Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Pulamaipithan

Male : Deva malligai poovey poove
Thaenil ooridum theeve
Female : Poovil aadidum kaattrae kaattae
Sinthu senthamizh pattae

Male : Nee kadhal chiththirama
En kannin soppanamaa
Female : Idhu moga manthiramaa
Enai yaeikkum thanthiramaa
Male : Adi maanae maanae aasai thaenae vaa
En vizhigalin vazhiyae

Female : Poovil aadidum kaattrae kaattae
Sinthu senthamizh pattae
Male : Deva malligai poovey poove
Thaenil ooridum theeve

Male : Thendral oru puram minnal oru puram
Pennil therigirathae
Female : Thingal orupuram veyyil oru puram
Kannil varugirathae

Male : Allum pru puram thullum oru puram
Inbam vazhigirathae
Female : Achcham oru puram vetkkam oru puram
Nenjil ezhugirathae

Male : Aadaikkatti aada vantha vaanavillae
Aasai ennum maalai katti vaadi ingae
Female : Kadhal ennum naadagaththin medai ingae
Kaana vantha inbam ennum kaatchi engae

Male : Ini naanum neeyum naalum kooda
Adi maanae maanae aasai thaenae vaa
En vizhigalin vazhiyae

Female : Poovil aadidum kaattrae kaattae
Sinthu senthamizh pattae
Male : Deva malligai poovey poove
Thaenil ooridum theeve

Female : Idhu moga manthiramaa
Enai yaeikkum thanthiramaa
Male : Nee kadhal chiththiramaa
En kannin soppanamaa
Female : Immaanin maanin aasai thaenae vaa
En vizhigalin vazhiyae

Female : Allikkoduththathao solli kodu
Ena annakkili varumae
Male : Anthi kathaiyithu sinthaikkiniyathu
Aasai pani varumae

Female : Ettippidi enai kattippidi ena
Anjum idai varumae
Male : Endrum pudhusugam pongum vazhiyena
Konjum kili varumae

Female : Kaaman ambai
Kannirendil poottukindraai
Kadhal ennum theeyai
Nenjil moottukindraai

Male : Vaadai thannil
Neeyum ennai vaattukkindraai
Vaalipaththin aasai thanni meettugindraai

Female : En raja soodum roja poovo
Immaanin maanin aasai thaenae vaa
En vizhigalin vazhiyae

Male : Deva malligai poovey poove
Thaenil ooridum theeve
Female : Poovil aadidum kaattrae kaattae
Sinthu senthamizh pattae

Male : Nee kadhal chiththirama
En kannin soppanamaa
Female : Idhu moga manthiramaa
Enai yaeikkum thanthiramaa
Male : Adi maanae maanae aasai thaenae vaa
En vizhigalin vazhiyae

Female : Poovil aadidum kaattrae kaattae
Sinthu senthamizh pattae
Male : Deva malligai poovey poove
Thaenil ooridum theeve

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே
பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே

ஆண் : நீ காதல் சித்திரமா என்
கண்ணின் சொப்பனமா
பெண் : இது மோக மந்திரமா
எனை ஏய்க்கும் தந்திரமா
ஆண் : அடி மானே மானே ஆசை தேனே
வா என் விழிகளின் வழியே

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே
ஆண் : தேவமல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே

ஆண் : தென்றல் ஒரு புறம் மின்னல் ஒரு புறம்
பெண்ணில் தெரிகிறதே
பெண் : திங்கள் ஒருபுறம் வெய்யில் ஒரு புறம்
கண்ணில் வருகிறதே

ஆண் : அள்ளும் ஒரு புறம் துள்ளும் ஒரு புறம்
இன்பம் வழிகிறதே
பெண் : அச்சம் ஒரு புறம் வெட்கம் ஒரு புறம்
நெஞ்சில் எழுகிறதே

ஆண் : ஆடைக்கட்டி ஆட வந்த வானவில்லே
ஆசை என்னும் மாலை கட்டி வாடி இங்கே
பெண் : காதல் என்னும் நாடகத்தின் மேடை இங்கே
காண வந்த இன்பம் என்னும் காட்சி எங்கே

ஆண் : இனி நானும் நீயும் நாளும் கூட
அடி மானே மானே ஆசை தேனே வா
என் விழிகளின் வழியே

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே
ஆண் : தேவமல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே

பெண் : இது மோக மந்திரமா
எனை ஏய்க்கும் தந்திரமா
ஆண் : நீ காதல் சித்திரமா என்
கண்ணின் சொப்பனமா
பெண் : இம்மானின் மானின் ஆசை தேனே
வா என் விழிகளின் வழியே

பெண் : அள்ளிக் கொடுத்ததை சொல்லிக் கொடு
என அன்னக்கிளி வருமே
ஆண் : அந்திக் கதையிது சிந்தைக்கினியது
ஆசை பனி வருமே

பெண் : எட்டிப்பிடி எனைக் கட்டிப்பிடி என
அஞ்சும் இடை வருமே
ஆண் : என்றும் புதுசுகம் பொங்கும் வழியென
கொஞ்சம் கிளி வருமே

பெண் : காமன் அம்பை
கண்ணிரெண்டில் பூட்டுகின்றாய்
காதல் என்னும் தீயை
நெஞ்சில் மூட்டுகின்றாய்

ஆண் : வாடை தன்னில்
நீயும் என்னை வாட்டுகின்றாய்
வாலிபத்தின் ஆசை தன்னை மீட்டுகின்றாய்

பெண் : என் ராஜா சூடும் ரோஜா பூவோ
இம்மானின் மானின் ஆசை தேனே வா
என் விழிகளின் வழியே…..

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே
பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே

ஆண் : நீ காதல் சித்திரமா என்
கண்ணின் சொப்பனமா
பெண் : இது மோக மந்திரமா
எனை ஏய்க்கும் தந்திரமா
ஆண் : அடி மானே மானே ஆசை தேனே
வா என் விழிகளின் வழியே

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே
ஆண் : தேவமல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here