Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Deviyaval maangalyam
Thirudi manamudiththaen
Deiva thirumagalin
Karpinaiyae naan koduththaen

Male : Kovilaiyum yaemattri
Kulamagalai yaemaattri
Paavam naan seithatharkku
Pazhi theerththaal deviyammaa

Male : Paavaththil vilai thannai
Pettruk kondaen
Nalla paadaththai enakkullae
Kattrukkondaen

Male : Deivaththai ariyaamal
Pagaiththu kondaen
Manam thirunthi vittaen
Ammaa varunthi vittaen

Male : Deivaththai ariyaamal
Pagaiththu kondaen
Manam thirunthi vittaen
Ammaa varunthi vittaen

Male : Paavaththin vilai thannai
Pettrukkondaen
Nalla paadaththai enakkullae
Kattru kondaen

Male : Thaalikkaiyiru ennai sudugindrathu
Antha thavaru en aayul varai varugindrathu
Thaalikkaiyiru ennai sudugindrathu
Antha thavaru en aayul varai varugindrathu

Male : Pothum naan seitha kuttram purigindrathu
Aavi poe aval kaalgalil vizhugindrathu
Pothum naan seitha kuttram purigindrathu
Aavi poe aval kaalgalil vizhugindrathu
Amma….devi….amma….devi….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தேவியவள் மாங்கல்யம்
திருடி மணமுடித்தேன்
தெய்வத் திருமகளின்
கற்பினையே நான் கொடுத்தேன்

ஆண் : கோவிலையும் ஏமாற்றி
குல மகளை ஏமாற்றி
பாவம் நான் செய்ததற்கு
பழித் தீர்த்தாள் தேவியம்மா

ஆண் : பாவத்தின் விலை தன்னை
பெற்றுக் கொண்டேன்
நல்ல பாடத்தை எனக்குள்ளே
கற்றுக் கொண்டேன்

ஆண் : தெய்வத்தை அறியாமல்
பகைத்துக் கொண்டேன்
மனம் திருந்தி விட்டேன்
அம்மா வருந்தி விட்டேன்

ஆண் : தெய்வத்தை அறியாமல்
பகைத்துக் கொண்டேன்
மனம் திருந்தி விட்டேன்
அம்மா வருந்தி விட்டேன்

ஆண் : பாவத்தின் விலை தன்னை
பெற்றுக் கொண்டேன்
நல்ல பாடத்தை எனக்குள்ளே
கற்றுக் கொண்டேன்

ஆண் : தாலிக்கயிறு என்னை சுடுகின்றது
அந்த தவறு என் ஆயுள் வரை வருகின்றது
தாலிக்கயிறு என்னை சுடுகின்றது
அந்த தவறு என் ஆயுள் வரை வருகின்றது

ஆண் : போதும் நான் செய்த குற்றம் புரிகின்றது
ஆவி போய் அவள் கால்களில் விழுகின்றது
போதும் நான் செய்த குற்றம் புரிகின்றது
ஆவி போய் அவள் கால்களில் விழுகின்றது
அம்மா…..தேவி…..அம்மா…….தேவி…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here