…..

பெண் : சின்னஞ்சிறு வீடு இது சிங்கார வீடு

பெண் : ஆசைமுகம் பேசும் விழி
அணைக்கும் கரம் அழைக்கும் விருந்து தரும்
ஆசைமுகம் பேசும் விழி
அணைக்கும் கரம் அழைக்கும் விருந்து தரும்

பெண் : இங்கு காண்பதெல்லாம் புதுமை
நான் கனவில் கண்ட இனிமை
என்றும் நிறைந்திருக்கும்
இல்லறமும் சிறந்திருக்கும்…….

பெண் : சின்னஞ்சிறு வீடு இது சிங்கார வீடு
அழகு சிரிக்கும் ஆனந்தம் கொண்டாடும்
பழகும் சுகம் இருக்கும்
பாசம் ஒன்றே குடியிருக்கும்…..

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here