Singer : S. P. Balasubrahmanyam

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Dharma thulaapaaram idhu dharma thulaapaaram
Dharma thulaapaaram idhu dharma thulaapaaram

Male : Kangalillaa niyaayangal saatchiyillaa dharmangal
Ondrai ondru modhi kollum
Needhi enna needhi idhu neetdhiyillaa needhi

Male : Dharma thulaapaaram idhu dharma thulaapaaram

Male : Saatchiyodu seivathuthaan niyaayamaana kuttram
Niyaaya devan kaigalilae neendathoru sattam
Thandanaiyai ketkkumpothu kuttravaali kalakkam
Thandanaikku pinpuraththil needhi devan mayakkam
Needhi devan mayakkam

Male : Adhigaara suvar ezhuppi aniyaaya kadai nadaththi
Mudhalillaa vaanipaththil mundhi nirkkiraar
Dharma devar peyaralae droupathiyai thuyiluriyum
Soodhaattangal endrum poraattangal

Male : Dharma thulaapaaram idhu dharma thulaapaaram

Male : Saththiyaththai kondra pinbu sathiraaduthu kaalam
Sattamendra peyarinilae thittamitta viyaapaaram
Manithan sollum saatchiyellaam
Ooththedukkum niyaayangal
Manasaatchi enbathuthaan needhidevan aalayam

Male : Aalayaththu munnilaiyil
Aandavanin sannathiyil
Aththanaikkum theerpalikkum saththiyasothanai
Niraparaathi viduthalaiyum kuttravaali thandanaiyum
Dharma saathanai athu saththiya dharamam miga uththma dharmam

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்
தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்

ஆண் : கண்களில்லா நியாயங்கள் சாட்சியில்லா தர்மங்கள்
ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளும்
நீதி என்ன நீதி இது நீதியில்லா நீதி

ஆண் : தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்

ஆண் : சாட்சியோடு செய்வதுதான் நியாயமான குற்றம்
நியாய தேவன் கைகளிலே நீண்டதொரு சட்டம்
தண்டனையைக் கேட்கும்போது குற்றவாளி கலக்கம்
தண்டனைக்குப் பின்புறத்தில் நீதி தேவன் மயக்கம்
நீதி தேவன் மயக்கம்

ஆண் : அதிகார சுவரெழுப்பி அநியாய கடை நடத்தி
முதலில்லா வாணிபத்தில் முந்தி நிற்கிறார்
தர்மதேவர் பெயராலே த்ரௌபதியை துயிலுரியும்
சூதாட்டங்கள் என்றும் போராட்டங்கள்

ஆண் : தர்ம துலாபாரம் இது தர்ம துலாபாரம்

ஆண் : சத்தியத்தைக் கொன்ற பின்பு சதிராடுது காலம்
சட்டமென்ற பெயரினிலே திட்டமிட்ட வியாபாரம்
மனிதன் சொல்லும் சாட்சியெல்லாம்
ஊத்தெடுக்கும் நியாயங்கள்
மனசாட்சி என்பதுதான் நீதிதேவன் ஆலயம்

ஆண் : ஆலயத்து முன்னிலையில்
ஆண்டவனின் சன்னதியில்
அத்தனைக்கும் தீர்ப்பளிக்கும் சத்தியசோதனை
நிரபராதி விடுதலையும் குற்றவாளி தண்டனையும்
தர்ம சாதனை அது சத்திய தர்மம் மிக உத்தம தர்மம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here