Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Male : Dheivangal kan paarthadhu
Thottathil poo poothadhu
Poo ondru saei aanadhu
Pen ondru thaai aanadhu

Male : Eer aindhu maadham
Thaai konda baaram
Thaalaatta thaanae
Kai vandhu serum
Verenna vendum
Or pillai vandhaal kollai inbam

Male : Dheivangal kan paarthadhu
Thottathil poo poothadhu

Male : Pillai illaadha veedu
Mullai illaadha kaadu
Thottil illaadha illam
Thendral illadha mandram

Male : Chinna pon vandu
Vanna kan rendu
Aagaaya neelam kaattum
Kannam poo chendu
Katti karkandu
Sendhoora kolam theettum

Male : Maarbodu serthu
Mundhaanai moodi
Paaloottum thaayin
Aanandham kodi
Verenna vendum
Or pillai vandhaal kollai inbam

Male : Poo ondru saei aanadhu
Pen ondru thaai aanadhu
Eer aindhu maadham
Thaai konda baaram
Thaalaatta thaanae
Kai vandhu serum
Verenna vendum
Or pillai vandhaal kollai inbam

Male : Poo ondru saei aanadhu
Pen ondru thaai aanadhu

Female : Annai endraana pinbu
Thunbam munnooru naatkal
Pillai kai vandha pinbu
Kannil sandhosha pookkal

Female : Pillai chelvangal
Pesum dheivangal
Ellorkkum vaaippadhillai
Thaaimai illaadha
Penmai ennaalum
Kaanaadhu anbin ellai

Female : Kai veesi aadum
Vaigaasi megam
En veedu sera
Naan seidha yogam
Verenna vendum
Or pillai vandhaal kollai inbam

Female : Dheivangal kan paarthadhu
Thottathil poo poothadhu
Poo ondru saei aanadhu
Pen ondru thaai aanadhu

Female : Eer aindhu maadham
Thaai konda baaram
Thaalaatta thaanae
Kai vandhu serum
Verenna vendum
Or pillai vandhaal kollai inbam

Male : Dheivangal kan paarthadhu
Thottathil poo poothadhu

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தெய்வங்கள் கண் பார்த்தது
தோட்டத்தில் பூப் பூத்தது
பூ ஒன்று சேய் ஆனது
பெண் ஒன்று தாய் ஆனது

ஆண் : ஈரைந்து மாதம்
தாய் கொண்ட பாரம்
தாலாட்டத் தானே
கை வந்து சேரும்
வேறென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால்
கொள்ளை இன்பம்

ஆண் : தெய்வங்கள் கண் பார்த்தது
தோட்டத்தில் பூப் பூத்தது

ஆண் : பிள்ளை இல்லாத வீடு
முல்லை இல்லாத காடு
தொட்டில் இல்லாத இல்லம்
தென்றல் இல்லாத மன்றம்

ஆண் : சின்னப் பொன்வண்டு
வண்ணக் கண் ரெண்டு
ஆகாய நீலம் காட்டும்
கன்னம் பூச்செண்டு
கட்டி கற்கண்டு
செந்தூரக் கோலம் தீட்டும்

ஆண் : மார்போடு சேர்த்து
முந்தானை மூடி
பாலூட்டும் தாயின்
ஆனந்தம் கோடி
வேறென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால்
கொள்ளை இன்பம்

ஆண் : பூ ஒன்று சேய் ஆனது
பெண் ஒன்று தாய் ஆனது

ஆண் : ஈரைந்து மாதம்
தாய் கொண்ட பாரம்
தாலாட்டத் தானே
கை வந்து சேரும்
வேறென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால்
கொள்ளை இன்பம்

ஆண் : பூ ஒன்று சேய் ஆனது
பெண் ஒன்று தாய் ஆனது

பெண் : அன்னை என்றான பின்பு
துன்பம் முந்நூறு நாட்கள்
பிள்ளை கை வந்த பின்பு
கண்ணில் சந்தோஷப் பூக்கள்

பெண் : பிள்ளைச் செல்வங்கள்
பேசும் தெய்வங்கள்
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை
தாய்மை இல்லாத
பெண்மை எந்நாளும்
காணாது அன்பின் எல்லை

பெண் : கை வீசி ஆடும்
வைகாசி மேகம்
என் வீடு சேர
நான் செய்த யோகம்
வேறென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால்
கொள்ளை இன்பம்

பெண் : தெய்வங்கள் கண் பார்த்தது…ஊ….
தோட்டத்தில் பூப் பூத்தது
பூ ஒன்று சேய் ஆனது…..ஊ…
பெண் ஒன்று தாய் ஆனது

பெண் : ஈரைந்து மாதம்
தாய் கொண்ட பாரம்
தாலாட்டத் தானே
கை வந்து சேரும்
வேறென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால்
கொள்ளை இன்பம்

பெண் : தெய்வங்கள் கண் பார்த்தது
தோட்டத்தில் பூப் பூத்தது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here