Singer : S. P. Balasubramanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Chorus : Om…om….om….om….om…om….om….

Male : Deviyin kaaladi thiruppaatham vilaiyaada
Dhisaigalil iru naangu ulagamum vadivaaga
Deviyin kann konam thiranthaada asainthaada
Thigazhnthidum kadhiravanin oliyangu uruvaaga

Male : Deviyin marukannil thelivaanaoli thondra
Thaeipirai valar piraiyil venmathi nilaiyaaga
Kaarkuzhal nalinangal kalakala endraada
Kaarmugil koottangal vaanengum nirainthoda

Male : Ganam thorum aval moochchu maarbinai thaalaatta
Kaattrinil uyir moochchu piranthathu sugamaaga
Sakthiyin kundalangal thagathimi endraada
Thangu kadal nadhigal malaigal ezhunthaadaa

Male : Oru kai asaiya uyirinam valara
Marugai asaiya manithargal pirakka
Chorus : Om….om….om….

Male : Aavi valarppathu devi tharisanam
Paavam thavirppathu devi tharisanam
Kaaval koduppathu devi tharisanam
Kaalaththai velvathu devi tharisanam
Devi tharisanam devi tharisanam devi tharisanam…..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : ஓம்……ஓம்…..ஓம்….ஓம்…ஓம்….ஓம்…ஓம்..

ஆண் : தேவியின் காலடி திருப்பாதம் விளையாட
திசைகளில் இரு நான்கு உலகமும் வடிவாக
தேவியின் கண் கொஞ்சம் திறந்தாட அசைந்தாட
திகழ்ந்திடும் கதிரவனின் ஒளியங்கு உருவாக….

ஆண் : தேவியின் மறுகண்ணில் தெளிவான ஒளி தோன்ற
தேய்பிறை வளர் பிறையில் வெண்மதி நிலையாக
கார்குழல் நளினங்கள் கலகல என்றாட
கார்முகில் கூட்டங்கள் வானெங்கும் நிறைந்தோட….

ஆண் : கணம் தோறும் அவள் மூச்சு மார்பினைத் தாலாட்ட
காற்றினில் உயிர் மூச்சு பிறந்தது சுகமாக
சக்தியின் குண்டலங்கள் தகதிமி என்றாட
தங்கு கடல் நதிகள் மலைகள் எழுந்தாட…..

ஆண் : ஒரு கை அசைய உயிரினம் வளர
மறுகை அசைய மனிதர்கள் பிறக்க
குழு : ஓம்…ஓம்….ஓம்..

ஆண் : ஆவி வளர்ப்பது தேவி தரிசனம்
பாவம் தவிர்ப்பது தேவி தரிசனம்
காவல் கொடுப்பது தேவி தரிசனம்
காலத்தை வெல்வது தேவி தரிசனம்
தேவி சரணம் தேவி தரிசனம் தேவி சரணம்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here