Singer : Malaysia Vasudevan

Music by : Raveendran

Male : Dhesathin theeraadha
Avamaana chinnangalae
Chorus : Avamaana chinnangalae

Male : Thirundhaamal irukkindra
Adhigaara vargangalae
Chorus : Adhigaara vargangalae

Male : Vellai kodi ratha niramaanadhu
Ullangalae yutha kalamaanadhu
Boogambam ippodhu
Aarambam paarungalae…ae

Male : Dhesathin theeraadha
Avamaana chinnangalae
Chorus : Avamaana chinnangalae

Male : Thirundhaamal irukkindra
Adhigaara vargangalae
Chorus : Adhigaara vargangalae

Chorus : Haa…aaa…aaa…aaa…(3)

Male : Kelvikku vidai illaiyaa

Male : Kelvikku vidai illaiyaa
Engal iravukku vidivillaiyaa
Kanneeril andraadam
Ulai vaikkirom
Ingu gandhikku edharkkaaga
Silai vaikkirom
Veettukku veedingu
Sedi vaikkirom
Ezhai vargangal valaraamal
Vedi vaikkirom

Male : Palar vaada silar vaazha
Iru vargam illaadha
Sama dharma poo pookkumaa
Kaalam varum nalla neram varum
Ezhaigalin vaazhvil velicham varum

Male : Dhesathin theeraadha
Avamaana chinnangalae
Chorus : Avamaana chinnangalae

Male : Thirundhaamal irukkindra
Adhigaara vargangalae
Chorus : Adhigaara vargangalae

Chorus : Haa…aaa…aaa…aaa…
Haaa…aaa…aaa…
Haa…aaa…aaa…aaa…
Haaa…aaa…aaa…

Male : Oorgolam pogindradhu
Ingu oru ullam vegindradhu
Idhayathil thaangaadha
Adi veezhndhadhu
Indha ilam poovin thalai meedhu
Idi veezhndhadhu

Male : Kadamaigal inneram
Kannaanadhu
Nenjam kanneerai sindhaamal
Kallaanadhu
Maakaali thirisooli
Aram kaakkum karumaari

Male : Maakaali thirisooli
Aram kaakkum karumaari
Ivalum andha avadhaaramo
Nyaayangalai annai nilai naattuvaal
Netri kannaal engum anal moottuvaal

Male : Dhesathin theeraadha
Avamaana chinnangalae
Chorus : Avamaana chinnangalae

Male : Thirundhaamal irukkindra
Adhigaara vargangalae
Chorus : Adhigaara vargangalae

Chorus : Haa…aaa…aaa…aaa…(3)

Male : Saavukku yaar kaaranam

Male : Indha saavukku yaar kaaranam
Naalai samudhaayam badhil kooranum
Vaazhvukku poraadum thozhilaaligal
Indha vargathil sila pergal karungaaligal

Male : Kodhikkindra neruppaagum
Vervai thuli
Sengodi yendhum paattaali
Thoongum puli
Vaarungal ellorum
Vaazhndhaalum veezhndhaalum
Irudhi varai poraaduvom
Thozhil koodamaa illai bali peedamaa
Mudhalaaliyaa illai kolaiyaaliyaa

Male : Dhesathin theeraadha
Avamaana chinnangalae
Chorus : Avamaana chinnangalae

Male : Thirundhaamal irukkindra
Adhigaara vargangalae
Chorus : Adhigaara vargangalae

Male : Vellai kodi ratha niramaanadhu
Ullangalae yutha kalamaanadhu
Boogambam ippodhu aarambam paarungalae…

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ரவீந்திரன்

ஆண் : தேசத்தின் தீராத
அவமானச் சின்னங்களே
குழு : அவமானச் சின்னங்களே

ஆண் : திருந்தாமல் இருக்கின்ற
அதிகார வர்க்கங்களே
குழு : அதிகார வர்க்கங்களே

ஆண் : வெள்ளைக் கொடி ரத்த நிறமானது
உள்ளங்களே யுத்தக் களமானது
பூகம்பம் இப்போது
ஆரம்பம் பாருங்களே….ஏ…..

