Singers : T. M. Soundararajan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Chozhanin mgalae vaa sundhara tamizhae vaa
Yaezhai en madi meedhu vaa
Chozhanin mgalae vaa sundhara tamizhae vaa
Yaezhai en madi meedhu vaa
Moovagai tamil aalum paavalan enakkaga
Mogana panpaadi vaa vaa

Male : Chozhanin mgalae vaa sundhara tamizhae vaa
Yaezhai en madi meedhu vaa

Female : Kulir neerillaathu meenum illaiyae
Ingu neeyillaathu naanum illaiyae
Kulir neerillaathu meenum illaiyae
Ingu neeyillaathu naanum illaiyae
Tamil neeyirukka porul naanirukka
Tamil neeyirukka porul naanirukka
Arangerum paadal kadhal allavaa

Female : Kulir neerillaathu meenum illaiyae
Ingu neeyillaathu naanum illaiyae

Male : Thoorigai ezhuthaatha oviyam uyirkondu
Kaarigai vadivaanathi…oo…oo…oo…
Kaithari kavi paadum kambanin maganodu
Tholgalil vilaiyaadutho…oo….oo…oo…oo…
Tholgalil vilaiyaadutho…

Female : Kulir neerillaathu meenum illaiyae
Ingu neeyillaathu naanum illaiyae

Female : Maaligai manimaadam aadaigal alangaaram
Aayiram irunthaalenna….aa…aa…aa….aa….
Paavalan thirutholil paingili naanaaga
Vaazhnthidum suganthaan enna…aa….aa…aa…
Vaazhnthidum suganthaan enna….

Female : Kaarkuzhal sarinthaada maarbinil maniyaada
Thaei vara kandaenadi
Nool enum idaiyaada noothana kaniyaada
Kai vasam kondaenadi….aa…aa…aa…
Kai vasam kondaenadi….

Female : Kulir neerillaathu meenum illaiyae
Ingu neeyillaathu naanum illaiyae

Female : Itta adi noga edutha adi koppalikka
Yaenthizhai varavillaiyo….ooo….oo…oo
Itta adi noga edutha adi koppalikka
Yaenthizhai varavillaiyo….ooo….oo…oo

Male : Yaazhisai thanai minjum yaezhisai kuralaale
Yaazhisai thanai minjum yaezhisai kuralaale
Kaaviyam tharavillaiyo…oo…oo…oo….o….
Kaaviyam tharavillaiyo…

Both : Kulir neerillaathu meenum illaiyae
Ingu neeyillaathu naanum illaiyae

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : சோழனின் மகளே வா சுந்தர தமிழே வா
ஏழை என் மடி மீது வா
சோழனின் மகளே வா சுந்தர தமிழே வா
ஏழை என் மடி மீது வா
மூவகை தமிழ் ஆளும் பாவலன் எனக்காக
மோகன பண்பாடி வா…..வா…..

ஆண் : சோழனின் மகளே வா சுந்தர தமிழே வா
ஏழை என் மடி மீது வா

பெண் : குளிர் நீரில்லாது மீனும் இல்லையே
இங்கு நீயில்லாது நானும் இல்லையே
குளிர் நீரில்லாது மீனும் இல்லையே
இங்கு நீயில்லாது நானும் இல்லையே
தமிழ் நீயிருக்க பொருள் நானிருக்க
தமிழ் நீயிருக்க பொருள் நானிருக்க
அரங்கேறும் பாடல் காதல் அல்லவா

பெண் : குளிர் நீரில்லாது மீனும் இல்லையே
இங்கு நீயில்லாது நானும் இல்லையே

ஆண் : தூரிகை எழுதாத ஓவியம் உயிர்க்கொண்டு
காரிகை வடிவானதோ..ஓ…..ஓ…..ஓ…..
கைத்தறி கவி பாடும் கம்பனின் மகனோடு
தோள்களில் விளையாடுதோ……ஓ….ஓ…..ஓ….ஒ….
தோள்களில் விளையாடுதோ………

ஆண் : குளிர் நீரில்லாது மீனும் இல்லையே
இங்கு நீயில்லாது நானும் இல்லையே

பெண் : மாளிகை மணிமாடம் ஆடைகள் அலங்காரம்
ஆயிரம் இருந்தாலென்ன…..ஆ….ஆ….ஆ….ஆ….
பாவலன் திருத்தோளில் பைங்கிளி நானாக
வாழ்ந்திடும் சுகந்தான் என்ன….ஆ…ஆ….ஆ..
வாழ்ந்திடும் சுகம் தானென்ன…..

பெண் : கார்குழல் சரிந்தாட மார்பினில் மணியாட
தேர் வரக் கண்டேனடி……
நூல் எனும் இடையாட நூதனக் கனியாட
கை வசம் கொண்டேனடி…ஆ..ஆஆ…
கை வசம் கொண்டேனடி…..

பெண் : குளிர் நீரில்லாது மீனும் இல்லையே
இங்கு நீயில்லாது நானும் இல்லையே

பெண் : இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
ஏந்திழை வரவில்லையோ ஓ…ஓஓ..ஓ..
இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
ஏந்திழை வரவில்லையோ ஓ…ஓஓ..ஓ..

ஆண் : யாழிசை தனை மிஞ்சும் ஏழிசை குரலாலே
யாழிசை தனை மிஞ்சும் ஏழிசை குரலாலே
காவியம் தரவில்லையோ..ஓ…ஓ…ஓ…ஓ..
காவியம் தரவில்லையோ…..

இருவர் : குளிர் நீரில்லாது மீனும் இல்லையே
இங்கு நீயில்லாது நானும் இல்லையே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here