Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Humming…..

Female : Deepathai vaithu kondu
Thirukkuralum padikkalam
Deepathai vaithu kondu
Thirukkuralum padikkalam
Theeyai kondu moodar ellaam
Oorai kooda erikkalam
Theeyai kondu moodar ellaam
Oorai kooda erikkalam

Female : Deepathai vaithu kondu
Thirukkuralum padikkalam

Female : Kobam mattum adangi vittaal
Gopurathil yeralaam
Kobam mattum adangi vittaal
Gopurathil yeralaam
Gunam irunthu manamirundhaal
Kadavulaaga maaralaam
Gunam irunthu manamirundhaal
Kadavulaaga maaralaam

Female : Deepathai vaithu kondu
Thirukkuralum padikkalam

Female : Kann irandu kaal irandu
Kai irandu padaithaan
Katti vaithu kaapatharkku
Manadhu ondrai samaithaan

Female : Kann irandu kaal irandu
Kai irandu padaithaan
Katti vaithu kaapatharkku
Manadhu ondrai samaithaan

Female : Ninaithu paarkka maranthu vittaal
Murattu thanam valarum
Ninaithu paarkka maranthu vittaal
Murattu thanam valarum
Murattuthanam nirainthavanai
Ulagam ellam pazhikkum
Hoo oo oo hoo oo oo o
Haaa ..aaa..aaa..aaa..

Female : Deepathai vaithu kondu
Thirukkuralum padikkalam

Female : Kaatrin vegam thanai adakki
Suthi koduthaal panpaadum
Malai kallai kooda malarai pola
Sedhuki vaithaal vandaadum

Female : Kaatrin vegam thanai adakki
Suthi koduthaal panpaadum
Malai kallai kooda malarai pola
Sedhuki vaithaal vandaadum

Female : Aattru vellam madaiyil vandhaal
Payirgal kodi undaagum
Aattru vellam madaiyil vandhaal
Payirgal kodi undaagum
Aathirathil arivu kandaal
Ulagam ellam kondadum
Hoo oo oo hoo oo oo o
Haaa ..aaa..aaa..aaa..

Female : Deepathai vaithu kondu
Thirukkuralum padikkalam
Theeyai kondu moodar ellaam
Oorai kooda erikkalam

Female : Deepathai vaithu kondu
Thirukkuralum padikkalam

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : முனங்கல் …..

பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு
திருக்குறளும் படிக்கலாம்
தீபத்தை வைத்துக் கொண்டு
திருக்குறளும் படிக்கலாம்
தீயைக் கொண்டு மூடரெல்லாம்
ஊரைக் கூட எரிக்கலாம்
தீயைக் கொண்டு மூடரெல்லாம்
ஊரைக் கூட எரிக்கலாம்

பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு
திருக்குறளும் படிக்கலாம்

பெண் : கோபம் மட்டும் அடங்கி விட்டால்
கோபுரத்தில் ஏறலாம்
கோபம் மட்டும் அடங்கி விட்டால்
கோபுரத்தில் ஏறலாம்
குணமிருந்து மனமிருந்தால்
கடவுளாக மாறலாம்
குணமிருந்து மனமிருந்தால்
கடவுளாக மாறலாம்

பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு
திருக்குறளும் படிக்கலாம்

பெண் : கண்ணிரண்டு காலிரண்டு
கையிரண்டு படைத்தான்
கட்டி வைத்துக் காப்பதற்கு
மனது ஒன்றை சமைத்தான்

பெண் : கண்ணிரண்டு காலிரண்டு
கையிரண்டு படைத்தான்
கட்டி வைத்துக் காப்பதற்கு
மனது ஒன்றை சமைத்தான்

பெண் : நினைத்துப் பார்க்க மறந்து விட்டால்
முரட்டுத்தனம் வளரும்
நினைத்துப் பார்க்க மறந்து விட்டால்
முரட்டுத்தனம் வளரும்
முரட்டுத்தனம் நிறைந்தவனை
உலகமெல்லாம் பழிக்கும்
ஹோ.ஓ .ஓ.ஹோ.ஓ.ஓ….
ஹா..ஆஆ…ஆஅ.. ஹா…ஆஅ…

பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு
திருக்குறளும் படிக்கலாம்

பெண் : காற்றின் வேகம்தனை அடக்கி
சுதி கொடுத்தால் பண்பாடும்
மலைக்கல்லைக் கூட மலரைப் போலச்
செதுக்கி வைத்தால் வண்டாடும்

பெண் : காற்றின் வேகம்தனை அடக்கி
சுதி கொடுத்தால் பண்பாடும்
மலைக்கல்லைக் கூட மலரைப் போலச்
செதுக்கி வைத்தால் வண்டாடும்

பெண் : ஆற்று வெள்ளம் மடையில் வந்தால்
பயிர்கள் கோடி உண்டாகும்
ஆற்று வெள்ளம் மடையில் வந்தால்
பயிர்கள் கோடி உண்டாகும்
ஆத்திரத்தில் அறிவு கண்டால்
உலகமெங்கும் கொண்டாடும்
ஹோ.ஓ .ஓ.ஹோ.ஓ.ஓ….
ஹா..ஆஆ…ஆஅ.. ஹா…ஆஅ…

பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு
திருக்குறளும் படிக்கலாம்
தீயைக் கொண்டு மூடரெல்லாம்
ஊரைக் கூட எரிக்கலாம்

பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு
திருக்குறளும் படிக்கலாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here