Singer : T. M. Soundararajan

Music by : Sakthi Kumar

Lyrics by : Kannadasan

Male : Deivam irangatha
Deivam unaku irangatha
Deivam irangatha
Un mugam parkatha
Kallil irupaane devan mannilum irupaane
Ezhai siruvan kangalil mattum illathu ponane
Deivam irangatha
Un mugam parkatha

Male : Vithi enpavan unai thedi
Vizhaiyada vanthan kanne
Vithi enpavan unai thedi
Vizhaiyada vanthan kanne
Kanivai sirumozhi pookannanin
Kann vangi avanum kapothi aanaane
Deivam irangatha
Un mugam parkatha

Male : Veri pidithe unai vizhungida enni
Thodaruthada oru kodu vilangu
Veri pidithe unai vizhungida enni
Thodaruthada oru kodu vilangu
Uravenum vilangugal madivai neeyendru
Ninaipathu enna palamadangu
Deivam irangatha
Un mugam parkatha

Male : Un annai unakkaga
Uyir ilanthum valgindral
Un thanthai unai enni
Udal thalarnthu vegindran
Devi aval deepam
Un vizhiyaga vendum
Devanin kanneer
Or vazhi katta vendum

Male : Deivam irangatha
Deivam unaku irangatha
Deivam irangatha
Un mugam parkatha

பாடகர் : டி . எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : சக்தி குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தெய்வம் இரங்காதா
தெய்வம் உனக்கு இரங்காதா
தெய்வம் இரங்காதா
உன் முகம் பார்க்காதா
கல்லில் இருப்பானே தேவன்
மண்ணிலும் இருப்பானே
ஏழைச் சிறுவன் கண்களில் மட்டும்
இல்லாது போனானே……
தெய்வம் இரங்காதா
உன் முகம் பார்க்காதா

ஆண் : விதி என்பவன் உனைத் தேடி
விளையாட வந்தான் கண்ணே
விதி என்பவன் உனைத் தேடி
விளையாட வந்தான் கண்ணே
கனிவாய் சிறுமொழி பூங்கண்ணனின்
கண் வாங்கி அவனும் கபோதி ஆனானே…
தெய்வம் இரங்காதா
உன் முகம் பார்க்காதா

ஆண் : வெறி பிடித்தே உனை விழுங்கிட எண்ணி
தொடருதடா ஒரு கொடு விலங்கு
வெறி பிடித்தே உனை விழுங்கிட எண்ணி
தொடருதடா ஒரு கொடு விலங்கு
உறவெனும் விலங்குகள் மடிவாய் நீயென்று
நினைப்பது என்ன பல மடங்கு
தெய்வம் இரங்காதா
உன் முகம் பார்க்காதா

ஆண் : உன் அன்னை உனக்காக
உயிரிழந்தும் வாழ்கின்றாள்
உன் தந்தை உனை எண்ணி
உடல் தளர்ந்து வேகின்றான்
தேவி அவள் தீபம்
உன் விழியாக வேண்டும்
தேவனின் கண்ணீர் ஓர்
வழி காட்ட வேண்டும்

ஆண் : தெய்வம் இரங்காதா
தெய்வம் உனக்கு இரங்காதா
தெய்வம் இரங்காதா
உன் முகம் பார்க்காதா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here