Singers : L. R. Eswari and P. Susheela
Music by : Vishwanathan-Ramamoorthy
Female : {Chithira poo vizhi vaasalilae
Vandhu yaar nindravaro
Female : Indha kattu karumbinai thottu
Kuzhaindhida yaar vandhavaro
Female : Yaar nindravaro
Female : Yaar vandhavaro} (2)
Female : Thendral azhaithu vara
Thanga thaerinil vandhaarae
Thendral azhaithu vara
Thanga thaerinil vandhaarae
Punnagai minnida vandhu aruginil
Nindravar ennavarae
Idam thandha en mannavarae
Female : Chithira poo vizhi vaasalile
Avar thaan nindravarae
Indha kattu karumbinai thottu
Kuzhaindhavar thaan ennavarae
Yaar nindravaro avar thaan ennavarae
Female : {Kattazhagil kavi kamban maganudan
Otti irundhavaro indha
Pattu udalinai thottanaikkum kalai
Katru thelindhavaro} (2)
Female : Unnai mattum aruginil vaithu
Dhinam dhinam suttri varubavaro
Ini katru koduthadhai othigai paarthidum
Muthamizh vithagarooo
Kalai mutrum arindhavaro
Kaadhal mattum therindhavaro
Female : Chithira poo vizhi vaasalilae
Vandhu yaar nindravaro
Indha kattu karumbinai thottu
Kuzhaindhida yaar vandhavaro
Female : {Vanna karu vizhi thannil varum vizhi
Endru azhaippadhuvo
Pasum ponnir pudhiyadhai kannan yena peyar
Solli thudhippadhuvo} (2)
Female : Oli minni varum iru kannasaivil kavi
Mannavan enbadhuvo illai
Thannai koduthanai thannil maraithavar
Vanna pudhu malarae
Avar nenjam malarillaiyae
Manam engum nirandhavarae
Female : Hooo ooo ooo oo oo oo oo
Hohooo oooo hoo ooooo
Female : Chithira poo vizhi vaasalile
Avar thaan nindravarae
Indha kattu karumbinai thottu
Kuzhaindhavar thaan ennavarae
Yaar nindravaro avar thaan ennavarae
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : {சித்திரப் பூ விழி வாசலிலே
வந்து யார் நின்றவரோ
பெண் : இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்
குழைந்திட யார் வந்தவரோ
பெண் : யார் நின்றவரோ
பெண் : யார் வந்தவரோ} (2)
பெண் : தென்றல் அழைத்து வர
தங்க தேரினில் வந்தாரே
தென்றல் அழைத்து வர
தங்க தேரினில் வந்தாரே
புன்னகை மின்னிட வந்து அருகினில்
நின்றவர் என்னவரே
இடம் தந்த என் மன்னவரே
பெண் : சித்திரப் பூ விழி வாசலிலே
அவர்தான் நின்றவரே
இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்
குழைந்தவர்தான் என்னவரே
யார் நின்றவரோ அவர்தான் என்னவரே
பெண் : {கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ இந்த
பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ} (2)
பெண் : உன்னை மட்டும் அருகினில் வைத்து
தினம் தினம் சுற்றி வருபவரோ
இனி கற்றுக் கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும்
முத்தமிழ் வித்தகரோ
கலை முற்றும் அறிந்தவரோ
காதல் மட்டும் தெரிந்தவரோ
பெண் : சித்திரப் பூ விழி வாசலிலே
வந்து யார் நின்றவரோ
இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்
குழைந்திட யார் வந்தவரோ
பெண் : {வண்ணக் கருவிழி தன்னில் வரும் விழி
என்று அழைப்பதுவோ
பசும் பொன்னிற் புதியதை கண்ணன் என பெயர்
சொல்லி துதிப்பதுவோ} (2)
பெண் : ஒளி மின்னி வரும் இரு கண்ணசைவில் கவி
மன்னவன் என்பதுவோ இல்லை
தன்னைக் கொடுத்தனை தன்னில் மறைத்தவர்
வண்ணப் புது மலரே
அவர் நெஞ்சம் மலரில்லையே
மனம் எங்கும் நிறைந்தவரே
பெண் : ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஒ ஓ
ஹோஹோ ஓஒ ஹோ ஓஓஒ
பெண் : சித்திரப் பூ விழி வாசலிலே
அவர்தான் நின்றவரே
இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்
குழைந்தவர்தான் என்னவரே
யார் நின்றவரோ அவர்தான் என்னவரே