ஆண் : தேசத்தின் தீராத
அவமானச் சின்னங்களே
குழு : அவமானச் சின்னங்களே

ஆண் : திருந்தாமல் இருக்கின்ற
அதிகார வர்க்கங்களே
குழு : அதிகார வர்க்கங்களே

குழு : ஹா….ஆஅ….ஆஅ…..ஆஅ….(3)

ஆண் : கேள்விக்கு விடை இல்லையா

ஆண் : கேள்விக்கு விடை இல்லையா
எங்கள் இரவுக்கு விடிவில்லையா
கண்ணீரில் அன்றாடம்
உலை வைக்கிறோம்
இங்கு காந்திக்கு எதற்காக
சிலை வைக்கிறோம்
வீட்டுக்கு வீடிங்கு
செடி வைக்கிறோம்
ஏழை வர்க்கங்கள் வளராமல்
வெடி வைக்கிறோம்

ஆண் : பலர் வாட சிலர் வாழ
இரு வர்க்கம் இல்லாத
சமதர்ம பூ பூக்குமா
காலம் வரும் நல்ல நேரம் வரும்
ஏழைகளின் வாழ்வில் வெளிச்சம் வரும்

ஆண் : தேசத்தின் தீராத
அவமானச் சின்னங்களே
குழு : அவமானச் சின்னங்களே

ஆண் : திருந்தாமல் இருக்கின்ற
அதிகார வர்க்கங்களே
குழு : அதிகார வர்க்கங்களே

குழு : ஹா….ஆஅ….ஆஅ…..ஆஅ….
ஹா….ஆஅ…..ஆஅ….
ஹா….ஆஅ….ஆஅ…..ஆஅ….
ஹா….ஆஅ…..ஆஅ….

ஆண் : ஊர்கோலம் போகின்றது
இங்கு ஒரு உள்ளம் வேகின்றது
இதயத்தில் தாங்காத
அடி வீழ்ந்தது
இந்த இளம் பூவின் தலை மீது
இடி வீழ்ந்தது

ஆண் : கடமைகள் இந்நேரம்
கண்ணானது
நெஞ்சம் கண்ணீரை சிந்தாமல்
கல்லானது
மாகாளி திரிசூலி
அறம் காக்கும் கருமாரி

ஆண் : மாகாளி திரிசூலி
அறம் காக்கும் கருமாரி
இவளும் அந்த அவதாரமோ
நியாயங்களை அன்னை நிலை நாட்டுவாள்
நெற்றிக் கண்ணால் எங்கும் அனல் மூட்டுவாள்

ஆண் : தேசத்தின் தீராத
அவமானச் சின்னங்களே
குழு : அவமானச் சின்னங்களே

ஆண் : திருந்தாமல் இருக்கின்ற
அதிகார வர்க்கங்களே
குழு : அதிகார வர்க்கங்களே

ஆண் : வெள்ளைக் கொடி ரத்த நிறமானது
உள்ளங்களே யுத்தக் களமானது
பூகம்பம் இப்போது
ஆரம்பம் பாருங்களே….ஏ…..

குழு : ஹா….ஆஅ….ஆஅ…..ஆஅ….(3)

ஆண் : சாவுக்கு யார் காரணம்

ஆண் : இந்த சாவுக்கு யார் காரணம்
நாளை சமுதாயம் பதில் கூறணும்
வாழ்வுக்குப் போராடும் தொழிலாளிகள்
இந்த வர்க்கத்தில் சில பேர்கள் கருங்காலிகள்

ஆண் : கொதிக்கின்ற நெருப்பாகும்
வேர்வைத் துளி
செங்கொடி ஏந்தும் பாட்டாளி
தூங்கும் புலி
வாருங்கள் எல்லோரும்
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
இறுதி வரை போராடுவோம்
தொழில் கூடமா இல்லை பலி பீடமா
முதலாளியா இல்லை கொலையாளியா

ஆண் : தேசத்தின் தீராத
அவமானச் சின்னங்களே
குழு : அவமானச் சின்னங்களே

ஆண் : திருந்தாமல் இருக்கின்ற
அதிகார வர்க்கங்களே
குழு : அதிகார வர்க்கங்களே

ஆண் : வெள்ளைக் கொடி ரத்த நிறமானது
உள்ளங்களே யுத்தக் களமானது
பூகம்பம் இப்போது
ஆரம்பம் பாருங்களே….ஏ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here