Singer : M. L. Vasanthakumari

Music by : C. N. Pandurangan

Female : Dheenadhayaapari thaayae
Dheenadhayaapari thaayae
Ambaa thiruvaagum uruvae
Nee arulvaai dhevi
Dheenadhayaapari thaayae

Female : Maanilamadhil neeyae gadhi …ee…ee…
Maanilamadhil neeyae gadhi enakkindha
Maanilamadhil neeyae gadhi enakkindha
Vagaiyaedhum ariyen kan paaraai thaayae

Female : Podhum enadhu thuyar podhum
Naan sagiyen
Puviyil arulvaai sugamae
Podhum enadhu thuyar podhum
Naan sagiyen
Puviyil arulvaai sugamae

Female : Theeraadha thuyaraaginen
Nenjil theeraadha thuyaraaginen
Thuyar theerppaaiyo jagan nayagi
Nenjil theeraadha thuyaraaginen

Female : Igameedhu vinaiyae or uruvaaginen
Yaaridam solven naan
Enadhu mana vedhanai
Yaaridam solven naan
Enadhu mana vedhanai
Aadhari anbudan annaiyae arulpuri
Theeraadha thuyaraaginen

Female : Kannillaa kuzhandhaiyaal
Kalangugindrenae
Kannillaa kuzhandhaiyaal
Kalangugindrenae
Kaappadhuvum unadhu
Kadamai endrenae
Kaappadhuvum unadhu
Kadamai endrenae
Ennillaa vedhanai enakkini yeno
Ellaam un seyal endrunarndhenae
Ellaam un seyal endrunarndhenae

Female : Maa madhimuga vilaasa
Tharuni adhi vinodha mogini
Maa madhimuga vilaasa
Tharuni adhi vinodha mogini
Vaazhvil inbamaai vaazhndhida seidharul
Vanidhaiyaana unaiyallaadhu verae
Thunaiyumaedhu inaiyumaedhu
Thiripura sundhari sudhandhari bairavi
Thaayae gadhi neeyae

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

ஆண் : தீனதயாபரி தாயே
தீனதயாபரி தாயே
அம்பா திருவாகும் உருவே
நீ அருள்வாய் தேவி
தீனதயாபரி தாயே

பெண் : மாநிலமதில் நீயே கதி…..ஈ……ஈ…..
மாநிலமதில் நீயே கதி எனக்கிந்த
மாநிலமதில் நீயே கதி எனக்கிந்த
வகையேதும் அறியேன் கண் பாராய் தாயே

பெண் : போதும் எனது துயர் போதும்
நான் சகியேன்
புவியில் அருள்வாய் சுகமே
போதும் எனது துயர் போதும்
நான் சகியேன்
புவியில் அருள்வாய் சுகமே

பெண் : தீராத துயராகினேன்
நெஞ்சில் தீராத துயராகினேன்
துயர் தீர்ப்பாயோ ஐகன் நாயகி
நெஞ்சில் தீராத துயராகினேன்

பெண் : இகமீது வினையே ஓர் உருவாகினேன்
யாரிடம் சொல்வேன் நான்
எனது மன வேதனை
யாரிடம் சொல்வேன் நான்
எனது மன வேதனை
ஆதரி அன்புடன் அன்னையே அருள்புரி
தீராத துயராகினேன்

பெண் : கண்ணில்லா குழந்தையால்
கலங்குகின்றேனே
கண்ணில்லா குழந்தையால்
கலங்குகின்றேனே
காப்பதுவும் உனது
கடமை என்றேனே
காப்பதுவும் உனது
கடமை என்றேனே
எண்ணில்லா வேதனை எனக்கினி ஏனோ
எல்லாம் உன் செயல் என்றுணர்ந்தேனே
எல்லாம் உன் செயல் என்றுணர்ந்தேனே

பெண் : மா மதிமுக விலாச
தருனி அதி விநோத மோகினி
மா மதிமுக விலாச
தருனி அதி விநோத மோகினி
வாழ்வில் இன்பமாய் வாழ்ந்திட செய்தருள்
வனிதையான உனையல்லாது வேறே
துணையுமேது இணையுமேது
திரிபுர சுந்தரி சுதந்தரி பைரவி
தாயே கதி நீயே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here